உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப்பார்க்கின்றனர்; சிலர் திமுக போல் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் 75வது ஆண்டை ஒட்டி நடந்த அறிவு திருவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை. இவ்விழாவிற்கு அறிவு திருவிழா என்று துணை முதல்வர் உதயநிதி பொருத்தமான பெயர் வைத்துள்ளார். ஏதோ கட்சியை தொடங்கினோம். அடுத்த முதல்வர் நான் தான் என்று அறிவித்தோம் என ஆட்சிக்கு வரவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5uh047pu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திமுகவின் தலைவர்களில் இருந்து கடைக்கோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள். திமுக உழைத்த உழைப்பு சாதாரணமானது அல்ல. வரலாறு தெரியாதவர்கள் சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். இன்று சில அறிவிலிகள் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். திமுக போல் வெற்றி பெற, திமுக போல் அறிவும், உழைப்பும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் ஒரு திமுக தான். இப்படி ஒரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது.ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம் திமுக என்று ராகுல் சொல்லி இருக்கிறார். பீஹார் மாநிலத்தில் முதல்வராக விரைவில் வர இருக்கிற தேஜஸ்வி யாதவ் திமுகவை வரலாறாக பார்க்கிறார். மாநில கட்சியான திமுகவை அகில இந்திய தலைவர்களும் பாராட்டி கட்டுரை எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் அவசரம் அவசரமாக நடத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நடத்துக்கின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தபோதிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் நடத்துகின்றனர். கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் கமிஷன் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது. களத்தில் வேலை செய்யும் திமுகவினர் போலி வாக்காளர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் திமுகவினர் களத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 141 )

M Ramachandran
நவ 29, 2025 12:31

அப்போது ராகுல் உங்க முன்னோடியா அல்லது உங்க்க மஞ்ச துண்டார் முன்னோடியா இருவரில் யார் சொல்லதை எல்லாம் எடுத்து கொள்வீர்கள் ?


M Ramachandran
நவ 29, 2025 12:28

ஆந்தராவில் பீபீ ஊதின வரலாரா சொல்லுங்க நல்ல கதை கேட்ட திருப்தி இருக்கும். இன்று இரவும் நல்ல தூக்கமும் வரும்.


sankar
நவ 25, 2025 17:03

பொய்களை விதைத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பைகளை நிறைத்த உங்கள் வரலாறு எல்லாருக்கும் தெரியும் - நேர்மையான காமராஜரை தோற்கடித்து மக்கள் இன்னமும் அனுபவிக்கவேண்டியது இருக்கிறது


S.V.Srinivasan
நவ 18, 2025 07:51

என்ன பெரிய வரலாறு, நீங்கதான் சொல்லுங்களேன், கேக்கறோம். சும்மா சவடால் வீட்டுக்குட்டு 5 வருஷம் ஓட்டியாச்சு .


M Ramachandran
நவ 14, 2025 00:47

மக்கள் பணத்தை கொல்லையய அடிப்பவர்களுக்கு வரலாறு ஏது? அப்போதைகப்போ அம்புட்டதை சுரூட்டரா ஆண்டி கதைய்ய தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது தான் அதற்கும் கூட வரலாறு ஊன்று என்ற விளக்கத்தை கேள்வி படுகிறோம். மஞ்ச துண்டுவின் வாரிசு ஏமாந்த சோணகிரியாக இருந்ததால் அவருக்கு கிடைக்கைக்க வேண்டிய வாரிசு பட்டம் பறி போய் விலாசம் இல்லாமல் மருதையில் முடங்கி கிடக்கு.


S.V.Srinivasan
நவ 13, 2025 12:23

வரலாறு தெரியாதவர்கள் தீமகாவை மிரட்டி பார்க்கிறார்கள். வரலாறு தெரிந்தவர்கள் வயித்தெரிச்சல் பட்டுக்கொண்டு உக்காந்திருக்கிறார்கள்.


Kannadasan
நவ 13, 2025 09:23

தமிழர்கள் வரலாறு தெரியாமல் இருப்பதனாலேயே, யார் யாரோ தமிழகத்தை ஆளுகின்றார்கள்.


Kannadasan
நவ 13, 2025 09:22

திமுகவின் மகா ஊழல் வரலாறு மிக மிக பெரியது.


VIDYASAGAR SHENOY
நவ 12, 2025 16:42

உங்கள் வரலாறு ஒரு நாற்றம் பிடித்த ஒன்று , யாரும் படிக்க வாய்ப்பில்லை தலீவரே


Thravisham
நவ 12, 2025 06:38

தானாக பிதற்றி திரிகிறார். முத்திடிச்சி


சமீபத்திய செய்தி