உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே, குடியிருப்பு இடத்துக்கு பட்டா வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம கள உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் வாணியம்குளம் சேர்ந்தவர், தனது குடியிருப்பு இடத்துக்கு பட்டா கேட்டு, கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டா வழங்க வேண்டுமானால், ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என, கிராம கள உதவியாளர் கல்லூர் மாங்குறுச்சி பகுதியைச் சேர்ந்த பசல், 39, கூறியுள்ளார்.லஞ்சம் கொடுத்து பட்டா வாங்க விரும்பாத புகார்தாரர், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறையின் அறிவுரையின்படி, அவர், நேற்று மாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று பசலிடம் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கினார்.லஞ்ச பணத்தை பெற்ற போது, டி.எஸ்.பி., ஷம்சுதீன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், அவரை கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட பசலை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கிராம உதவியாளர் ரூ.500 லஞ்சம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நதிக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் பட்டா மாறுதலுக்காக வெம்பக்கோட்டை தாலுகாவில் விண்ணப்பித்திருந்தார். பட்டா மாறுதல் குறித்து கேட்க அவர் நதிக்குடி கிராம நிர்வாக அலுவலகம் சென்றார்.அங்கு இருந்த கிராம உதவியாளர் முருகராஜ் ரூ. 2000 லஞ்சம் கேட்டு பின் ரூ. 500 வாங்கியதாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.வீடியோவில் கிராம உதவியாளர் ரூ. 2000 வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பணம் வாங்கப்படுகிறது,'' என்கிறார்.அதற்கு அந்த நபர்,''என்னிடம் தற்போது ரூ. 500 மட்டுமே உள்ளது,'' எனக்கூறி அதை கொடுக்க கிராம உதவியாளர் வாங்கி தன் சட்டை பையில் வைத்துக் கொள்கிறார். மீதி பணத்தை நாளை காலையில் வாங்கிக் கொள்கிறேன் எனக்கூறி விட்டு நடந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது.

ரூ.4,500 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ஜெயராமன், 40; விவசாயி. கடந்த, 24ம் தேதி வாரிசு சான்றிதழுக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்தார். நேற்று முன்தினம் சாலிவரம் வி.ஏ.ஓ., லட்சுமிகாந்தன், 52, என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க கேட்டுள்ளார்.அவர், 6,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரை செய்வதாக கூறியதால், 1,500 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 4,500 ரூபாயை, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த லட்சுமிகாந்தனிடம் நேற்று ஜெயராமன் வழங்கினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், லட்சுமிகாந்தனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

என்றும் இந்தியன்
ஜூன் 30, 2025 17:17

இதுக்குத்தான் நான் சொல்வது லஞ்சம் வாங்கினால் கோடியில் வாங்கவேண்டும் அதுவும் திமுக காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் அப்போது தான் கைது என்ற சத்தம் கூட வராது. வெறும் ரூ 1000, 2000 வாங்கினால் நிச்சயம் கைது சிறைத்தண்டனை எல்லாம் இருக்கும்.


V Venkatachalam
ஜூன் 29, 2025 19:18

தினமலருக்கு ஒரு சபாஷ். எப்புடி போக்ஸோ கேஸுங்களுக்கு தனி பத்தி ஒதுக்குன மாதிரி இதுக்கும் தனி பத்தி ஒதுக்கியாச்சு. இதனால் என்ன பிரயோஜனம். இதுக்கு ஒதுக்கும் பத்தியை விளம்பரத்துக்கு ஒதுக்கினால் தினமலருக்கு துட்டு கிடைக்கும். திருட்டு தீய முக ஆட்சியில் இருக்கும் வரை இந்த பத்தி நிரம்பி வழியும். நான்காண்டு நல்லாட்சி. அதற்கு இதுவே சாட்சி.


Yasararafath
ஜூன் 29, 2025 16:34

தமிழ்நாட்டில் மற்றும் சென்னையில் இவர்களை போல் பல கோடி பேர் இருக்கிறார்கள்.


Ravi Kumar
ஜூன் 29, 2025 13:41

வாங்கி மாட்டிகிட்டு இருக்குற இவர்களது சாதி பெயர் சேர்த்து போட்டால்...


chinnamanibalan
ஜூன் 29, 2025 13:09

தமிழக அரசுத் துறைகளில் லஞ்சம் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வருவாய் துறையில் பட்டா பெறுவதில் கணினி முறை வந்து விட்டாலும், கீழிருந்து மேல் மட்டம் வரை, லஞ்சம் பெறுவதில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.


moorthi
ஜூன் 29, 2025 12:38

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. இப்படி ஆளும் கட்சி அதிகாரிகளை சுதந்திரமாக மிரட்டி லஞ்சம் வாங்க அனுமதிக்கிறதா. ஒவ்வொரு சேவைக்கும் லஞ்சம் எவ்வளவு என்று பட்டியல் வைத்து பணம் பெற்று ரசீதும் வழங்கலாம். யார் கேட்க முடியும் உங்களை. திமுக அதிமுக மாறி மாறி ஆட்டய போடுறீங்க. அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பெரும் பணக்காரர்களாக ஆகிறார்கள்.


Ramesh Sargam
ஜூன் 29, 2025 12:31

மீண்டும் பாருங்க வெறும் சிறிய சிறிய மீன்கள்தான் சிக்குகின்றன. லட்சத்தில், கோடியில் ஊழல் செய்பவர்கள் சிக்கவே மாட்டேங்கிறாங்க.


ஜெகதீசன்
ஜூன் 29, 2025 11:38

கடைநிலை அதிகாரிகளே இப்படி சிக்குவர். ஆனால் மேல் மட்ட அதிகாரிகள் மற்றும் பெரிய அரசியல்வாதிகள் இப்படி சிக்க மாட்டாங்க. அப்படியே சிக்கினாலும், மணிக்கு லட்ச ரூபாய் வாங்கும் பெரிய வக்கீல் வைத்து வாதாடி சுதந்திரமாக இருப்பர்.


Raghavan
ஜூன் 29, 2025 11:31

திருட்டு ரயிலேறி வந்த குடும்பம் ஏறக்குறைய ஒரு 10-15 தலைமுறைக்கு சொத்து சேர்த்து உள்ளது. ஒன்னும் இல்லாமல் வந்து சினிமா கதை வசனம் எழுதியா இந்த சொத்துக்களை சேர்த்தார். அவனவனுக்கு இதேபோல் சொத்துசேர்க்கவேண்டும் என்கிற ஆசையை தூண்டுகிறது இந்த திருட்டு ரயிலேறி வந்தவர் செய்த வேலை.


sekar ng
ஜூன் 29, 2025 11:05

நூரில் ஒருவர் தான் மாட்டுவார்கள். வேலை ஆகவேண்டுமானால் கொடுத்தே ஆகவேண்டும். அவர்களும் ஆளும் கட்சிக்கு பங்கு தருகிறார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை