உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை; போலீஸ் சிரமத்துக்கு முடிவு

30 சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை; போலீஸ் சிரமத்துக்கு முடிவு

சென்னை: வரும் 2025ம் ஆண்டு முதல் 30 சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நீதிமன்றங்களுக்கு கைதிகளை பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்வது முடிவுக்கு வரும்.தமிழகம் முழுவதும் உள்ள 30 சிறைகளில் 160 வீடியோ கான்பரன்சிங் அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள், மாவட்ட சிறைகள் ஆகியவை அடங்கும். வீடியோ கான்பரன்சிங் அடிப்படையிலான விசாரணை நடவடிக்கைகள் துவங்க இருப்பது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். 30 சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை முறையை அமல்படுத்த, ரூ.6.46 கோடி தமிழக அரசு ஓதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை எல்காட் (Elcot) நிறுவனம் செயல்படுத்தும். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநில அரசு நிறுவனமான எல்காட் மூலம் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி நல்ல துவக்கமாக அமையும். வீடியோ கான்பரன்சிங் அடிப்படையிலான விசாரணை புதிய ஆண்டிற்குள் துவங்கப்படும். எதிர்காலத்தில் கைதிகளை நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த அழைத்து செல்ல, ஆகும் போக்குவரத்து செலவு மிஞ்சமாகும். 30 சிறைகளில், வீடியோ கான்பரன்சிங் விசாரணையின் மூலம் குறைந்தது 15,000 ரிமாண்ட் கைதிகள் பயனடைவார்கள். சி.பி.ஐ, என்.ஐ.ஏ., மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட பல நீதிமன்றங்களுக்கு கைதிகள் அழைத்துச் செல்வதால், ஒவ்வொரு சிறையிலும் விசாரணை மிகவும் சிக்கலானது. கைதிகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கைதிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவதால், அவர்களை நீண்ட தொலைவுக்கு அழைத்துச் சென்று வரும் போலீசாரின் சிரமங்கள் முடிவுக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jay
நவ 20, 2024 13:31

நல்ல முயற்சி. திமக்காவை பற்றி நாம் கழுவி ஊற்றுவது மட்டும் நோக்கம் அல்ல. நல்லது செய்தால் கட்சி பார்க்காமல் பாராட்ட வேண்டியது அவசியம். 15000 கைதிகளை கொண்டு செல்ல அரசுக்கு ஆகும் போக்குவரத்து செலவு அதற்காக நியமிக்கப்படும் போலீசருக்கான தொந்தரவு கைதிகள் தப்பி செல்லும் அபாயம் போன்ற விஷயங்கள் குறையும். போலீசார் சரியான கைதியைத்தான் வீடியோ கான்ஃபரன்ஸ்ங்கில் காண்பிக்கிறார்கள் என்பதற்கு ஆதார் மற்றும் face recognition மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் முகத்தை அடையாளம் காண்பது என்று இந்த அமைப்பில் கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


Rengaraj
நவ 20, 2024 12:57

நல்ல முயற்சி. அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகுக. அதே சமயம் ஒருவர் புரிந்த குற்றத்தின் அடிப்படையில் விசாரணை காலத்தையும் குறைக்க வழிவகை செய்ய வேண்டும். கொலை நடந்திருந்தால் விசாரணை என்ற பெயரில் ஒருவரை நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பது, குற்றம் இழைத்தவருக்கும் கொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செய்யும் அநீதி.


MARI KUMAR
நவ 20, 2024 12:35

சிறை கைதிகள் தப்பி செல்வது தடுக்கப்படும்


முக்கிய வீடியோ