உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி

இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இது சந்தோஷமான தருணம். ரொம்ப பெருமையா நினைக்கிறேன் என அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சுதந்திர தினத்தையொட்டி, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். இது குறித்து நிருபர்களிடம் நாராயணன் கூறியதாவது: இது ஒரு நல்ல சந்தோஷமான தருணம். நாம் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.ஏனென்றால் அரசு பள்ளியில் படித்து, பர்தராக எம்.டெக், பிஎஸ்டி எல்லாம் ஐஐடி காரக்பூரில் படித்தேன். அங்கு சிறந்த மாணவர் விருது பெற்றேன். இந்த தருணத்தில் எனக்கு விருது வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.அதேபோல் எனக்கு 41 ஆண்டுகள் கழித்து, இந்திய விண்வெளித்துறை செயலாளராக என்னை பணியில் அமர்த்திய பிரதமர் மோடிக்கும் எனது நன்றியை இந்த தருணத்தில் சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். இந்த விருது தனிப்பட்டது அல்ல. 20 ஆயிரம் இஸ்ரோ ஊழியர்களுக்கானது.எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மனைவி, குழந்தைகள், எனது கிராமத்தினர் ஆதரவால் கிடைத்துள்ளது. ககன்யான் திட்டம் ரொம்ப நன்றாக போய் கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பரில் முதல்வாரம் முதல் வெர்ஷன் போகும். 2035ம் ஆண்டு விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Raj
ஆக 15, 2025 17:58

விருதை இவர் கையால் வாங்கியது விருதுக்கு சிறுமை.


ஆரூர் ரங்
ஆக 15, 2025 14:34

விருது வழங்கிய ஆள் விருது கொடுக்கவே தகுதியற்றவர். கலாம் என்றாலே கலகம் எனக் கூறி அவர் மீண்டும் ஜனாதிபதியாக ஆவதைத் தடுத்தவரது வாரிசு.


SUBBU,MADURAI
ஆக 15, 2025 14:51

கூலி படம் இனிக்குது, கூலி கொடுக்க கசக்குது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை