உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அரபிக்கடல் - லட்சத்தீவு பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இரு தினங்களுக்கு மிக கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி (நாளை); ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.22ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.23ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R. THIAGARAJAN
அக் 21, 2025 06:57

எல்லாப் பருவநிலை இயல்பு வாழ்க்கை இயங்கும் போது பருவ மழையை மட்டும் அச்சத்தோடும் வேண்டா வெறுப்பாக எதிர் நோக்கும் மனநிலை குறிப்பாக பள்ளிக் கல்லூரி விடுமுறை மற்றம் தேர்வுகள் தேதி மாற்றம்???? இந்நிலை மாற வேண்டும் பல பல ஆச்சரியமூட்டும் விண்கலங்களை விண்ணில் விதைக்கும் நாம் ஆண்டுகளும் பல பல கோடிகளை கடலில் கரைத்த சர்க்கரையைப் போல் தவறாமல் கரைத்து அடிப்படை வாழ்வாதத்தை குறைப்பதே நமது அரசு, அரசு ஊழியர்களின் சேவை ஏற்க்க தக்கதல்ல. முறையான திட்டம் முறைக்கேடற்ற செயல்பாடு அவசியம்.


Kasimani Baskaran
அக் 21, 2025 04:16

இனிதான் வானம் பொத்துக்கொண்டு ஊத்துகிறது என்று ஒப்பாரி ஆரம்பிக்கும். அப்படியே போட்டோ சூட் கூட... திராவிடனை நம்பி மோசம் போன தமிழனை என்னவென்று சொல்வது...


சமீபத்திய செய்தி