உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!

அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம், இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: நேற்று நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில் தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fs2axqg3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம், இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ். இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? விளங்கிடும். தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? தியாகராஜனின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 137 )

baala
மார் 25, 2025 10:40

சிலர் எதிர் கருத்தை ஏற்க முடியாமல் ரிப்ளை செய்யும் காலத்தை இயங்காமல் இருக்க செய்வது ஏன்?


மூர்க்கன்
மார் 21, 2025 12:10

தோசை சுடுறதை விட்டுட்டு புட்டு விக்க போரரா??


S.jayaram
மார் 14, 2025 11:36

இப்போது தேவையில்லாமல் மத்திய மாநில அரசுகள் ஏன் மொழிப் பிரச்சினையில் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கின்றன என்பது தான் புரியவில்லை. ஏற்கனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாடு தவிர மும்மொழி திட்டத்தில் தான் இருக்கின்றன. அப்புறம் எதுக்கு PM ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கணும் இப்போ ஏற்க மறுக்கிறார்கள் என்று தேவையில்லாமல் நிதி தரமாட்டேன் என்பது சின்ன பிள்ளைகள் தட்டை காட்டில் விலையாடுவதப போல இருக்கிறது. இரண்டு அரசுகள் நடப்பது போல தெரியவில்லை. இந்த திட்டத்தில் இணைந்தால் ஹிந்தி நிச்சயம் அமுல் படுத்த நேரிடும் என்பது திமுகவிற்கு தெரியும் ஆனால் அடுத்தாண்டு தேர்தல் வருகிறது மே மாதம் கல்வியாண்டு துவங்கி விடும் அப்போது ஹிந்தி யை அமுல் படுத்தனும் என்ற காரணத்தால் பல்டியடிக்கின்றனர் திமுக அரசு மும்மொழி என்றால் ஏதாவது ஒரு மொழி , ஹிந்தி கட்டாயம் இல்லை விருப்பம் போல் படிக்கலாம் என்று ஏமாற்றுகிறது. அப்படினா மத்திய அரசு பணிகளுக்கு ஹிந்தி கட்டாயமில்லை என்று ஏன் இதுவரை அறிவிக்கவில்லை எனவே இருவரும் தமிழக மாணவர்களுடன், மக்களுடன் விளையாடி பார்க்கின்றனர் முடிவு புஷ் வானமே


ES
மார் 14, 2025 01:51

Keep crying our Tamil


kulandai kannan
மார் 13, 2025 23:02

தியாகராஜனுக்கு தமிழே ததிகிணத்தோம். ஆனால் தலைக்கனம் டன் கணக்கில்.


மூர்க்கன்
மார் 21, 2025 12:00

அறிவுக்கேத்த குழந்தை??


J.Isaac
மார் 13, 2025 22:15

இரண்டு மொழி கற்ற தமிழ் மக்கள் வேலை கிடைத்து உலகம் முழுவதும் செல்லும் போது மூன்று மொழி கற்ற வடநாட்டவர் வேலை தேடி ஏன் இரண்டு மொழி கற்கின்ற தமிழ் நாட்டுக்கு வர வேண்டும்.


Appa V
மார் 14, 2025 19:44

தமிழ் இளைஞர்கள் காலை ஆறு மணிக்கே டாஸ்மாக் unofficial கடையில் சரக்கடிக்க போகிறான் ..ரெங்கநாதன் தெருக்கடைகளில் ராஜஸ்தான் இளைஞர்கள் கடைகளில் வேலை பார்க்கிறார்கள் ..சரவணா ஸ்டோர் முதல் முருகன் இட்லி கடை வரை பீகார் உத்திர பிரதேச பெங்கால் இளைஞர்கள் .. மகளிர் அழகு நிலையங்களில் நார்த் ஈஸ்ட் பெண்மணிகள் வேலை பார்க்கிறார்கள்


Appa V
மார் 14, 2025 20:30

இங்கிலிஷ் மட்டுமே கற்றுக்கொள்ளும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வேலையில்லா இளைஞர்கள் கிடையாதா ..ரெஸ்ட்டாரெண்ட் வாசல்களில் மற்றும் டிராபிக் சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்கள் கிடையாதா ?


J.Isaac
மார் 13, 2025 22:11

கிராமங்களில் போதிய தமிழ் தவிர பிறமொழிகளில் பழக்கம் இல்லாத பெற்றோர்கள் பெற்ற பிள்ளைகள்,மூன்றாம் வயதில் மூன்று மொழி கற்க கட்டாயமாக்குவது சராசரி மற்றும் குறைந்த அறிவுள்ள பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். பயத்தினால் பள்ளிக்கு செல்லமாட்டார்கள். அடிப்படை கல்வி கூட கற்க முடியாத சூழ்நிலை உருவாகும்.


T.sthivinayagam
மார் 13, 2025 21:46

தாய் மொழியில் தான் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை ஐயாவால் கூற முடியா என்று ஹிந்துக்கள். கேட்கிறார்கள்


சிவஞானம்,திருச்சி
மார் 14, 2025 03:55

ஏலே உனக்கு இதேதான் வேலையா எந்த இந்துக்கள் கேட்டார்கள் நீ கேட்கிறேனு சொல்லு முதலில் நீ உன் போலி பெயரையாவது ஒழுங்காக பதிவிடு நீ போடும் கருத்தை எல்லாம் மக்கள் கேட்கிறார்கள் அவர்கள் கேட்கிறார்கள் இவர்கள் கேட்கிறார்கள் என்றுதான் இருக்கிறது நேரடியாக கேட்க வக்கில்லை


guna
மார் 14, 2025 07:39

என்னன்னா இவனுக்கு சொந்த அறிவு கிடையாது .


venugopal s
மார் 13, 2025 20:15

அண்ணாமலை புட்டுப் புட்டு வைப்பதெல்லாம் இருக்கட்டும், எப்போது தேர்தலில் நின்று வெற்றி பெறப் போகிறார்?


Bala
மார் 13, 2025 20:48

திமுக தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு வாரி வழங்குவதை நிறுத்தும்போது அண்ணாமலை அவர்கள் மகத்தான வெற்றி பெறுவார். எம்ஜியாரால் தீய சக்தி என்று சொல்லப்பட்ட திமுக அப்பொழுது அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்


நிக்கோல்தாம்சன்
மார் 13, 2025 20:59

உதயநிதி சொந்தமாய் படித்து TNPSC குரூப் 4 பாஸ் செய்யும் போது அண்ணாமலை என்று வைத்துக்கொள்ளலாமா!


N Sasikumar Yadhav
மார் 13, 2025 21:00

நீங்க அதாவது உங்கள மாதிரியான கோபாலபுர கொத்தடிமையாளர்கள் ஓஷியும் இலவசமும் வாங்கி விஞ்ஞானரீதியான ஊழல்வாத கட்சியான திராவிட மாடலுக்கு ஓட்டளிப்பதை நிறுத்தினால் அண்ணாமலை மாதிரியான நல்லவர்கள் தேர்தலில் நின்று ஜெயிப்பார்கள்


Easwar Kamal
மார் 13, 2025 18:13

அண்ணாமலை ஒன்று புரிந்து கொள்ளுங்கள் பழனிவேல் தியாகராஜன் பிள்ளைகள் அமெரிக்கா அம்மாவிற்கு பிறந்தவர்கள். அனாலும் இந்தியாவில் தன உள்ளனர் நீங்கள் அவர்களையம் மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட முடியாது. ரொம்ப பேசினால் டிரம்ப் பேச வேண்டிவரும் பின்னர் மோடியே உன் வாயை அடைக்க வேண்டிவரும்


Bala
மார் 13, 2025 20:51

ஏன் ஒப்பிட முடியாது? அவர்கள் என்ன அவ்ளோ அப்பா டக்கரா? அனைவரும் சமம். சம கல்வி சம உரிமை. ரொம்ப பேசினால் டாஸ்மாக் ஊழலில் அனைவரும் உள்ளே போக வேண்டி வரும்


Matt P
மார் 13, 2025 21:45

இங்கே ஏன் வந்து வாழ்கிறானுக. அமெரிக்கா போக வேண்டியது தானே. திமுகவில் அமைச்சர் பதவிக்கு ஆள் கிடைக்கலையா? மகேஷ் புள்ளை உதயநிதி புள்ளைங்களையாவது மந்திரிகள் ஆக்கலாமே.


vivek
மார் 14, 2025 07:41

new york கொத்தடிமை ....ptr சொன்னது புளுகுதன் என்று உன் மராமண்டைகு புரியுதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை