உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., தலைவர் விஜய் பூர்வீக கிராமம் எது? அங்கு என்ன இருக்கு தெரியுமா?

த.வெ.க., தலைவர் விஜய் பூர்வீக கிராமம் எது? அங்கு என்ன இருக்கு தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரியபட்டினம்: த.வெ.க., தலைவர் விஜய் பூர்வீக கிராமமான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத்தில் அவர் தாத்தாவின் கல்லறை உள்ளது.முத்துப்பேட்டை கிராமத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தந்தையின் கல்லறைத் தோட்டம் உள்ளது. மன்னார் வளைகுடா கடற்கரையோர கிராமமாக உள்ள முத்துப்பேட்டையில் புனித வனத்து அந்தோணியார் சர்ச் உள்ளது. சர்ச் வளாகத்தில் இருபுறங்களிலும் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான கல்லறைகள் உள்ளன. அவற்றில் எஸ்.ஏ. சந்திரசேகரின் தந்தை சேனாதிபதியின் கல்லறை உள்ளது.எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரான காட்வின் 35, கூறியதாவது: விஜய் பிறந்த கிராமம் முத்துப்பேட்டை. அவரது தாத்தா சேனாதிபதி பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே துறையில் பணிபுரிந்துள்ளார். சினிமா மற்றும் கலைத்துறை ஆர்வத்தால் சந்திரசேகர் இளமை காலத்தில் சென்னை சென்றார். அவரது உறவினர்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். 1982ல் சேனாதிபதி இறந்த பின் கல்லறையில் வழிபாடு செய்வதற்காக ஆண்டிற்கு இரு முறையாவது வந்து செல்கிறார்.கடந்த ஜூலை 17ல் இந்த கல்லறை புதியதாக சீரமைக்கப்பட்டது. அச்சமயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் அன்னதானம் அளித்தார். தற்போது விஜயின் பூர்வீக கிராமம் முத்துப்பேட்டை என்பதை அறிந்த ஏராளமானோர் இங்கு வருகின்றனர். கல்லறையை பார்த்து செல்கின்றனர். விஜய் சிறுவயதில் மட்டுமே கிராமத்திற்கு வந்ததாக அறிகிறோம். முத்துப்பேட்டையில் விஜய் குடும்பத்தினர் வாழ்ந்த பூர்வீக வீடு இருந்த இடம் தற்போது வெற்று நிலமாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

S Ramkumar
நவ 04, 2024 13:07

விஜய் சொந்த கிராமத்துக்கு வந்தே இருக்க மாட்டார். சொந்த ஊர் என்றால் சென்னை என்பார். முத்து பேட்டை, தங்கசி மடம் எல்லாம் தெரிந்தே இருக்காது. ஒட்டு போட , மாமா கதை எல்லாம் தான் சொல்லுவார். தேர்தல் பாத்திரம் பற்றி விலாவாரியா கேள்வி கேட்பவர்கள் இவருக்கு எங்கிருந்து கட்சி நடத்த பணம் வருதுன்னு கேட்கமாட்டார்கள்


தாமரை மலர்கிறது
அக் 29, 2024 19:22

விஜய் சாதாரண விஜய் அல்ல. ஜோசெப் விஜய். திமுகவின் மைனாரிட்டி ஓட்டுகளுக்கு ஆப்பு.


Kumar Kumzi
அக் 29, 2024 17:42

சோத்துக்கு மதம் மாறிய பாலைவன அடிமை கூட்டம் ஏன் இன்னும் ஹிந்து பெயர்களில் ஊரை ஏமாற்றி திரியுறானுங்க


Anand
அக் 29, 2024 18:34

ஊரை ஏமாற்றி திரியுறது தான் அவனுங்களோட நாடி நரம்பில் ஊறிப்போன ஒன்று, நாம தான் எச்சரிக்கையா இருக்கணும்.


Easwar Kamal
அக் 29, 2024 17:41

அவன் அவன் தமிழகத்திலே பிறக்காம பொய்யா ஒரு ஊரை சொல்லி அதுதான் எங்க பட்டன் ஊருனு கதை விட்டுட்டு திரியிறானுங்க குறிப்பா அந்த வளர்ந்து கேட்ட நடிகன். விஜய்க்கு எல்லாம் சொந்த ஊருனு ஒன்னு இருக்கு அங்கு இருந்து அரசியல் ஆரம்பிச்சு இருந்து இருக்கனும். அதுக்கு தகப்பனார் பேச்சை கேக்கணும் அது எங்கே அப்பனை கண்டா ஒரு மைல் தூரம் ஓடுறது. வேண்டதனானுங்க சகவாசம் வேற. பிறகு வெற்றி எப்படி தன்னை நோக்கி ஓடி வரும்.


duruvasar
அக் 29, 2024 15:16

கலர் காலரா ரீல் வுடுறாங்கோ. அம்மாவின் வீட்டில் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் எதனால் அப்பாவின் வீட்டில் பிள்ளை பேறு நடந்தது


angbu ganesh
அக் 29, 2024 15:01

tnpsc ல இந்த கேள்வி நிச்சயம் வரும், அவன் எங்க பொறந்தான் எத்தனை படத்துல அடிச்சான் அதுல எத்தனை ஆடம் ஓடிச்சு விளங்கிடும்


angbu ganesh
அக் 29, 2024 14:59

தினமலர் உன் மேல உள்ள மரியாதை எல்லாம் போகுது அவன் ஒரு தற்காலிக அரசியல் வியாதி அடுத்த வருஷம் அவன் வெறும் நடிகன் மட்டுமே அவன் ஆளுங்கட்சிக்கு பயந்துதான் இந்த கட்சியை ஆரம்பிச்சான் சீக்கிரம் மூடிடுவான், ஆனது அட்டா ரஜினிக்கேய அந்த கதின்னா இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு முக்கியத்துவம் தராத அவனை பத்தி ஏதுக்கு இந்த புராணம் நிறுத்திக்கோ ஒரே போர் அடிக்கித்து இதுக்கு மேல இப்படி செய்யாத


karthik
அக் 29, 2024 14:53

இந்த செய்தி இப்போ வெளியிடுவதற்கு காரணமே கிறித்தவர்கள் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தான்.


theruvasagan
அக் 29, 2024 14:43

ரொம்ப முக்கியமான தகவல். ஏற்கனவே சினிமா பித்து தலைக்கேறிப்போன விசிலடிச்சான் குஞ்சுகள் அந்த ஊருக்கும் யாத்திரை கிளம்பிடுவானுக.


Mohammad ali
அக் 29, 2024 13:42

இதே போல் கோபாலபுர கும்பலின் பூர்வீகம் அறிந்தால் நன்றாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை