உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., ஆட்சி தடுமாறுகிறது

த.வெ.க., ஆட்சி தடுமாறுகிறது

தமிழகத்தில் கடந்த, 6 மாதங்களில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. செஞ்சியில் சிறுமி காணாமல் போய், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழகத்தில், த.வெ.க., ஆட்சி தடுமாறி வருகிறது. அரசிற்கு நிர்வாகத்தை கையாள தெரியவில்லை. அமைச்சர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை தட்டி கேட்க, முதல்வர் விஜய்க்கு தைரியம் இல்லை. அவருக்கு சட்டத்தின் மீது மதிப்பே இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு செயல்படுத்தவில்லை. மாற்றம் கொண்டு வருவோம் என, ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், தன் சிகையை தான் மாற்றி வருகிறார். தமிழகத்தின் கரும்புள்ளியாக, த.வெ.க., அரசு உள்ளது. நாம் நம் உயிரை பணயம் வைத்து, தமிழகத்தில் மீண்டும் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சியை அமைப்போம். – உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ