உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் நிலவும் மந்த நிலை

அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் நிலவும் மந்த நிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, அமெரிக்க வரி உயர்வால், மந்தநிலை நிலவுவதாக, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த மாதம், 10,804 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.இது, 2024 - 25ம் ஆண்டு ஆக., மாதம் நடந்த வர்த்தகத்தை காட்டிலும், ரூபாய் மதிப்பில், 8.89 சதவீதம் அதிகம். அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிடும் போது, 2.6 சதவீதம் அளவுக்கு குறைவு என்று, ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஏப்., முதல் ஆக., வரையிலான, ஐந்து மாதத்தில், 58,193 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய நிதியாண்டின், இதே காலகட்டத்தில் நடந்த ஏற்றுமதியை காட்டிலும், 4,762 கோடி ரூபாய் அதிகம்.நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் இருந்தே, ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருந்தது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும், 11 முதல், 17 சதவீதம் அதிகம் ஏற்றுமதி நடந்தது. ஆனால், அமெரிக்க வரி உயர்வு காரணமாக, ஜூலை மாதத்தில் இருந்து வர்த்தக விசாரணையில் சிறிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக, கடந்த மாதத்தில் இருந்து ஏற்றுமதி மதிப்பு குறைய துவங்கியுள்ளது. வரி சீரமைப்பு தொடர்பாக, விரைவில் பேச்சு துவங்கி, சுமூக தீர்வு கிடைக்குமென, ஜவுளித்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''இந்திய ஆடை ஏற்றுமதித்துறை, புதிய சவால்களை சந்தித்த பின்னரும், தனது வலிமையை நிலை நிறுத்தியுள்ளது. உலகளாவிய தேவை அதிகரித்துள்ளதால், ஆடைத்துறையின் நிலைத்தன்மை மற்றும் புதுமையில் கவனம் செலுத்தி வருகிறோம். வரும் மாதங்களிலும், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்,'' என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில்,''ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்க வரி விதிப்பால், சிறிய சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.பரஸ்பரம் பேச்சுவார்த்தை துவங்க இருப்பதால், விரைவில் சுமுக தீர்வு கிடைக்கும். இருப்பினும், வழக்கமான ஆடை ஏற்றுமதியில் பாதிப்பு இருக்காது; கூடுதல் வர்த்தக வளர்ச்சியில் உருவான மந்தநிலையும் விரைவில் மாறும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
செப் 18, 2025 17:02

சீனா, ரஷியா வுக்கு ஏற்றுமதி செய்யுங்க. நண்பேண்டா...


Venugopal S
செப் 18, 2025 10:37

இந்த வீம்புக்கு வேட்டை ஆடும் ஈகோ பிடித்த அரசை நம்பி ஏமாந்து போகாமல் உங்கள் சொந்தமான முயற்சியில் ஏதாவது மாற்றுவழியைத் தேடுங்கள்.


G Mahalingam
செப் 18, 2025 08:17

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கவை மட்டுமே நம்பி இருந்தோம். வேறு நாடுகளை கவனிக்க வில்லை. இப்போது வேறு நாட்டைலும் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விழிப்புணர்வு செய்துள்ளது . அமெரிக்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு கதவு மூடினால் அடுத்த 5 கதவுகள் இருக்கு. ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. கஷ்டம் வந்த பிறகு தான் கண்ணுக்கு தெரிகிறது


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 18, 2025 08:14

தமிழக தொழில் அதிபர்கள் இனி வெறும் ஆங்கிலத்தை மட்டும் நம்பி தொழில் செய்ய முடியாது. நம் நாட்டிலேயே மற்ற மாநிலங்களில் 140 கோடி மக்கள் உள்ளனர். உள்நாட்டு சந்தையில் வியாபாரம் செய்ய ஹிந்தி அவசியம். ஜப்பான், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகள், அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என பற்பல நாடுகளில் தொழில் செய்ய பல மொழிகள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, பெங்காலி, கன்னடம், ஜப்பனீஸ், இந்தோனேஷியன், மலாய், ரஷ்யன், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, போன்று வெவ்வேறு மொழிகள் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெறிந்த, வியாபார நுணுக்கம் தெரிந்த விற்பனை நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. வெறும் தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு இனி பஜனை செய்வது முடியாது. திராவிட மாடல் கூட்டத்தின் மொழி வெறி அரசியலை இருந்து வெளியேறுங்கள். நாடும், உலகமும் உங்களை வரவேற்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. மாறுவோம். வெற்றி பெறுவோம்.


Indian
செப் 18, 2025 10:37

கூகிள் ட்ரான்ஸ்லட் எந்த மொழியை காட்டினாலும் மொழி பெயர்க்கும் ..chatGPT போன்ற ஆப்கள் உடனுக்குடன் மொழி பெயர்க்கின்றன ..


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 18, 2025 11:38

வியாபாரம் என்பது தான் சார்ந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன், எதிர்கால திட்டங்கள், சந்திக்கும் பிரச்சனைகள், தொழில் போட்டிகள், விற்பனையை செய்து முடிக்க வேண்டியாவசரம், நிர்பந்தம், சர்வதேச நிலவரம், தொழில் அறிவு, பொது அறிவு, பேச்சுத் திறமை, நிர்வாகத்தின் ஆதரவு, நம்பிக்கை, நுகர்வோரின் தேவைகள், அந்தந்த நாட்டில் நிலவும் வியாபார சூழல், விழாக்கள், மக்களின் விருப்பம், பணப்புழக்கம், சர்வதேச அரசியல் நிலவரம் இப்படி எவ்வளவோ இருக்கிறது ஒரு விற்பனை பிரதிநிதியாக செயல்படுவதற்கு. வெறும் கூகிள், சாட் ஜிபிடி சோறு போடாது. பன்மொழி அறிவு மிகமிக முக்கியம். சிலபல பேப்பர் வேலைகளுக்கும், ஆரம்பகால மொழி பயிற்சிக்கும் வேண்டுமானால் கணினி மென்பொருள் பயன்படும். அதையே நம்பி தொழில் செய்தால் சுபம் சுபம் சுபம்தான்.


உ.பி
செப் 18, 2025 08:00

உள்ளூர்ல மலிவு விலைக்கு குடுங்க


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 18, 2025 07:51

அமெரிக்கா தனது விவசாயிகள் அபரிமிதமாக உற்பத்தி செய்யும் ஜி.எம். சோளம் விதைகளை இந்தியாவை வாங்கச்சொல்லி வற்புறுத்துகிறது. உள்நாட்டு சோளம் உற்பத்தி போதுமான அளவில் இருந்ததால் நேற்றுவரை ஜி.எம். விதைகளை வாங்கமாட்டோம் என்ற இந்தியாவின் நிலைப்பாடு சரியாகவே இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவின் எத்தனால் உற்பத்திக்கு சோளம் முக்கிய பங்காற்றுகிறது. எத்தனால் உற்பத்திக்கு தேவையான அளவு சோளம் நம்மிடம் இல்லாததால் கடந்த ஆண்டிலிருந்து நாம் சோளத்தை உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அதற்கு பதிலாக விலை குறைவாக கிடைக்கும் ஜி.எம். சோளத்தை அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்து எத்தனால் உற்பத்திக்கு மட்டும் பயன்படுத்தலாம். இதை செய்தால் அமெரிக்காவை சமாளிக்க முடியும். திருப்பூர் பிழைக்கும். ஆனாலும் இந்த நிகழ்வு திருப்பூருக்கு ஒரு பாடம். ஒரே நாட்டை நம்பி இனி இருக்கக்கூடாது. உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யவேண்டும். அதுவே எதிர்கால சிக்கல்களில் இருந்து சமாளிக்க உதவும்.


Prasad
செப் 18, 2025 07:28

இன்னும் நம்மில் பலரும் அமெரிக்கா பொருட்களை வாங்கி வருகிறோம் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்... ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில் வர்த்தகம் செய்ய வேண்டும்....


ديفيد رافائيل
செப் 18, 2025 07:05

அமெரிக்கா விதித்த வரி காரணமாக ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு, மாற்று சந்தைகளைத் தேடுவது அவசியமானது. ஒரு பெரிய சந்தை திடீரென பாதிப்படைந்தால், சிறிய அளவில் நஷ்டம் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், அதற்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதுதான் முக்கியம். ​புதிய சந்தைகள்: ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிக அளவில் உள்நாட்டு உற்பத்தி இல்லாததால், ஆயத்த ஆடைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். மேலும், அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். ​பொருட்களில் புதுமை: அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க, நிறுவனங்கள் தங்கள் பொருட்களில் புதிய வடிவமைப்பு, புதுமையான துணி வகைகள், மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம். இது சர்வதேச சந்தையில் அவர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கும். ​அரசாங்க ஆதரவு: இந்திய அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வரிச் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம். ​திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று வழிகளை ஆராய்ந்து, உலகளாவிய சந்தையில் தங்களைப் பலப்படுத்திக் கொள்வது நீண்ட காலத்திற்கு அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.


ديفيد رافائيل
செப் 18, 2025 06:59

வரி அதிகமா pay பண்ணி தான் வியாபாரம் பண்ணனும்னு அவசியமில்லை. அமெரிக்காவை தவிர எத்தனையோ நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணி பிழைப்பு நடத்தட்டுமே திருப்பூர் நிறுவனங்கள். ஒரு country ஏற்றுமதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு தீடீர் stop ஆனா ஆரம்பத்தில் இப்படி தான் இருக்கும். அமெரிக்க வரி விதிச்சு மூன்று மாதங்கள் ஆகுது, அப்பவே nate ஏதாவது பண்ணியிருந்தா இந்த நேரத்தில் இந்த மந்த நிலையை அனுபவிக்க வேண்டி வந்திருக்காது. தன்னோட பேச்சை கேட்கவில்லை என்ற திமிரில் அமெரிக்கா வரி விதிச்சிருக்கான், அதுக்காக அதே அமெரிக்காகிட்ட business வச்சு தான் பிழைக்கனுமா?


முக்கிய வீடியோ