உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இப்படித்தான் செயல்படும்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இப்படித்தான் செயல்படும்!

சென்னை: குற்றங்களை தடுப்பதே முதல் முன்னுரிமை. ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி கூறி உள்ளார். அவரது பேட்டி; நேற்று முதல் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிவிட்டது. இன்று 70 படைகள் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இந்த படைகள் பணிகளை தொடங்கி உள்ளன.சென்னையில் ஒவ்வொரு துணை கமிஷனரிடமும் இரண்டு படைகள் இருக்கின்றன. ஆவடி, தாம்பரத்தில் நான்கு படைகள் இருக்கின்றன. இந்த படைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். மொத்தம் 270 படைகள் இயங்கும்.நாங்கள் தனித்துவமாக இயங்க சிறப்பு கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அதன் மூலமாகவும் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்படும். குற்றங்களை தடுப்பதே முதல் முன்னுரிமை. அதன் பின்னர் நடவடிக்கை. 100, 112, 1091 ஆகிய தொலைபேசி எண்கள் இப்போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக செயல்பாட்டில் இருக்கின்றன. 49 ட்ரோன்கள் வாங்க எங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதை வாங்கி விடுவோம். அனைவருக்கும் பயிற்சி அளிப்போம். எங்கெல்லாம் போக முடியாத நிலை நிலவுகிறதோ குறிப்பாக இரவு நேரங்களில் அங்கெல்லாம் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். மப்டியிலும் நாங்கள் கண்காணிப்போம். இவ்வாறு ஐஜி பவானீஸ்வரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishna
ஜூன் 10, 2026 22:06

CaseHungryCriminals Selfishly NEVER Punish VestedFalseComplainantGangs or CaseNewsVotePower Hungry DreadedSelfSaintConspiratorMAFIAs. Sack& HANG them for GenderBiasedly Misusing Laws Against People


Tamilan
ஜூன் 10, 2026 19:38

இப்படித்தான் எழுதவேண்டும் என்பதில்லை. எப்படி வேண்டுமானாலும் கதை கட்டுரைகள் எழுதிக்கொள்ளலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை