உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்தவர் கருணாநிதி; ஆனால், முதல்வரின் இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=491chzwp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவரது அறிக்கை:

சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம். கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதல்வர் ஸ்டாலின் தந்தை மறைந்த கருணாநிதி, கடந்த 1974ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.

ராஜதந்திரம்

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க., கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திராவின் ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா?

கள்ள மவுனம்

காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மவுனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக. கடந்த நாற்பது ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது தி.மு.க.,? இலங்கைப் போரின்போது, தி.மு.க., நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த தி.மு.க., தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நம் கண்முன்னே கண்ட வரலாறு. கடந்த 2014ம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது நமது பிரதமர் மோடி அரசு.

கபட நாடகம்

மோடி பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மவுனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலினையோ, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ray
ஏப் 03, 2025 15:26

திமுக முழு சம்மதம் தெரிவித்த ஆதாரத்தை வெளியிடுங்க அண்ணாமலை


S.V.Srinivasan
ஏப் 03, 2025 07:52

நாளொரு மேடை பொழுது ஒரு நடிப்புன்னுதான் முக்யமந்திரி காலத்தை கடத்துகிறார்.


Ethiraj
ஏப் 03, 2025 05:15

DMK can give from their party 50000 crores to sri Lankan katchtheevi will be with us


K.n. Dhasarathan
ஏப் 02, 2025 21:29

ஐயா அண்ணாமலை காங்கிரஸ் கச்சத்தீவை தாரை வார்த்தது, ஓ.கே , ஆனால் நீங்கள் 11 வருடங்களாக என்ன கலட்டினீர்கள் ? எத்தனை தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் ? என்ன செய்தார் மோடி ? ஒரு வார்த்தை பேசியது உண்டா ? ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வரும், ஜெய்சங்கர் அவர்களும் நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க பாடுபடுகிறார்கள், பல தமிழின துரோகிகள் மீனவர்களை மீட்பதை விட்டு முதல்வரை குறை சொல்வதே தினமும் பாட்டு பாடுகிறார்கள். இவர்களுக்கு ஏற்கனவே மக்கள் பாடம் புகட்டினார்கல், இன்னமும் அவர்களை துரத்தி அடிக்கவில்லையே அதை செய்யணும் .


RAMESH
ஏப் 02, 2025 19:59

டாடி தாரை வார்ப்பார்.... கூட்டணி கட்சி காங்கிரஸ் ஒகே சொல்லும்...மகன் தீர்மானம் போடுவார்.... மீண்டும் மோடி மீட்பார்..... சின்ன தத்தி தாரை வார்க்கும்.... மானங்கெட்ட ஆட்சி திராவிட மாடல் ஆட்சி


metturaan
ஏப் 02, 2025 19:26

புதுசு புதுசா சொன்னாதான் ஓட்டு கிடைக்கும்... பழச கிளற எந்த கிழவன் வரப்போறான்.... அடிச்சி உடு ராசா ..... கச்சதீவை மீட்கும் வரை தேர்தல் நடத்த கூடாது என்று அடுத்த போராட்டத்தை அறிவிக்க வாய்ப்பு உள்ளது ...


Yasararafath
ஏப் 02, 2025 18:47

அண்ணாமலைக்கு தமிழ்நாட்டு விஷயங்கள் தெரியல


Bhakt
ஏப் 02, 2025 20:13

பார்றா... இந்த பாக்கிஸ்தான் காரனுக்கு தெரிஞ்சது அண்ணாமலைக்கு தெரியலயாம்.


Mahendran Puru
ஏப் 02, 2025 18:18

அ. ஆ. அ. மலை ஹிந்தி விஷயத்தை தொட்டார். அது அவர்கள் கட்சிக்கே எதிர்ப்பாக அமைந்து விட்டது. கச்சத்தீவையும் தட்டி எழுப்பினார். அதுவும் அவர்களுக்கு எதிராக போய்விட்டது. இவரே தமிழ்நாடு பாஜகவின் தலைவராகத் தொடர வேண்டும்.


Kasimani Baskaran
ஏப் 02, 2025 16:41

தேர்தல் நெருங்க நெருங்க புதுப்புது கபட நாடகங்களை போட தீம்க்காவினார் சிறிதும் வெட்கப்பட மாட்டார்கள்.


மதிவதனன்
ஏப் 02, 2025 21:31

இதை எல்லாம் சொல்ல அவர் யார்? இப்ப பேச்சு எல்லாம் வேற லெவல் ஆகி நொந்து போய் இருக்கிறார் , WAITING LIST இல் கூட இல்லை REMOVED லிஸ்ட் இல் இருக்கிறார்.


Rangarajan Cv
ஏப் 02, 2025 16:17

Annamalai sir, voters of TN will forget past including the kachateevu issue. They will behave as if this is huge injustice done to TN by BJP. Any how current younger generation knowledge on these issues absolutely nil nor they have any inclination to understand


Sundar
ஏப் 02, 2025 18:50

Most of them are drug addict and cinema lovers. So, nothing will work on them...


புதிய வீடியோ