உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 மாதம் சொன்னாங்க... 33 மாதம் ஆச்சு... இன்னும் தீரல ஆசிரியர் சம்பள முரண்பாடு

3 மாதம் சொன்னாங்க... 33 மாதம் ஆச்சு... இன்னும் தீரல ஆசிரியர் சம்பள முரண்பாடு

மதுரை: தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 15 ஆண்டுகளாக நிலவும் சம்பள முரண்பாடு பிரச்னையை 3 மாதங்களில் தீர்க்க குழு அமைக்கப்பட்டு 33 மாதங்கள் கடந்தும் முடிவில்லாததால் அதிருப்தியான ஆசிரியர்கள் அடுத்தமாதம் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளனர். இத்துறையில் ஒரே கல்வித்தகுதி, ஒரே பதவிக்கு 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் 8,370 ரூபாய் எனவும், ஜூன் 1க்கு பின் நியமனமானவர்களுக்கு 5,200 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இது 'சம வேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாடு எனக் கூறி பாதிக்கப்பட்ட 20,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் இதுதொடர்பாக நடந்த ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தீர்க்கப்படும் என உறுதியளித்தார். 'இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு களையப்படும்' என 2021 தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தீர்வு இல்லை. 2022ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதன்பின், 2023 ஜன.,1ல் இப்பிரச்னையை தீர்க்க மூன்று நபர் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் - எஸ்.எஸ்.டி.ஏ., மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது: நாங்கள் கேட்பது மத்திய அரசுக்கு இணையான சம்பளம்கூட அல்ல. ஒரே கல்வித் தகுதிக்கு ஏற்ற சம்பளம் தான். தற்போது 20,000 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம். இது நாட்டில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை. முரண்பாட்டை தீர்க்க தமிழக அரசு குழு அமைத்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மாணவர் கல்வி பாதிக்காமல் விடுமுறை நாட்களில் மட்டுமே இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.இதுபோல் செப்டம்பரில் பருவத் தேர்வையடுத்து பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2025 13:40

விடியல் பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல .....


Kumar Kumzi
ஆக 21, 2025 08:26

அட போங்கய்யா ப்பீஸ்களுக்கு இருநூறு ஓவாவுக்கு மேல ஏத்தமாட்டானுங்க இருந்தாலும் இங்க வந்து மொரட்டுத்தனமா முட்டு குடுப்பானுங்க


Padmasridharan
ஆக 21, 2025 07:39

சம சம்பளம் வழங்க வேண்டுமென்று போராடுபவர்கள் சம வேலைகளை செய்கிறார்களா சாமி. இவர்களுள் லஞ்சப்பணம் கொடுக்கமால் / ரெகமன்டேஷன் இல்லாமல் நேர்மையாக வேலை வாங்கியவர்கள் எத்தனை பேர். அவர்களுக்கே தெரியும். ஆசிரியர் பயிற்சிக்கு செல்பவர்கள் எப்படி படிக்கின்றனர், மற்ற ஆசிரியர்கள் இவர்களை எப்படி நடத்துகின்றனர் என்று அவரவர் மனசாட்சியே அறியும். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம எத்தனை பேர் இந்த ஆசிரியர் பணியை செய்யறாங்கன்னும் அவர்களுக்கே வெளிச்சம். Employment office லையும் ஊழல் செய்பவர்களின் மூலமாக நுழைந்தவர்கள் எத்தனை பேரென்றும் அவர்களே அறிவார்கள். Tuition வெச்சி பிள்ளைகள் படிக்கறாங்கன்னா அந்த ஆசிரியர் சரியானவர் இல்லையென்றுதான் அர்த்தம்


Svs Yaadum oore
ஆக 21, 2025 07:23

இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு களையப்படும் என 2021 தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்ததாம் .....இவனுங்க எத்தனை பேருக்கு எத்தனை தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தானுங்க ??... .அதையும் உண்மை என்று நம்பி வோட்டு போட்ட அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டம் ....இந்த ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பார்கள்?? ...இன்னும் பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் வாக்குறுதி வேற பாக்கி உள்ளது ...


Amar Akbar Antony
ஆக 21, 2025 06:52

மனிதத்தன்மையில்லாத ஒரு தொழில் என்றால் அது தனியார்ப்பள்ளி ஆசிரியற்தொழில் தான். இவர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படுவதில்லை. சமூகத்தில் சமநிலை என்பதே கிடையாது. அது அரசியல் கட்சிகளாக பா ஜ க தவிர்த்து இருக்கட்டும் அல்லது அரசுப்பணிகளாகட்டும். இப்போ இந்த முரண்பாடே உங்கள் தலைவர் முரண்பாடு கட்சி ஸ்டாலின் கொண்டுவந்து எண்ணெய் ஊற்றினார். முரண்பாட்டை தீர்ப்பேன் என்றார் நம்பினீர்கள். தீர்ப்பேன் என்பார் நம்புகிறீர்கள் நம்புவீர்கள். அரசுப்பணியிலிருக்கும் அரசூழியர்களே உங்கள் இலஞ்சப்பனி சிறக்கத்தானே ஊழல் ஊற்று தி .மு க வை ஆதரிக்கிறீர்கள். உங்களுக்கு ஆதரவு அளித்தால் அந்த ஆண்டவர் கூட மன்னிக்கமாட்டார்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 21, 2025 06:29

இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் படைத்தவன்மேல் பழியுமில்லை பசித்தவன்மேல் பாவமில்லை கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை-எம் ஜி ஆர் படத்தில் கவிஞர் வாலி


புதிய வீடியோ