உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு டில்லியில் மூன்று நாள் மாநாடு

எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு டில்லியில் மூன்று நாள் மாநாடு

சென்னை:எம்.எஸ்.சுவாமிநாதனின், 100வது பிறந்த நாளையொட்டி, 'பசுமைப் புரட்சி - உயிர் மகிழ்ச்சிக்கான பாதை' என்ற தலைப்பில், டில்லியில் மூன்று நாள் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சவுமியா கூறியதாவது: காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் சமூக சமத்துவம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, மாநாட்டின் நோக்கம். வரும் 7ம் தேதி, மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து, சர்வதேச அளவில் வேளாண் ஆராய்ச்சிக்காக சிறந்த பங்காற்றிய விஞ்ஞானிக்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரிலான, 'புட் அண்டு பீஸ்' என்ற புதிய விருதை வழங்க உள்ளார். மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, விவசாயிகள், மாணவர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ