உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடற்கரையோரம் மணல் அள்ளிய டிராக்டர் சிறை பிடிப்பு : ஆற்று மணலோடு கடல் மணல் கலந்து விற்பனை

கடற்கரையோரம் மணல் அள்ளிய டிராக்டர் சிறை பிடிப்பு : ஆற்று மணலோடு கடல் மணல் கலந்து விற்பனை

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே அனுமதியின்றி கடற்கரையோரம் மணல் அள்ளிய டிராக்டர் சிறைபிடிக்கப்பட்டது. திருப்புல்லாணி ஒன்றியம் கீழமான்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகவேல் பட்டினம் கிராமத்தில் கடற்கரையோரம் சில மாதங்களாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆற்று மணல் தட்டுப்பாடால், கடல் மணலை ஆற்று மணலுடன் கலந்து விற்பனை செய்யும் கும்பல் கடற்கரை மணலை திருடி வருவது அதிகரித்தது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜூ, பெரியபட்டினம் வி.ஏ.ஒ., விடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று காலை வண்ணாங்குண்டு அப்பாஸ் என்பவரது டிராக்டரை காஞ்சிரங்குடி கணேசன்(24) ஓட்டி வந்தார். கடற்கரையோரம் மணல் அள்ளி டிராக்டரில் கொட்டினர். இதை கண்காணித்த கிராம இளைஞர்கள், மணலோடு டிராக்டரை சிறை பிடித்து திருப்புல்லாணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மணிமாறன் எஸ்.ஐ.,மற்றும் போலீசார், டிராக்டரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். மேல் நடவடிக்கை எடுக்க விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்