உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுளை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள்: திமுக, கம்யூ மீது அண்ணாமலை சாடல்

கடவுளை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள்: திமுக, கம்யூ மீது அண்ணாமலை சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: '' திமுக, கம்யூனிஸ்ட்களுக்கு கடவுளைப் பற்றி பேச அடிப்படையில் எந்த தகுதியும் இல்லை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மக்களை ஏமாற்ற

கேரள மாநிலம் பந்தளத்தில் நடந்த சபரிமலை சமரக்ஷண சங்கமத்தில் அண்ணாமலை பேசியதாவது: செப்டம்பர் 20 ல் அனைத்துலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை கேரள அரசு ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்கு முக்கிய விருந்தினராக அழைத்தவர் என்பது தான் முக்கியம். தமிழக முதல்வரை அழைத்தார்கள். சனாதன தர்மத்தை வேரோடு அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள். சனாதனம் டெங்கு, மலேரியா கொசுவை போன்றது. அதை அழிக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. ஸ்டாலினை முக்கிய விருந்தினராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைக்கும் போதே தெரியும், இந்த மாநாட்டை ஐயப்பனுக்காக போடப்படும் நிகழ்வு கிடையாது. அரசியலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க போடுகிறது என்று.முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை , 'நாஸ்திக டிராமாச்சாரி' என்று அழைப்பேன். நாத்திகத்தை விரும்பக்கூடிய மற்றும் டிராமா நடத்த வேண்டும் என்று நினைக்கக்கூடிய இருவர் சேர்ந்து நாஸ்திக் டிராமாச்சாரியாக நிகழ்வை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அந்த நிகழ்வுக்கு யாரும் வரவில்லை. இருக்கைகள் காலியாக இருக்கிறது. அவர்கள் கஷ்டப்பட்டு கூட்டத்தை போட்டு ஐயப்பனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி தங்களது பெயருக்கு இன்னும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

என்ன உரிமை

போலீசாரை வைத்து ஐயப்ப பக்தர்களை அடித்து நொறுக்கிய முதல்வர் பினராயி விஜயனுக்கு, ஐயப்பனை பற்றி மாநாடு நடத்த என்ன உரிமை இருக்கிறது என ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழகத்தில் சனாதன தர்மம் வேண்டாம் என நினைக்கும் திமுக பழநியில் முருகன் மாநாடு நடத்தியது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. இருவருக்கும் கடவுளை பற்றி பேசுவதற்கு அடிப்படையில் எந்த தகுதியும் இல்லாதவர்கள்.

நீலிக்கண்ணீர்

கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியத்தை பார்க்க வேண்டும். அவர்கள் வடிக்கும் நீலிக்கண்ணீரை வடிக்கின்றனர். கடவுளே இல்லை என சொன்னவர், கடவுளை நம்பாத பினராயி விஜயன், பகவத் கீதையை பற்றி பாடம் எடுக்கிறார். இது ஆச்சர்யமாக உள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் பகவத் கிதையை படிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும். நரகத்துக்கு போக 3 வழி உள்ளது. காமம், பேராசை, கோபம் ஆகியன நரகத்துக்கு வேகமாக அழைத்துச் செல்லும். இந்த மூன்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் இருக்கிறது.ஒரு அரசனை பொறுத்தவரை, கொடுமை செய்வது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவது என்பது, அரசனுக்கு கீழ் இருக்கும் கொலைகாரனை விட பெரிய பாவத்தை சம்பாதிப்பான் என திருவள்ளுவர் கூறுகிறார்.2018 - 19ல் பந்தளத்தில் அவர் நடந்து கொண்ட விதம் மக்களை விஜயன் நடத்திய விதம் எது.

காணவில்லை

ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எவ்வளவு பிரச்னை உருவாக்கினார்கள். அரசன் செய்யும் தவறை விஜயன் செய்துள்ளார். எனவே பகவத் கிதையை பாடத்தை எங்களுக்கு எடுக்காதீர்கள். கண்ணாடியை பார்த்து உங்களுக்கு சொல்லிக் கொள்ளுங்கள். தமிழகத்தில் கோவில்களை ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. 1985 ல் 5.25லட்சம் ஏக்கர் கோவில் நிலம், இருந்த நிலம் தற்போது 4 லட்சம் ஏக்கர் நிலம் தான் உள்ளது. ஒரு 1.25 லட்சம் ஏக்கர் காணவில்லை. நம்மை ஏமாற்றுவதற்காக மட்டுமே ஒரு கூட்டம் ஒன்றாக நடத்தி கொண்டுள்ளனர். கடவுளை அரசியலுக்கு பயன்படுத்துவது யார் என பார்க்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 23, 2025 12:07

தமிழகத்தில் மிக சிறந்த மனிதர் மற்றும் அரசியல் நேர்மையான மனிதர் இவர் மட்டுமே


venugopal s
செப் 23, 2025 10:56

அவர்கள் நாத்திகத் திருடர்கள், இவர்கள் ஆத்திகத் திருடர்கள். அவ்வளவு தான் வித்தியாசம்!


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 23, 2025 12:30

ஆத்தீக திருடர்கள் பாவ புண்ணியம் பார்ப்பார்கள். நாத்திக திருடர்கள் பாவ புண்ணியங்களை பற்றி கவலைப் படாமல் அதர்மமே தர்மம் என்று வாழ்பவர்கள்


நிக்கோல்தாம்சன்
செப் 23, 2025 07:15

சரியாதான் பேசியிருக்கீங்க


Kasimani Baskaran
செப் 23, 2025 04:05

கம்மிகளுக்கும் கடவுளுக்கு காததூரம். இருந்தாலும் பணம் சம்பாதிக்க எளிதான வழி என்பதால் திருட்டு திராவிடர்களுடன் சேர்ந்தால் பஜனை கூட செய்து பக்தியை காட்டுவார்கள்.


Palanisamy T
செப் 23, 2025 03:58

திமுகவைப் பற்றி மிகச் சரியாகச் சொன்னார் அண்ணாமலை. திமுக மட்டுமில்லை. பிற மதத்தார்களுக்கும் கடவுட் கொள்கை பற்றிப் பேச எந்த தகுதியுமில்லை. அன்றும் இன்றும் இனியென்றும் கடவுளை பற்றி நன்கு அறிந்தவர்கள் தமிழர்கள். அதனால் தான் இன்றும் நம்மிடம் காலத்தால் அழியாத அத்தனை அரிய சைவநெறி நூட்கள். மொத்தத்தில் இன்றும் நாம் சைவநெறி நூட்களின் அருமைப் பற்றி அறியாத மூடர்கள். தமிழராய்ப் பிறந்த நாம் இன்றும் நம் சைவநெறி நூட்களான திருமுறை, சங்கஇலக்கிய நூட்கள் சொல்லும் வரலாற்று உண்மைகள் கடவுட் கொள்கைகள் இவைகளையெல்லாம் கொஞ்சமும் அறியாது பிறந்தப் பயன்கள் தெரியாது வீணாக மடிந்துப் போகின்றோம். திருக்குறளும் ஒரு சைவநெறி நூல் என்பதை நாமின்னும் அறியவில்லை. நாம் இந்த மண்ணில் பிறந்ததே வீண்


DANIEL JACOB
செப் 24, 2025 06:33

பழனிசாமி அண்ணே திருக்குறளையும் விட்டுவைக்கவில்லையா ? பாவம் திருவள்ளுவர் .............


Ramesh Sargam
செப் 23, 2025 01:55

கடவுள் செய்த ஒரே குற்றம், திக, திமுக, கம்யூனிஸ்ட்ஸ் போன்ற கடவுளே இல்லை என்று கூறித்திரியும் மக்களை படைத்ததுதான். அதற்காக நான் கடவுளை நொந்துகொள்ளகிறேன். மன்னித்துவிடு கடவுளே.


Oviya Vijay
செப் 23, 2025 00:56

அண்ணாமலைக்கேத் தெரியும்... ... ஏனென்றால் கூட்டணிக் கட்சிகளின் லட்சணம் அவ்வாறு... ஆனால் கட்சியில் உள்ளிருந்து கொண்டே அதை வெளிப்படையாகப் பொதுவெளியில் அவரால் பேச இயலவில்லை... சமீபத்தில் ஒரு நிருபர் அவரிடம் எடப்பாடியைத் தற்குறி என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்போது நீங்களே அவரை முதலமைச்சர் ஆக்க பணியாற்றுவேன் என்று கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு மிக மெல்லிய குரலில் அரசியல்னா இதெல்லாம் இருக்கும்ணே... விட்ருங்கண்ணே... என்று ஜகா வாங்கிய வீடியோவைப் பார்த்த போது வீரத்துடன் தீரத்துடன் பேசும் நம் அண்ணாமலையா இப்படி என்ற எண்ணம் தோன்றியது... அரசியலில் பல நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது... ஆனால் அவர் இருக்கும் இடம் மட்டும் சரியில்லை... காரணம்... தமிழக மக்கள் என்றைக்கும் ஜாதிகளுக்கு மதங்களுக்கு முன்னிலைப் படுத்தும் கட்சிகளுக்கு ஒருபோதும் ஆதரித்ததில்லை... உதாரணம் பாமக மற்றும் விசிக... இவைகள் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஒரு சில தொகுதிகளில் மட்டும் தான் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவார்களேயன்றி தமிழகத்தின் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடும் தைரியம் இவர்களுக்குக் கிடையாது... அதே போல் தான் பாஜக என்பது... என்றைக்கு மத சாயம் பூசிக்கொண்டு கட்சியை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தார்களோ... அன்றைக்கேத் தெரியும்... இவர்கள் தமிழகத்தில் வெற்றி பெற மாட்டார்கள் என்று... மதம் சார்ந்த பாஜகவில் இருக்கும் வரை அண்ணாமலைக்கு தமிழகத்தில் ஏற்றமில்லை... அவருடைய வழக்கமான டயலாக்கில் சொல்வதானால் அண்ணே நான் சொல்றேன்ணே... நோட் பண்ணிக்கோங்கண்ணே...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 23, 2025 06:22

விடியலுக்கு மத சாயம் இல்லை , ஹிந்து கடவுள் மட்டுமே இல்லை , ஹிந்துக்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்ட்டோம் , உங்க பாயசம் புரியுது மூர்க்ஸ்


Oviya Vijay
செப் 23, 2025 00:53

பல காலமாக என் பதிவுகளில் நான் தொடர்ச்சியாக இவரைப் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். கூடிய விரைவில் அரசியலில் இவர் ஒரு செல்லாக்காசு ஆகப்போகிறார் என்று... அதில் பாதி நடந்து விட்டது... இன்னும் பாதி 2026 எலெக்ஷன் முடிந்ததும் நடந்தேறி விடும்... அதன் பின்பு பால்பண்ணையின் முதலாளியாகத் தான் இவர் இருப்பாரேயொழிய, பாஜக மூலமாக தமிழக மக்களுக்கு எந்நாளும் முதலாளியாக முடியாது என்பதை உணர்வார்...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 23, 2025 06:20

முதலாளி விடியல் மட்டுமே மூரக்ஸ்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 23, 2025 00:40

தமிழ்நாட்டை தாண்டி கேரளாவுக்கு போயிட்டார். இங்கே கட்சியை வளர்த்து முடிச்சுட்டு, அங்கே போய் விட்டார்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 23, 2025 00:06

இப்படியே உளறிக் கொண்டே இருங்கள். தமிழ்நாட்டில் பாஜாக கட்சிக்கு மக்கள் ஆதரவு பிச்சிக்கும்