உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரந்தூர் போகிறார் த.வெ.க., விஜய்!

பரந்தூர் போகிறார் த.வெ.க., விஜய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பரந்தூர் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 3 ஆண்டுகளை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்ட களத்தில் இருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் முடிவு செய்துள்ளார். அங்கு சென்று மக்களை சந்திக்கும் வகையில் அதற்கான அனுமதி கோரி தமிழக டி.ஜி.பி., காஞ்சிபுரம் எஸ்.பி., ஆகியோரிடம் உரிய முறையில் த.வெ.க., நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ஆனால், மனு மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வரும் 19 (ஜன.) அல்லது 20(ஜன.) ஆகிய தேதிகளில் விஜய் அங்கு செல்லக்கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் த.வெ.க., நிர்வாகிகள் போராட்டக் குழுவினரை நேரில் சென்று சநதித்து அவர்களின் நிலைப்பாட்டை அறிந்தனர். மேலும், அங்குள்ள நீர் நிலைகள், அதன் விவரங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் சேகரித்தனர்.இந் நிலையில், விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை நடிகர் விஜய் சந்திக்கும் வகையில் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தை சமன்படுத்தும் பணியில் போராட்டக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தில் நடக்கும் ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதையடுத்து, எப்படியும் நடிகர் விஜய் இங்கு வந்து மக்களை சந்தித்து விட்டுத்தான் செல்வார் என்று த.வெ.க.,நிர்வாகிகள் உறுதியாக கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Nagarajan D
ஜன 20, 2025 10:19

நீ அங்க போயி என்னாடா பண்ணப்போற? அரசியல் செய்யப்போறியா? உனக்கு அதெல்லாம் வராது பேசாமல் போயி திரிசாகூடவோ எந்த நடிகை கூடவோ நடி.. இருக்குற அரசியல் வ்யாதிகளே நாட்டுக்கு கெடுதல் தான் செய்றானுங்க, தினம் தினம் ஏண்டா புதுசா வரீங்க


vijai
ஜன 18, 2025 13:05

நாட்டின் வளர்ச்சி கெடுக்க இதெல்லாம் ஒரு பொழப்பா


Bala
ஜன 17, 2025 21:14

அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக அந்த திமுக அனுதாபிக்கு மிகப்பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்த துப்பில்லை? வெறுமனே ஆளுநரை சந்தித்து பேருக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டு காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு டாடா காட்டிவிட்டு சென்றவர். பரந்தூருக்கு செல்கிறாராம் இந்த திமுக புதிய அடிமை. அங்கும் அப்படித்தான் போராட்டக்காரர்கள் சிலரிடம் சிறிது பேசிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து தமிழக அரசிற்கு எதிராக எந்த கருத்துக்களையும் சொல்லாமல் ஒன்றிய அரசு என்று கூறி மோடி அரசை சாடிவிட்டு செல்வார் இந்த திமுக அடிமை. பிறகு கமல் போல் ஒரு MLA சீட்டோ அல்லது ஒரு MP சீட்டோ வாங்கிக்கொண்டு கட்சியையும் கட்சி தொண்டர்களையும் திமுக விடம் அடமானம் வைத்துவிட்டு அறிவாலய நிரந்தர அடிமையாகிவிடுவார் கமலை போல. ஜோசப் விஜயின் ரசிகர்களே இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி. விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த நேர்மையான வேறு கட்சிகளுக்கு சென்றுவிடுங்கள். வண்டவாளம் தண்டவாளம் ஏறிய ஈவேராவை கொள்கைத்தலைவனாக வைத்துள்ள இவன் அரசியலில் தொண்டர்களை பின்னோக்கி இழுத்து செல்கிறான். ஜாக்கிரதை


vijai
ஜன 18, 2025 13:13

இந்த போலி வளர்ச்சி தமிழக மக்கள் தடுக்கனும்


Sivagiri
ஜன 17, 2025 18:59

பரந்தூரில் பிரமாண்ட போட்டோ சூட் - - நடத்தி என்னா ஆக போகுது ? . .


karthik
ஜன 17, 2025 18:50

இவனும் உருப்படாத அரசியல் தான் செய்கிறான்.. மக்கள்தொகை பெருக்கத்திற்க்கேற்ப கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது.. 20 ஆண்டுகளுக்கு முன்பு துணை நகரம் அமைக்கும் திட்டத்தை இப்படி தான் ராமதாஸ் கூட்டம் எதிர்த்தது தடுத்தது.. இன்று சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது...எப்படியும் புதிய கட்டிடங்கள் தானாக வந்துகொண்டே இருக்கும் அதை தடுக்க முடியாது.. மக்களும் பிள்ளைகளை பெத்துக்கொண்டு தான் இருப்பார்கள்... அதற்க்கேற்ப கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவனை போன்ற தற்குறி அரசியல்வாதிகளால் நாட்டிற்ற்கு கேடு தான்.


Laddoo
ஜன 17, 2025 18:07

பரந்தூர் விமான நிலையம் தமிழகத்துக்கு மிகவும் தேவையான ஓன்று. தமிழக விமான பயனாளிகள் இப்போ பெங்களூரு விமான நிலையத்தையே அதிகம் நாடுகிறார்கள். வாரிசு கழகத்தினால் அடையாளம் காட்டப்பட்ட ஓசூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர இன்னொரு 30 ஆண்டுகள் ஆகலாம். கேரவன் தலைவருக்கு அதை பற்றி ஒரு புரிதலும் இல்லை


அன்பே சிவம்
ஜன 17, 2025 17:44

1). வரவேற்கத்தக்கது. வீட்டில் இருந்து அரசியல் பண்ண முடியாது. 2). இரண்டு திராவிட கழகத்திலும் மற்றும் இயக்கத்திலும் ஒரு வெற்றிடம் உள்ளது. 3). களப்பணி, தற்கால சூல்நிலைகள் ஏற்ப சித்தாந்தங்கள், எல்லோரையும் அரவணைத்து செல்லுதல் ஆகியவற்றை விஜய் கடைபிடித்தால் நிச்சயமாக எதிர்காலம் உண்டு.


vijai
ஜன 18, 2025 13:19

அன்பே சிவம் நல்ல இருங்க


Ravichandran
ஜன 17, 2025 17:38

விஜய்யை விமானத்தில் ஏற அனுமதி கொடுக்க கூடாது. வளர்ச்சி வளர்ச்சி என்று ஒரு பக்கம் புலம்புவது, மறுபக்கம் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வது.


sankaranarayanan
ஜன 17, 2025 17:26

பரந்தூருக்கு பறந்து செல்வதற்காக செல்கிறாரா வெற்றிக்கு மேல் வெற்றி இவருக்குத்தான்


சந்திரசேகரன்,நத்தம்
ஜன 17, 2025 18:57

நல்லவேளை பரந்தூரை பனையூருக்கு கூட்டி வர சொல்லாமல் விட்டாரே என்று சந்தோஷப் பட்டு கொள்ள வேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 17:23

எஜமானரை எதிர்த்து கூட்டம் போடுகிறாரே?? விமான நிலையம் எல்லாம் ஒன்றிய பாஜக வின் பாயாசம் என்று யாராவது எடுத்து சொல்லுங்கப்பா, பாவம். என்ன பேசப் போறார்? விமான நிலையம் வரக்கூடாது என்றா??? இல்லை. விமான நிலயத்துக்கு அனுமதி கொடுத்த திமுக வை திட்டுவார். அனுமதி கொடுக்காவிட்டாலும் ஒன்றிய அரசு செயல் படுத்த முடியும் என்பதை ஊடகங்களும் மறைத்து விடும். பராந்தூர் கூட்டத்தை வெச்சு 3 நாள் ஓட்டலாமே


r ravichandran
ஜன 17, 2025 17:43

நிலம் கையக படுத்தி கொடுப்பது ஆளும் திமுக அரசு தானே. மத்திய அரசின் 8 வழி சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் போட்டது திமுக தான். மத்திய அரசு அல்ல.


புதிய வீடியோ