உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 27) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

தொழிலாளிக்கு 'ஆயுள்' நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரமோத் குட்டன், 25. இவர் கடந்த, 2020ல் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பலாத்காரம் செய்தார். கர்ப்பமான சிறுமிக்கு, 2021ல் பெண் குழந்தை இறந்து பிறந்தது.ஊட்டி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், பிரமோத் குட்டனை, 2021 ஜூனில் கைது செய்தனர். ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, பிரமோத் குட்டனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

காமுக தந்தை கைது

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் 43 வயது விவசாய கூலி தொழிலாளி. இவர் மே, 22 இரவு, 10:30 மணிக்கு தன், 17 வயது மகளை, தோட்டத்துக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். கரூர் மகளிர் போலீசார், விவசாய கூலி தொழிலாளியை போக்சோவில் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவையை சேர்ந்த அனுராவ் என்பவர் மகன் நிஷார் 36. இவர் ஒரு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததால், இவர் மீது கோவை மாநகர், அனைத்து மகளிர் (கிழக்கு) போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, கடந்த 7ம் தேதி கைது செய்து, நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினார். வடக்கு சரக போலீஸ் கமிஷனர் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், நிஷார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

போக்சோவில் வாலிபர் கைது

செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும், 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, கடந்தாண்டு கோடை விடுமுறையில், எண்ணுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ், 21, என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நரேஷ் ஆசைவார்த்தை கூறி பலமுறை, சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.கடந்த மாதம் கோடை விடுமுறைக்கு எண்ணுார் சென்றபோதும், பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், அம்பத்துார் மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நரேஷை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Karthik Masagounder
மே 28, 2025 16:25

இந்த எண்ணம் தான் இந்த மாதிரி குற்றம் செஞ்சவனுக்கும் இருந்திருக்கும் ... குறைந்த பட்சம் இது மற்றவர்களுக்கு ஒரு விழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ...


தமிழ் மைந்தன்
மே 28, 2025 10:16

கற்பனை பதிவுகளுக்கும் 200 உண்டா சார்


என்னத்த சொல்ல
மே 28, 2025 09:48

இதே தலைப்பை இந்தியா முழுதும் போட முடியுமா...


தமிழ் மைந்தன்
மே 28, 2025 10:18

போட்டாலும் தமிழக விடியலே முதலிடம்


Mario
மே 28, 2025 09:40

மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா போன்ற வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பா.ஜனதா பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தார். அது?


baala
மே 28, 2025 09:35

உலகத்திலேயே நடக்காத இந்த விஷயம் தமிழ்நாட்டில் மட்டுமே நடப்பது போல காட்டுகிறார்கள்


தமிழ் மைந்தன்
மே 28, 2025 10:17

உண்மைதான் ஆனால் எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியில் நடப்பது


Mario
மே 28, 2025 09:27

மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம், ஒரு மைனர் மல்யுத்த வீரரின் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை மூடிவிட்டது.


தமிழ் மைந்தன்
மே 28, 2025 09:01

இதற்கும் 200 உண்டா சார்


தமிழ் மைந்தன்
மே 28, 2025 08:58

குற்றவாளிகளை திட்டகூடாது என சொல்கிறீர்களா?


Raja k
மே 28, 2025 08:25

விடியா ஆட்சியின் அலங்கோலம், 2026 ல் தாமரை கூட்டணி வெற்றி பெற்றதும், தமிழகத்தில் ஒரு போக்சோ வழக்கு கூட பதிவாகாது, தாமரை ஆளும் வட இந்திய மாநிலங்களில் எப்படி ஒரு திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்கிறதோ, அதை போலவே தமிழகமும் அமைதி பூங்காவாக மாறும், தினமலருக்கும் இன்றைய போக்சோ, இன்றைய கொலை என்று தலைபிட்டு வன்மத்தோடக எழுத ஒரு செய்திகூட கிடைக்காது,


Arul. K
மே 28, 2025 08:19

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனிதன் மனதை கெடுக்கும் சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடப்பதை தவிர யாரும் செய்திதாள் படிப்பதில்லை. அப்படி படித்திருந்தால் தினம் எத்தனை பேர் தண்டனை பெறுகிறார்கள் என்ற பயம் இருந்திருக்கும்.


சமீபத்திய செய்தி