உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்: வக்பு வாரியம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்: வக்பு வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சமரச தீர்வுக்கு தயார் என்று, உயர்நீதிமன்ற விசாரணையின்போது வக்பு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற ராம ரவிகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணிலும் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் கோவில் சார்பில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கோவில் செயல் அலுவலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையிலும், தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. இந்நிலையில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், அறநிலையத்துறை இணை கமிஷனர், தர்கா நிர்வாகம், தமிழக வக்ப் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன், இன்று (டிச.,16) 3வது நாளாக விசாரணைக்கு வந்தன. அப்போது கோவில் மற்றும் தர்கா தரப்பினர் வாதங்களை முன் வைத்தனர்.

வக்ப் வாரியம் வாதம்

வக்ப் வாரியம் தரப்பில் ஆஜரான வக்கீல் முபீன், ''தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தூண் அமைந்துள்ளது. கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்தூண் என எதுவும் குறிப்பிடப்பட வில்லை. இந்த விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்'' என்றார். ஓய்வு பெற்ற மூத்த நீதிபதியை இதற்கென நியமிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதம்

அரசு தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், '' மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் ராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். இப்பிரச்னையில் இந்தியா பற்றி எரிகிறது. தனி நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார்,'' என தெரிவித்தார். தனி நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் என்ற வாதத்திற்கு ராம ரவிக்குமார் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தனர். மதியம் விசாரணை தொடர்ந்தது.விசாரணையை தொடர்ந்து, நீதிபதிகள், 'தற்போதைய நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மேல்முறையீட்டு மனு மீது நாளையும் (டிச.,17) விசாரணை தொடரும். மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை' எனத் தெரிவித்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.தடை கிடையாதுதிருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,டிச.17 ல் காணொலியில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனு அடிப்படையில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இரு நீதிபதிகள் அமர்வு,' தடை விதிக்க வாய்ப்பில்லை. தனி நீதிபதியிடம் முறையிடலாம்,' என தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

rama adhavan
டிச 17, 2025 00:04

அரசு, அறநிலையத்துறை, தர்கா தரப்புகள் சொல்வது கன்னித்தீவு சிந்துபாத் கதை போல் உள்ளது. நமது மலையை, நமது கலாச்சாரத்தை காப்பதற்கு இவ்வளவு குட்டிக்கரணம் போட வேண்டிய நிலையில் நாம் உள்ளோமே, கஷ்டமாக உள்ளதே.


rama adhavan
டிச 16, 2025 23:58

தர்காவிற்கு இந்துக்களின் திருப்பரங்குன்ற மலையில் இடம் எப்படி எப்போது சொந்தமானது? இங்கு சமணர்கள் எந்த காலத்தில் தூண் கட்டிணார்கள்? துணின் காலத்தை தொல்லியல் துறை மூலம் கீழடி போல் கார்பன் டேட்டிங் முறையில் ஆராயலாமே? என்ன கஷ்டம்?


தத்வமசி
டிச 16, 2025 22:34

ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம். அதற்கு திராவிடம் துணை போகின்றது.


Varadarajan Nagarajan
டிச 16, 2025 19:20

தீபத்தூணில் கார்த்திகைத்தீபம் ஏற்றவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அதை செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு என்ற நடவடிக்கையும் உள்ளடக்கியது. இதில் தர்கா தரப்பு வாதியோ பிரதிவாதியோ கிடையாது. செயல் அலுவலர், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் போன்றோர்களின் நடவடிக்கையால் தர்கா தரப்பும் இப்பொழுது நீதிமன்ற விசாரணையில் சேர்ந்துகொண்டுள்ளது. முடிந்தவரை இந்த வழக்கு திசைதிருப்பப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.


RAMAKRISHNAN NATESAN
டிச 16, 2025 19:12

தூண் தர்காவுக்கு சொந்தம் ........ மலை உச்சியில் இருக்கும் தூண் தர்காவுக்கு தான் சொந்தம், நெல்லித் தோப்பு வழியில் தூணிற்கு செல்வது இஸ்லாமியர்களை பாதிக்கும் - மேல்முறையீட்டு மனு விசாரணையில் வக்பு தரப்பு வாதம் .....


rama adhavan
டிச 17, 2025 00:54

இந்து மக்களின் வாதம் என்ன?


naranam
டிச 16, 2025 19:06

வக்ஃ காரன்‌ இப்போ எங்கிருந்து வந்தான்? அவனுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? இவனுங்களையும் திமுகவையும் வளர விட்டு வளரவிட்டு தான் ஹிந்துக்கள் இவ்வளவு துன்பபடுகிறார்கள்.


visu
டிச 16, 2025 18:53

ஹிந்து அறநிலையத்துறை மட்டுமே கோவில் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு எதிரா வாதம் செய்ய இயலும் கோவிலுக்கு ஆதரவா தானே வாதிட வேண்டும்


சிட்டுக்குருவி
டிச 16, 2025 18:05

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது செயல் அலுவலர் என்பதாக தெரிகின்றது . முதலில் அவருக்கு மேல்முறையீடு செய்யும் தகுதி உள்ளதா என்று ஆராயப்படவில்லை . செயல் அலுவலர் என்பது வழிபாட்டு தளத்தின் சொத்துக்களை அறங்காவலர் அறிவுறுத்தலோடு பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே சட்டத்தில் வழிவகுக்கப்பட்டிருக்கின்றது .அதைமீறி வழிபாட்டுமுறைகளில் தலையிட ,அல்லது வழிநடத்த ,வழிநடத்துவதை தடுக்க எந்த ஒரு அதிகாரமும் ஆணையர் முதற்கொண்டு செயல் அலுவலர் வரை வழங்கப்படவில்லை என்பதை ஹிந்து மத மற்றும் தொண்டு நிறுவன சட்டம் 1959 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றது ,மேலும் ஒரு வழக்கில் தீர்ப்பக்கு எதிராக யார்வேண்டுமானாலும் மேல்முறையீட்டு மனு செய்யலாம் என்றால் அதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன .செயல் அலுவலர் அந்த நிபந்தனைகளையெல்லாம் கடைபிடிக்கவில்லை .அந்த நிபந்தனைகளுக்குட்பட்டவராகவும் இல்லை .அதனால் இந்த வழக்கு விசாரணைக்குகந்ததா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .


Modisha
டிச 16, 2025 18:03

என்ன சமரசம் ? . 2000 வருட கோவிலோடு வெறும் 500 வருட தர்கா சமரசம் பேச தயாராம் . கொடுமை .


அருண், சென்னை
டிச 16, 2025 17:46

யோகிஜி கொஞ்ச நாள் தமிழ்நாட்டின் முதலைமாச்சாராய் இருக்க வேண்டும்... இல்லை, அப்படி ஒரு குணம் உள்ளவர் இங்கு CMஅ வரணும்... திராவிடன் கொட்டத்தை அடக்கணும்...


புதிய வீடியோ