உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைகை மொழியில் வெளியாகிறது திருக்குறள் வீடியோ

சைகை மொழியில் வெளியாகிறது திருக்குறள் வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும், சைகை மொழியில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட உள்ளது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தும், ஆய்வு செய்தும், பரவலாக்கும் பணிகளை செய்து வருகிறது. இதன்படி, திருக்குறள் 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மேலும், பார்வையற்றோர் படிக்கும் வகையில், 41 செவ்வியல் நுால்களை, பிரெய்லி வடிவிலும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.இந்நிலையில், காதுகேளாதோரும், திருக்குறளை புரிந்துகொள்ளும் வகையில், திருக்குறளுக்கான முன்னுரை, குறள், விளக்கம் ஆகியவற்றிற்கு, குரல் வழி உச்சரிப்புக்கு ஏற்ப, சைகை மொழியிலும், வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, விரைவில் வெளியிடப்படும் என, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை