சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 19) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:சில்மிஷ ஆசிரியர் சிக்கினார்திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே விளாமரத்துப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் தாமரைச்செல்வன், 44. அவர், பள்ளி சிறுமியர் ஒரு சிலருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.பள்ளியில், 'குட் டச், பேட் டச்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக, சிறுமியர் சிலர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் கொடுத்த புகாரில், உடுமலை போலீசார், தாமரைச்செல்வனை போக்சோவில் கைது செய்தனர்.பெயின்டருக்கு '20 ஆண்டு'கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, 27; பெயின்டர். இவர், 2021ல் பணி நிமித்தமாக காணை வந்தபோது, அங்குள்ள, 16 வயது சிறுமியை காதலித்தார். சிறுமி கர்ப்பமானார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. புகாரில், விழுப்புரம் போலீசார், ஜெயமூர்த்தியை போக்சோவில் கைது செய்தனர். விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோதா, ஜெயமூர்த்திக்கு, 20 ஆண்டுகள் தண்டனை விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.சிறுமியை திருமணம் செய்தவர் கைதுதர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, கம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், 34. அவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். செல்வராஜ், பாலக்கோட்டிலுள்ள தன் அக்கா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.அப்போது, 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஜூலை, 15-ல் செல்வராஜ், சிறுமியை திருமணம் செய்து, அவருடன் குடும்பம் நடத்தினார். பெற்றோர் புகார் படி, பாலக்கோடு போலீசார், செல்வராஜை போக்சோவில் கைது செய்தனர்.கூலி தொழிலாளிக்கு '20 ஆண்டு'விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே, சு.கொல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 57; கூலி தொழிலாளி. இவர், அப்பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு, முகையூர் அரசு மருத்துவமனையில், 2021ல் ஆண் குழந்தை பிறந்தது.புகாரில் விழுப்புரம் போலீசார், கலியமூர்த்தியை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கில், நேற்று, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோதா, கலியமூர்த்திக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.