உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசநோயாளிகள் உதவித்தொகை 1000 ஆக உயர்வு

காசநோயாளிகள் உதவித்தொகை 1000 ஆக உயர்வு

சென்னை:''காசநோயாளிகளுக்கான உதவித்தொகை, 500லிருந்து, 1,000 ரூபாயாக, இம்மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அமைச்சர் கூறியதாவது:தமிழகத்தில், நீலகிரி, திருச்சி, திருவாரூர், துாத்துக்குடி, திருவண்ணாமலை, மதுரை, கன்னியாகுமரி, கரூர் ஆகியவை, காசநோய் இல்லாத மாவட்டங்கள் என்ற நிலையில், மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளன.தற்போது, 2.55 லட்சம் நபர்களிடம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டதில், 84,666 பேருக்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்நோயை முற்றிலும் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில், காசநோய் இல்லாத தமிழகம் என்ற நிலையை அடைவோம்.காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உதவித்தொகையாக, 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல், 1,000 ரூபாயாக தரப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை