உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி ஆட்சி அறிவிப்பு; விஜய் ஏவிய பிரம்மாஸ்திரம்!

கூட்டணி ஆட்சி அறிவிப்பு; விஜய் ஏவிய பிரம்மாஸ்திரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவோம் என்ற த.வெ.க., நிறுவனர் விஜய்யின் பிரம்மாஸ்திரம் தமிழக அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வை உருவாக்கி இருக்கிறது.சொன்னபடி கட்சி ஆரம்பித்தார், விழுப்புரத்தில் முதல் மாநாட்டை லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடத்தினார் நடிகர் விஜய். மாநாட்டில் பேசிய அவர், கட்சியின் கொள்கை, செயல்திட்டம், நோக்கம் என்ன என்பதை பற்றி தெளிவாக பேசிவிட்டார்.

ஒற்றை இலக்கு

அவரின் தீர்க்கமான பேச்சு, தொடக்கத்தில் நகைச்சுவை, போக போக ஆவேசம் என மாறி அரசியல் நெடி அடித்தது. அதிகாரத்தில் அமர்வது என்பதே ஒற்றை இலக்கு; ஆட்சியில், அதிகாரத்தில் தம்முடன் இணைவோருக்கு பங்கு என்றும் அறிவித்து தமிழக அரசியலில் அடுத்தக்கட்ட விவாதத்தை கிளப்பிவிட்டார் விஜய்.

வரவேற்பு

நடிகர் விஜய்யின் அறிவிப்பு , அழைப்புக்கு தமிழகத்தில் தற்போதுள்ள சில கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் ஆதவ் அர்ஜூனா, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர் வரவேற்றுள்ளனர். கூட்டணி ஆட்சி தான் தேவை என்பதற்கான காலம் 2026 என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

ஓட்டு வங்கி

கூட்டணி ஆட்சி என்பதை சிறிய கட்சிகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக பார்க்கலாம்.

அச்சாரம்

அதாவது கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் என்று முழங்கும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை குறி வைத்து அல்லது அக்கட்சிகளை தம்பால் ஈர்த்து, கூட்டணிக்கான அச்சாரத்தை தொடங்க எத்தனிக்கலாம். விஜய்யின் இந்த அழைப்பை அவர்கள் வரவேற்றுள்ளதே அதற்கான சமிக்ஞை என்பதை ஒதுக்கி விட முடியாது.இன்னும் சொல்ல போனால், ஆளும் கட்சியுடன் தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தை இழந்து அடுத்த தேர்தலில் கூட்டணி அமைய வியூகம் வகுக்கும் கட்சிகளை குறி வைத்துத்தான் விஜய்யின் அழைப்பு இருக்கிறது.

இடைவெளி

இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறி இருப்பதாவது; மக்கள் இயக்கமாக இருந்து, அரசியல் கட்சியாக இப்போது மாறி இருக்கிறது த.வெ.க., இயக்கம், அமைப்பு என்பது வேறு. அரசியல் என்பது வேறு. இவை இரண்டுக்குமான அளவுகோல் அல்லது இடைவெளி என்பது சிறியது போன்று தோன்றினாலும் அதில் ஜெயிக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

மையப்புள்ளி

தமிழக அரசியல் களத்தில் கழக அரசியல் எதிர்ப்பு என்பதே அனைத்து புதிய மற்றும் இருக்கும் கட்சிகளின் மையப்புள்ளி. அதுவே கடந்த 50, 60 ஆண்டுகால அரசியலில் அனைவரும் அறிந்தது. இந்த நிமிடம் அரசியல் கட்சியாக எந்த ஒரு வெற்றியும் த.வெ.க., இன்னமும் பெறவில்லை.

அரசியல்

அரசியலில் கைக்குழந்தை தான் த.வெ.க. இப்படியான தருணத்தில் ஆளும் கட்சியை எதிர்த்தால் தான் அரசியலே செய்ய முடியும் என்பதை உணர்ந்து தான் விஜய் பேசியிருக்கிறார். ஆளும் கட்சியை விமர்சித்தால் அதிருப்தியில் உள்ள மக்களை தம் பக்கம் திருப்ப முடியும், அதே மனோநிலையில் இருக்கும் கட்சிகளையும் கூட்டணி வைத்து வளைக்க முடியும். எதிர்ப்பு அரசியல் யாரிடம் செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து தான் தி.மு.க.,வை நேரடியாக தாக்கி இருக்கிறார்.

அஜெண்டா

சுயநல குடும்பம், திராவிட மாடல் அரசு என தி.மு.க., எதிர்ப்பு அரசியலே தமது கட்சிக்கான உத்வேக டானிக் என்பதை நடிகர் விஜய் தெளிவாக உணர்ந்திருக்கிறார். இன்று மட்டுமல்ல... 2026 தேர்தல் களம் வரை தி.மு.க., எதிர்ப்பு என்பது தான் அவரின் அஜெண்டாவாக இருக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அதனால் தான் 2026 தேர்தலில் தனிபெரும்பான்மை, கூட்டணி ஆட்சி க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார். இவ்வாறு அரசியல் விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர்.

எஜமானர்கள்

அரசியல் என்றாலே தெளிவான பார்வை நிரம்பவும் அவசியம். யாரை எதிர்த்தால் நம்மை மற்றவர்கள் கவனிப்பார்கள் என்பதை அட்சர சுத்தமாக அறிந்து வைத்துள்ளார் நடிகர் விஜய். இந்த நிமிடம் முதலே அவரின் எதிர்ப்பு அல்லது ஆக்கப்பூர்வ அரசியல் நடவடிக்கைகள் அவரது கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அந்த வகையில் கூட்டணி ஆட்சி என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ள விஜய், தமிழக அரசியலில் இதுவரை ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத கட்சிகள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது ராஜதந்திரம், எந்தளவுக்கு அவருக்கும், கட்சிக்கும் பலன் தரும் என்பது கூடிய விரைவில் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Palanisamy T
நவ 03, 2024 18:50

கூட்டணி ஆட்சியென்றாரே, திமுக அதிமுக மற்றும் காங்கிரஸ் பாஜக இவர்களோடு கூட்டுச்சேர்வாரா? இப்போதே தெளிவுப்படுத்தினால் நன்று.


M Ramachandran
நவ 01, 2024 11:17

ஆப்பு சீவி கொண்டிருக்கிறார்கள் நல்ல எண்ணெ தடவி இரக்கினவனுடன் ஐயோ அம்மா சத்தம் சரண்டர் தான்.ஆப்பு தயாரிக்க ஆடர் பெற்றிப்பது கொடகல்லு பிரதர்ஸ். நிறையா ஐவேஜு இருப்பதால் தான் அவர்கலிடம் ஆர்டர் கொடுக்க பாட்டிற்கு. இதுக்குமுன் ஒரு பெரிய்ய்ய நடிகர் கட்சி தொடஙக பொரேன் என்று அறிக்கை கொடுத்தவுடன் கொடகல்லு பிரதர்ஸ் ஆப்பை காட்டியவுடன் சரண்டர் ஆகி கேட்கும் இடத்திலெல்லாம் கையெழுத்து வாங்கிகோங்க நான் இல்லை என்று சொல்லி இமயமலைக்கு ஓட்டம் பிடித்தார்.


ஆரூர் ரங்
அக் 28, 2024 12:03

அப்பா ஏராளமா படமெடுத்தார். நீங்க நடிச்சீங்க. பிளாக்கில் டிக்கட் விற்பனை வசூல் அமோகம் ஒரு ரூபாய் கூட கறுப்புப் பணப் பரிமாற்றம் நடக்கவில்லைன்னு நீங்க சொன்னா நம்ப ஆளில்லை. நீங்க அரசியல் நேர்மை பற்றிப் பேசினால்?


J.Isaac
அக் 28, 2024 15:16

அரசியலில் நேர்மையா? கிட்டத்தட்ட 250 எம்பிக்கள் மேல் குற்ற வழக்கு, கிட்டத்தட்ட 170 எம்பிக்கள் மேல் பாலியல் வழக்கு உள்ளது


Palanisamy T
நவ 03, 2024 18:39

கறுப்புப் பணமில்லாமல் அரசியலில்லை திரையுலகமுமில்லை. அரசியல் நேர்மைப் பற்றி நீங்கள் கேட்டது நியாயம்தான். ஆட்சியிலும் அரசியலிலும் நடக்கின்ற ஊழல்களை இவரால் கட்டுப்படுத்த முடியுமா?


sankaranarayanan
அக் 28, 2024 10:23

தெரியாத்தனமாக புள்ளையாண்டானுக்கு துணை முதவர் பதவி கொடுக்க போக மேலும் அவரை ஊக்குவிக்க தமயன் தான் வைத்த எல்லா பரிச்சைகைளிலும் தேர்வு பெற்று முதலிடம் பெற்றதாக பெருமைப்படும் முதவரின் செயல் எதையோ எடுத்து சொரிந்து கொண்டாராம் என்பது போலாகிவிடும் விரைவில் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் அதுபோன்போன்றாகிவிடும்


angbu ganesh
அக் 28, 2024 09:48

building strong ஆனா பேஸ் மென்ட் வேஸ்ட் பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கும் பினிஷிங் சரி வாழ்த்க வாழ்க வண்டு முருகன்


Ms Mahadevan Mahadevan
அக் 28, 2024 05:49

பதவி ஆசை. அதனால் தான் அழைப்பு. பல ஆண்டுகளாக கட்சி நடத்தும் நபர்கள் இவரை முதல்வராக ஏற்று ஜிங்கி அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். கட்ட பட்சாய்த்து, ஜாதிய கட்சிகளை அழைக்கிறார்.அவர்களை வைத்துக்கொண்டு எப்படை ஊழலு அற்ற ஆட்சி எப்படி தருவார். பிற கட்சிகளே உஷார் கூட்டணி வைத்து இவரை வளர்த்து விடாதீர்கள்.


சம்பா
அக் 28, 2024 04:52

வலது இடது திருமா இன்ன பிற கூட்டணிமாற வாய்பள்ளது மாறினாலும் ஆட்சியில் அமர முடியாது என்பது குழந்தையும் அறியும்


xyzabc
அக் 28, 2024 03:06

நல்ல விஷயம். தனியாக ஜெயிக்க முடியாது என்று ஒப்பு கொண்டார். தீ மு க வுடன் கூட்டணி சேர்ந்தால் மந்திரி பதவி கிடைக்காது. கொள்ளை அடிப்பது easy


Oviya Vijay
அக் 28, 2024 00:16

உங்கள் பேச்சிலிருந்து தெளிவாகத் தெரிகிறதுஎன்னவெனில் எந்தக் காலத்திலும் நீங்கள் அதிமுக, திமுக மற்றும் பிஜேபியுடன் ஒட்டுறவாடப் போவதில்லை என்று... அதுவே மிக மிக நன்று... மேலும் நீங்கள் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தவுடன் உடனடியாகத் துண்டு போடக் காத்திருக்கும் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், விஜயகாந்த் மரணத்திற்கு பின் தேய்பிறையை நோக்கிப் போகும் பிரேமலதாவின் தலைமையிலான தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் வாசன், பாமக பெட்டி ராமதாஸ் மற்றும் சின்ன மாங்கா அன்புமணி போன்றவர்களை தூரத்தில் துரத்தியடியுங்கள்... ஏனெனில் தமிழகத்தில் அரசியல் கோமாளிகளாக உலா வரும் சீமான் மற்றும் அண்ணாமலையைப் போன்றவர்களே மேற்கண்ட கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும்... இவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. மக்கள் விரும்பும் தலைவராக நீங்கள் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பினால் மேற்கண்ட தேவையற்ற சுமைகளை நீங்கள் சுமக்காமல் தனித்திருப்பதே நலம்... அதுவே உங்களுக்கு பலம்... உங்கள் நீண்ட அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...


Mettai* Tamil
அக் 28, 2024 09:51

அதென்ன தமிழகத்தில் அரசியல் கோமாளிகளாக உலா வரும் சீமான் மற்றும் அண்ணாமலை...இன்னைக்கு ஊழல் பத்தி பேசுறாரே சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஜய், அந்த ஆளும்கட்சி ஊழலை ஒரு வலுவான எதிர்க்கட்சி செய்யும் வேலையை தனி மனிதனாக மக்கள் மத்தியில் ஆதாரத்தோடு கொண்டு வந்தது இந்த ஒரிஜினல் போலீஸ் அதிகாரி அண்ணாமலை தான்........


Bala
அக் 27, 2024 23:11

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சிதான் என்று திரு அண்ணாமலை அவர்கள் ஓராண்டுக்கு முன்பே பிரகடனப்படுத்திவிட்டார். இது காலத்தின் கட்டாயம்


சமீபத்திய செய்தி