19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்; சென்னிமலை வீரர் கிஷோர் கேப்டனாக தேர்வு
சென்னிமலை: பி.சி.சி.ஐ., சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான வினோ மன்கட் டிராபி ஒருநாள் தொடர் நடக்கிறது. இதற்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த பி.கே.கிஷோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சண்டிகரில் வரும், 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை போட்டி நடக்கிறது. தொடரில் தமிழக அணி 'குரூப் சி' லீக்கில் இடம் பெற்றுள்ளது. 8ம் தேதி பெங்கால் அணிக்கு எதிராக முதல் போட்டியில் தமிழகம் மோதுகிறது.