உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு என்பர்: என்னிடம் இரண்டுமே இல்லை என்கிறார் சீமான்

கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு என்பர்: என்னிடம் இரண்டுமே இல்லை என்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: 'கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு (பணம்) வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஒரு தலைவன் என்பவன் இந்த மண்ணையும், இந்த மக்களையும் முழுமையாக நேசிக்க வேண்டும். நம்ப வேண்டும். நாங்கள் மக்களை முழுமையாக நம்புகிறோம். நேசிக்கிறோம். மக்களுக்காக மக்களோடு சேர்ந்து நிற்கிறோம்.ஆட்டத்தை பார்ப்பீர்கள்!கூட்டணி தேவையில்லை உயர்ந்த கொள்கையும், உயர்ந்த நோக்கமும் தான் தேவை. சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், பொறுத்திருந்து பாருங்க. என் ஆட்டம் எப்படி இருக்குன்னு, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எனது ஆட்டத்தை பார்ப்பீர்கள். 5வது முறையாக தனித்துப் போட்டியிடுவோம். அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாங்கள் அல்ல.நா.த.க.,வினர் வேறு கட்சிக்குப் போவதற்கு பதில் என் தம்பி (விஜய்) கட்சிக்குப் போகட்டும்; அவர் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்ற தைரியத்தில் சொல்கிறேன்.தத்துவம், நோக்கம்அண்ணனையே இந்த பாடு படுத்திவிட்டார்கள் என்று நினைத்து அவரும் உங்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டார். பா.ம.க., மாநாட்டிற்கு என்னை அழைத்தால் மேடையில் ஏறிப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.எனக்கு ஒரு தலைவன்; எனக்கு ஒரு தத்துவம்; எனக்கு ஒரு நோக்கம்; எனக்கு ஒரு கொள்கை; மொழி- இனத்தை முன்னிறுத்தும் அரசியல்; வேளாண்மையை முன்னிறுத்தும் தற்சார்பு பசுமை பொருளாதாரம் என இருக்கிறது. இந்த கோட்பாடுகள் சரியானவை என நினைத்து எங்களுடன் இணைந்து நிற்க வந்தால் யோசிப்போம்.சீட்டு,நோட்டுஅதுவும் இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து யாராவது கூட்டணிக்கு வந்தால் யோசிக்கலாம். ஆனால் யாரும் வரமாட்டார்கள். கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு (பணம்) வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை. ஆகையால் கூட்டணி குறித்து கேள்விகளை கேட்காமல் விட்டுவிடுங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தாமரை மலர்கிறது
ஏப் 21, 2025 22:49

திமுகவிடம் நோட்டு வங்கதானே, பிஜேபியிடம் சீட் வேண்டாம் என்கிறாய்.


thehindu
ஏப் 21, 2025 22:20

எதற்க்காக அரசியலுக்கு வந்தார் ?. தமிழை தமிழ் நாட்டை ஒருசிலர் அழிக்க முற்படுகிறார்கள் என்று கனவு வந்ததா ?


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 21:10

தனியா போட்டியிட்டன நாதக வேட்பாளர் திமுக அதிமுக ரெண்டு பார்ட்டிக்கிட்டேயும் காசு வாங்கிகிட்டு பிரச்சாரத்துக்கு போகாம வீட்லியே இருக்கலாம்


ராமகிருஷ்ணன்
ஏப் 21, 2025 21:03

நீ உன் கட்சிகாரர்களிடம் புடுங்கி திங்கிறதுலே கில்லாடி. வெளிநாட்டு தமிழர்கள் உன் தில்லாலங்கடிகளை புரிந்து கொண்டு பணம் அனுப்புவது நின்று விட்டது. மேலும் பாதி பேர் உன் கட்சியை விட்டு ஓடிப் போய் விட்டார்கள். தனித்து நின்று குறைந்த ஓட்டு வாங்கி அசிங்க பட வேண்டாம். மரியாதையா பி ஜே பி, அதிமுக கூட்டணியில் போயி ஓவரா பேசாம சீட் வாங்கி தேர்தலில் நில்லு. திமுகவிடம் விலை போகாதே.


SIVA
ஏப் 21, 2025 20:37

இருந்த மஹாலக்ஷ்மியை எல்லாம் பணத்தை விஜயலக்ஸ்மி கொடுத்து விட்டார் ....


Jayaraman Sekar
ஏப் 21, 2025 19:33

அட... இவர் என்ன இவ்வளவு அப்பாவியாக இருக்கார்??? இவர் கூட கூட்டணிக்கு யார் வருவாங்க??? ஆனா இவர் யாருடனாவது கூட்டணிக்கு போகறேன்னு சொல்லிப் பாக்கட்டும்... சீட்டும் நோட்டும் கொட்டோ கொட்டுன்னு கொட்டாதா????


Karmegam,Sathamangalam
ஏப் 21, 2025 19:09

வருகின்ற சட்டமன்ற தேர்தலோடு இந்த சைமனின் ஆட்டம் பாட்டம் எல்லாம் ஒடுங்கி விடும் தமிழக மக்கள் இவரை நிராகரித்து விடுவார்கள்.


R Dhasarathan
ஏப் 21, 2025 20:41

இல்லைங்க, ஒரு பகுதி மக்கள் யாரேனும் வருவார்களா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்...


ராஜாராம்,நத்தம்
ஏப் 21, 2025 19:06

தேர்தல் முடியிற வரைக்கும் இவரோட தொல்லைகளை சகிச்சிகிட்டுதான் இருக்கணும் வேற வழியில்லை.


தத்வமசி
ஏப் 21, 2025 19:00

காரு, பங்களா எல்லாம் எப்படி வந்தது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை