வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மையிலேயே திருட்டு நடந்து இருந்தால், யாரோ செய்து விட்டு பணிப்பெண்களை சிக்க வைத்து இருக்க வேண்டும்.
காட்பாடி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கொள்ளையடித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, காட்பாடி, காந்தி நகர் டான்பாஸ்கோ பள்ளி சாலையில் உள்ளது. இவரது மகள் திருமணம் அண்மையில் நடந்தது. திருமண ஏற்பாடுகளில் குடும்பத்தினர் தீவிரமாக இருந்த சூழலில், அவர்கள் வீட்டில் பணிபுரிந்த, ஊசூர் அடுத்த கலங்கமேடு பகுதி ராணி, 52, அவரது மகள் மகாலட்சுமி, 37, இருவரும் நகைகளை திருடினர். இதையறிந்த துத்திப்பட்டு பகுதி இளைஞர்கள், தாய் - மகள் இருவரையும் மிரட்டி, சேகர் ரெட்டி வீட்டில் மேலும் கொள்ளையடிக்க, தங்களுக்கு உடந்தையாக இருக்க அவர்களை வற்புறுத்தியுள்ளனர். இதற்கு இருவரும் சம்மதிக்க, அந்த கும்பல், சேகர் ரெட்டி வீட்டில் கொள்ளையடித்தது. இது குறித்து, சேகர் ரெட்டி மேலாளர் சந்திரசேகர் புகாரில், விருதம்பட்டு போலீசார் விசாரித்து, ராணி, மகாலட்சுமியை கைது செய்து, மேலும் மூவரை தேடி வருகின்றனர். அவர்களும் கைது செய்யப்பட்ட பிறகே, மொத்த நகை, பணம் விபரம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
உண்மையிலேயே திருட்டு நடந்து இருந்தால், யாரோ செய்து விட்டு பணிப்பெண்களை சிக்க வைத்து இருக்க வேண்டும்.