உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள்: ஆராயும் காவல்துறை

கரூர் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள்: ஆராயும் காவல்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் துயரச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை ஆராயும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள், இளம்பெண்களும் இதில் அடக்கம். தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 2வது நாளாக விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழக காவல்துறையினரும் தங்களின் விசாரணை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.குறிப்பாக, கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? கூட்டத்தினரை யாரேனும் திசை திருப்பி விட்டனரா? என்பது பற்றிய புலன் விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதன் முக்கிய அம்சமாக, சம்பவத்தின் போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்களை போலீசார் ஆராயத் தொடங்கி உள்ளனர்.இந்த வீடியோக்களில் உள்ள காட்சிகள், வெளியிடப்படும் விவரங்கள் அனைத்தும் உண்மைதானா? அவற்றை வெளியிட்டவர்கள் யார்? ஏதேனும் உள்நோக்கத்துடன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டனவா? என்பதை கண்டறிய விசாரணை நடத்த ஆரம்பித்து இருக்கின்றனர். இதற்காக, தேவைப்பட்டால் அந்த வீடியோக்களை வெளியிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். முன்னதாக கரூர் சம்பவம் குறித்து எந்த வகையிலும் மக்கள் வதந்தி பரப்பக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V Venkatachalam
செப் 29, 2025 18:47

ஆஹா போலீஸ் ஆராய்ச்சி பண்ண போறாங்களா? முன்னாடி தங்க முடி மீது சேற்றை வீசுனாய்ங்க. அப்பறம் என்ன ஆச்சு? சேறு வீசுனவங்களை போலீஸ் தேடிப்பிடித்து கேஸ் போட்டு அமர்க்களம் பண்ணினாங்க.அது மாதிரி இப்போ யாரெல்லாம் வீடியோவுல கவர்மெண்ட்டை பற்றி குறை சொல்லியிருக்கான்களோ அவனுக்கெல்லாம் கிஃப்ட் உண்டுன்னு நாம் தெரிஞ்சுக்கணும். விடியோ எடுத்தவனின் காமிரா மற்றும் போன் வரை பிடுங்கப்படும்.


Nachiar
செப் 29, 2025 17:13

குழந்தைகளை சிறுவர்களை கடுமையான வெயிலில் அழைத்துச் சென்று அவர்களின் உயிருக்கு உடல் ஆரோக்கியத்துக்கு குந்தகம் விளைவித்த பெற்றோருக்கு எங்கு யார் போய் பொது நல வழக்குகள் . இப்படி ஒரு சட்டம் உள்ளதா. சினிமா மோகம் தலைக்கேறி விட்டது. பத்து மோடிஜி வந்தாலும் திருந்த்தாது தமிழகம். எனது அனுதாபங்கள் தமிழகத்துக்கு மட்டுமே பொறுப்பற்ற சினிமா பயித்தியங்களுக்கு அல்ல .


raja
செப் 29, 2025 16:40

எதுக்கு எல்லாத்தையும் ஆராயனும்... கரூர் கம்பனி நடத்தும் அண்ணனின் போனை சோதனையிட்டாலே போதுமே....


Anand
செப் 29, 2025 16:17

ஓவர் நைட்லே ஒலக பேமஸ் ஆகிவிட்டார்.


முக்கிய வீடியோ