உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவை மீட்க வேண்டும்; சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்

கச்சத்தீவை மீட்க வேண்டும்; சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்

சென்னை: மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசியதாவது: தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்து விடுகிறது; மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்டுக் கொண்டு வர வேண்டும். இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4pu7k4nd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போது மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், படகுகளையும் பிரதமர் மோடி மீட்டு தர வேண்டும். ஒரு நாளைக்கு 2 மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும்.கச்சத்தீவை, மாநில அரசு தான் தாரை வார்த்தது என்று தவறான தகவல்கள் பரபரப்படுகிறது. அனைத்துக் கட்சி கூட்டம் அப்போதைய தமிழக அரசால் கூட்டப்பட்டது. பார்லிமென்டிலும் தி.மு.க., எதிர்ப்பை பதிவு செய்தது. ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என ஜெயலலிதாவும் தீர்மானம் நிறைவேற்றினார். ஓ.பி.எஸ்., முதல்வராக இருந்த போதும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் கருணாநிதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.பா.ஜ., ஆதரவுதீர்மானத்துக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. பா.ஜ., சார்பில் பேசிய வானதி சீனிவாசன், அனைத்து மீனவர்களையும் சமமாக கருதும் மத்திய பா.ஜ., அரசு, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதையும் எதிர்த்தது என்று குறிப்பிட்டார்.

நிறைவேற்றம்

அனைத்துக் கட்சிகளும் கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பின்னர், முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Siva Subramaniam
ஏப் 03, 2025 08:49

இப்போதைய தமிழக முதல்வர் செய்வதெல்லாம் மக்களை திசை திருப்பவே. மற்றபடி எதுவும் இல்லை .இந்தமாதிரியான வாய் சவடால்களால் மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி. அடுத்த தேர்தல் வெகுதூரத்தில் இல்லை, எல்லாரும் கவனமாக இருந்தால் சரி.


M R Radha
ஏப் 02, 2025 22:44

விற்றது யார்? ஓசி ரயில் தானே


sankaranarayanan
ஏப் 02, 2025 20:48

பாரதியார் பாடலுக்கு ஏற்ப அச்சமில்லை அச்சமில்லை என்றபோதிலும், கச்சதீவை கச்சதீவை தாரைவார்த்து தந்தபின், மிச்சும் என்ன மிச்சம் என்ன என்று கேட்க வந்தாயா?


Bhakt
ஏப் 02, 2025 20:08

கச்சத்தீவை மீட்க உங்க நைனா கச்சத்தீவை வித்த invoice வேணும் நைனா.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 02, 2025 19:58

நம்ம கட்டுப்பாட்டுல இருந்த கச்சத்தீவு எப்படி இலங்கை கைக்கு போச்சு, அது கை மாறிப் போன போது யார் தமிழ் நாட்டுல ஆட்சியில இருந்தாங்க, அவங்க ஏன் அப்படி போக விட்டாங்க ன்னு எல்லாத்தையும் விவரமா சொல்லி தீர்மானம் போட்டு இருக்கலாமே அப்பா


M Ramachandran
ஏப் 02, 2025 19:21

இத்தினி நாள் இல்லாமல் இப்போ திடீர் என்று எப்படி ஞனோதயம் ஏற்பட்டது. பிரதமர் எடுக்கும் முயற்சிக்கு தடை கல் போட எத்தனிக்கும் ஜனநாயக விரோதி. அப்பனுக்கு தப்பாமல் பிள்ளை.ஒட்டு பிச்சைக்கு எத்தனிக்கும் முதல் நபராக இருக்கும் திருட்டு கூட்டத்தின் தலைமை.பதவி பறி போயிட கூடாது என்று ஆதங்கம்.


பேசும் தமிழன்
ஏப் 02, 2025 18:20

கச்ச தீவை..... இவர்களே கொடுப்பார்களாம் (கான் கிராஸ் மற்றும் திமுக கூட்டணி)..... பிறகு திரும்ப பெற வேண்டும் என்று இவர்களே தீர்மானம் கொண்டு வருவார்களாம்..... யாரை ஏமாற்ற இந்த நாடகம் ???... நாட்டு மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


என்றும் இந்தியன்
ஏப் 02, 2025 16:35

அடுத்த தேர்தல் வரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே உழலும் திமுக வால்க வால் வால் வால் வாள் வாள்


B MAADHAVAN
ஏப் 02, 2025 16:21

இந்த விஷயத்தை திராவிஷ அப்பா அவர்கள், கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்த அவரது அப்பா, அதாவது, திராவிஷ தாத்தா காலத்தில் நிறைவேற்றி இருக்க வேண்டும்.


Gopal
ஏப் 02, 2025 16:12

இவங்க தூக்கி குடுப்பாங்களாம் அதை இப்போ பாஜக திருப்பி வாங்கனமா? போக்கத்தவங்க.


முக்கிய வீடியோ