உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., மாநாடு எதிரொலி; ஓட்டல் அறைகள் ஹவுஸ்புல்

த.வெ.க., மாநாடு எதிரொலி; ஓட்டல் அறைகள் ஹவுஸ்புல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடு நடைபெற இருப்பதையொட்டி, ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பின.நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், வரும் 27ம் தேதி நடக்கிறது. மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநாடு நடைபெறும் தேதிக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு, விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tkha60z9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தங்குவதற்காக ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் இரட்டிப்பு வாடகை பெற்று முன் பதிவாகி விட்டது என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் மேடை பணி முடிந்து விடும் என பந்தல் அமைப்பாளர் கூறினார். மாநாட்டு பணிகள் குறித்து சினிமா பிரபலங்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர். நேற்று நடிகர் தாடி பாலாஜி மாநாட்டு திடலை பார்வையிட்டுச் சென்றார். திடலை சுற்றி கொடி கம்பங்கள் நடும் பணி துவங்கியுள்ளது.மாநாட்டு திடலில் பாதுகாப்பு பணி ஏற்பாடுகள் துபாய் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, துபாய் பாதுகாப்பு கம்பெனி நிர்வாகிகளுடன் திடலை சுற்றிப் பார்த்து பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
அக் 11, 2024 12:54

ஓட்டல் அறைகள் புல் ஆனால், ஓட்டல் புல்னுதானே சொல்லணும்… எதுக்கு ஹவுஸ் புல்?


Rajinikanth
அக் 13, 2024 09:16

அடடா என்ன ஒரு கேள்வி? இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு பக்கத்துலயே உக்காந்துக்கோங்க


Narayanan Sa
அக் 11, 2024 10:03

வான் சாகச பாதுகாப்பு நிகழ்ச்சிச்சியில் மக்கள் பாத்துக்காப்பை கோட்டை விட்ட கையால் ஆகாத மாடல் அரசு இந்த விஜய் மாநாட்டில் என்ன குற்றம் கண்டுபுடிக்கலாம் என்று இப்போதே ஆராய தொடங்கி விட்டது. தன்மேல் பட்ட கரையை விஜய் மேல் போட்டு விஜய்க்கு களங்கம் கற்பூபிக்க தொடங்கி விட்டது.


Rajinikanth
அக் 11, 2024 09:05

ஏன் துபாய் பாதுகாப்பு நிறுவனம்? தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏதும் இல்லையா?


Durai Kuppusami
அக் 11, 2024 06:59

இவனுக்கெல்லாம் ஓவராக பில்டப் தேவையில்லை திமுகவின் அடுத்த டீம் ஒன்றுக்கும் தேராத கேஸ்.....


சமீபத்திய செய்தி