உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி

கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மாவட்டம் ஆழியாறுக்கு சுற்றுலாவுக்கு வந்த சென்னை பூந்தமல்லி தனியார் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் தடுப்பணைக்கு சென்னை பூந்தமல்லி தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது, தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்று நீரில் மூழ்கி பலியாகினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n80l2h11&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர். இது குறித்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நீரில் மூழ்கி, மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

எம். ஆர்
ஏப் 25, 2025 15:44

தமிழக அரசு ஆபத்தான இடங்களில் குளிக்க எப்படி அனுமதிக்கிறது?? அந்த இடத்தில் தடுப்போ அறிவிப்பு பலகையோ ஏன் வைக்கவில்லை?


Kundalakesi
ஏப் 25, 2025 14:40

ஆழியார் ஆற்றில் ஆழம் அதிகம். அரசு எச்சரிக்கை பலகை மற்றும் ஆழமான பகுதிகளில் தடுப்பு அமைக்க வேண்டும்


Prof.Dr.Y.Shanthoshraja.PT
ஏப் 25, 2025 13:37

உயிரிழந்த மாணவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மன வலிமையை வழங்க இறைவனை வேண்டுகிறேன். எங்கு சென்றாலும் நமது உண்மைக்கும் உயிருக்கு பாதுகாப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது. எதுவாக இருந்தாலும் இழப்பு அந்த மாணவர்களை சார்ந்த அத்துணை நபருக்கும் தான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 25, 2025 11:41

ரொம்ப யோசிச்சா இப்படித்தான். இவ்வளவு துல்லியமாக கருத்துச் சொல்லும் உங்களுக்கும் இந்த மாணவர்களின் துர்மரணத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிக்கூட விசாரிக்கலாம்.


thehindu
ஏப் 25, 2025 11:30

காஸ்மீர் சோகம் முடிவதற்குள் இப்படியொரு சோகம் அதுவும் கல்லூரி வேந்தர்கள் மாநாடு நடக்கும்போது கல்லூரி மாணவர்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா ன்று பார்க்கலாம்


புதிய வீடியோ