உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.,வில் ஐக்கியமாகிறாரா வாசன்?: அந்துமணி பதில்கள்

த.வெ.க.,வில் ஐக்கியமாகிறாரா வாசன்?: அந்துமணி பதில்கள்

நா.கோபிநாத், திருப்பூர்:

வைகோவின் சமீபத்திய பேச்சுக்களைப் பார்த்தால், த.வெ.க., கூட்டணியில் அவர் ஐக்கியமாவது உறுதியாகி விட்டது போல் தெரிகிறதே?

தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் அவரது மனப்பான்மை தெரிந்தது தானே, கோபிநாத்! விஜய் அவரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, சட்டென முடிவெடுக்க மாட்டார் எனத் தெரிகிறது. நான் சொல்வது புரிகிறதல்லவா?ம.செல்வி, வேலுார்:

'காங்கிரசை விட்டு விலகியவர்கள் கோழைகள், துரோகிகள்' என, ராகுல் கடுமையாக விமர்சிக்கிறாரே?

காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்கள், ராகுலுக்கு நண்பர்களாக இருக்கின்றனர் என, மல்லிகார்ஜுன கார்கே போட்டு உடைத்து விட்டாரே!கே.சங்கர், சென்னை:

நம் அரசால் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிர் பலியை தடுக்க முடியாதா?

மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டே ஆக வேண்டும். தொட்டிகளை சுத்தம் செய்யும் இயந்திரங்களை அதிகப்படுத்த வேண்டும். சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை உபயோகிப்பது பெரும் தவறு!கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு:

'அரசியலில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று அரசியல்வாதி; மற்றொன்று அரசியல் வியாபாரி' என்று, அ.தி.மு.க., பழனிசாமி கூறுகிறாரே?

'அரசியல் வியாதி' என்ற ஒரு ரகம் உண்டே... இந்த வியாதியால் பீடித்தவர்கள், தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடுவதற்கான செலவைச் செய்யாமல், பர்சை வெளியிலேயே காட்டாமல், கட்சியினரையும் ஏமாற்றி, கட்சியையும் ஏமாற்றுவரே... பழனிசாமி மறந்தது ஏன்?என்.மீரான், ராமநாதபுரம்:

காங்கிரசில் இணைய, த.மா.கா., தலைவர் வாசன், மறுத்து வருவதாக கூறப்படுகிறதே?

காங்கிரசில் இணைந்தால், தனித்து செயல்பட முடியாது; எதிர்காலமும் இல்லை என்று, வாசன் எண்ணி இருக்கலாம். த.வெ.க.,வில் ஐக்கியமாக பச்சைக்கொடியும் தெரிகிறது போலிருக்கிறதே!கா.ச.தண்டபாணி, அன்னுார்:

'தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளால், சென்னையில் எந்த இடத்திலும் ஒரு சொட்டு கூட தண்ணீர் தேங்கவில்லை' எனறு சேகர்பாபு கூறியுள்ளாரே?

ஓ அப்படியா... நான்கு ஆண்டுகளாக பருவ மழை காலத்தில், சேகர்பாபு அமெரிக்கா டூர் சென்றுவிட்டாரோ... சென்னையில் இல்லையோ? மேயர் பிரியா கொடுத்த, 'ரெயின் கம்மிங், அதனால் வாட்டர் ஸ்டாண்டிங்' என்ற பேட்டியையெல்லாம், சேகர்பாபு மறந்து விட்டாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

THE UNKNOWN MAN
அக் 21, 2026 12:33

வாசன் நல்லவர்தான் ஆனால் அவர் இணையும் கூட்டணி எதுவும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை...


பேசும் தமிழன்
அக் 21, 2026 08:17

கான் கிராஸ் கட்சிக்கு துரோகம் செய்த மம்தா... சரத்பவார்... போன்ற ஆட்கள் தான் ராகுல் கூட்டாளி.... பிறகு எப்படி விளங்கும்... அதை தான் கார்கே சுட்டிக்காட்டி இருக்கிறார்.


Sun
அக் 21, 2026 07:52

இன்னும் பெரு மழை பெய்ய ஆரம்பிக்கவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தொடர் மழை பெய்து தண்ணீர் தேங்கும் போது பாருங்கள் அப்போது சேகர்பாபு என்ன வார்த்தை கூறப் போகிறார் என்பதை? அப்பவும் இது தி.மு.கவின் சாதனைதான் என கூறப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


என் ஏ அரவழகன்
அக் 21, 2026 05:10

காங்கிரஸ் கட்சி கொள்கையும் கொடியும் வேண்டாம் த.மா.கா.வை மூப்பனார் ஆரம்பித்தார்..அது வாழ்ந்தது வளரவில்லை தொடர்ந்து வாழ த.வெ.க.உறவை தமாகா விரும்புகிறது காங்கிரஸ் பக்கம் போவது தற்கொலைக்கு சமம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை