வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விஜயம் செய்யும் அவருடன் சேர்ந்து பக்குவபடுங்கள். இட்லி / தோசை மாவுக்கு தண்ணீர் விடும் அளவு மாறுபடும்.
ஒரு நீண்ட பயணம், இடையில் ஏற்படும் இடைஞ்சல்களுக்கு நின்று யோசித்து கொண்டு இருந்தால் பயணம் தடைப்பட்டு போகும்.பத்திரிக்கையாளர்களை சந்திப்பை தவிர்க்கிறார்? கொள்கை கூற வில்லை?. பிரச்சினைக்கு தீர்வு கூறவில்லை?. ஏன் தற்போதே கூற வேண்டும். தேவைப்படும் நேரத்தில், கூறினால், செயல்படுத்தினால் போதும். விவாதம் செய்ய இன்றே ஏன் அவல் கொடுக்க வேண்டும். ஒரு கேள்வி?. அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்கள் பணிக்காக தானே ஏற்படுத்தப்பட்டன?. ஒரு அரசு அரசின் சார்பாக கொள்கை முடிவு எடுக்கும் போது, பிற கட்சிகள் அதை மேம்படுத்தும் விதமாக ஆலோசனைகள் ஏன் வழங்குவது இல்லை, மக்கள் திட்டம் தானே?. அப்படி வழங்கினாலும் ஆளும் கட்சி, குறை கூறி தட்டி கழிக்கும். ஆக நாங்கள் ஆட்சி அமைத்தால் மட்டுமே நன்றாக கிழிப்போம் என்பதே ஒவ்வொரு கட்சியின் நிலை. மக்கள் பணியின் நலனை விட, தங்களால் நடந்தது என்பதே முக்கியமாகி போனது. ஆக விவாதமும் விளக்கமும் தேவையற்றது, மற்றவர்களுடன். விதண்டாவாதம் இட்லி, தோசைக்கு பதில். அதே பாணியில். நீர் மூன்று நிலைகளிலும் உள்ளது. ஐஸ்கட்டி, தண்ணீர், நீராவி. நீரின் தன்மை மாறும் போது பயனும் மாறுகிறது. மனிதம் நேயம் உள்ளது, கருத்தும் கொள்கைகளும் மட்டுமே வேறுபடுகிறது. எது மிகுந்த நன்மை பயக்கிறதோ அது ஜெயிக்கிறது. அதனால் தான் ஒரு தலைவர் இருக்கும் போது அவர் தவறுகளை கூறி திட்டுவார்கள். இறந்த பிறகு அவரின் உயரிய பண்புகளை கூறி பாராட்டவும் செய்வார்கள்.
ஹலோ மிஸ்டர் சைமன், தயவு செய்து நிறுத்திக்கொள்வீர்களா ... ப்ளீஸ் ...ப்ளீஸ்...ப்ளீஸ்...
மாவு அரைத்த உடன் செய்த தோசையும், பல நாள் கழித்து செய்த இட்லியும் நன்றாக இருக்காது. இதுவே மாவு ஒன்றாயினும் கொள்கை வேறு, அரசியல் வேறு என்பதற்கு உவமையாகும். இதை ஈரடி மற்றும் ஏழு வார்த்தைகளால் சொல்லலாம். இட்லி சுட்டபின் தோசை, ஆகாதே தோசை சுட்டபின் இட்லி.