வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வாராது. 2000 ரூபாய் வரை கட்டணம் இல்லை. சிறு குறு வியாபாரிகள் பாதிக்கமாட்டார்கள். பெரு வியாபாரிகள் இப்போது 0.5% முதல் 1% வரை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கட்டணம் செலுத்துகிறார்கள். UPI கட்டணம், கிரெடிட் கார்டு கட்டணம் விட குறைவு. பெரிய கடைகளில் கிரெடிட் கார்டுக்கு தனி கட்டணம் வாங்குவது இல்லை , அது போல UPIகும் கட்டணம் வாங்க மாட்டார்கள்.
பிக்பாக்கெட்டால் சம்பளப் பணத்தை இழந்தவர்களுக்கு UPI யின் அருமை தெரியும். சில பைசா கட்டணம் பெரிதாகத் தெரியாது.
கட்டணம் இல்லாத சேவை என்பது அசாத்தியம் அதுவும் 2000 ரூபாய் என்றால் அதற்கு எட்டு ரூபாய் தான் யு பி ஐ எடுத்துக் கொள்ளும் இது மிகவும் குறைவான அளவு தானே பொதுமக்கள் இதனை கண்டிப்பாக வெற்றி பெறச் செய்வார்கள் மேலும் பண பரிவர்த்தனையின் போது வியாபாரிகள் சில்லறை இல்லை என்று பொதுமக்களை அலைய விட்டதையும் பொது மக்களுக்கு தேவை இல்லாத சாதனங்களை சில்லறைக்கு பதிலாக அவர்கள் தலையில் வைத்து கட்டியதையும் நாம் மறக்கக்கூடாது யு பி ஐ சேவையின் மூலம் எத்தனை சௌகரியங்கள் பொதுமக்களாகிய நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் எல்லாமே இலவசமாக தான் கிடைக்க வேண்டும் என்றால் கூடிய விரைவில் யாருக்குமே எதுவுமே கிடைக்காமல் போய்விடும்
B2B அதாவது வணிகர் TO வணிகர்கள் பரிமாற்றங்களுக்கு மட்டுமே கட்டணம். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லை. முன்பு டிராப்ட், செக், மணியார்டர் மூலம் மிக அதிகமான கமிஷன் செலுத்தியே பணப் பரிமாற்றம் நடத்தினர். பணம் வரவாக பலநாட்கள தாமதம் சகஜமாக இருந்தது அதற்கான செலவை வாடிக்கையாளர்கள் தலைகளில் கட்டிக்கொண்டிருந்தார்களா? இக்காலத்தில் மென்பொருள் பாதுகாப்பு மிகவும் செலவு பிடிக்கிறது. . அதனை வணிகர்கள் ஏற்கத்தான் வேண்டும்.
மின்னணு பரிவர்த்தனை இந்தியாவில் எக்காலத்திலும் சாத்தியமே இல்லை என்று பார்லிமெண்டில் காங்கிரசு(சிதம்பரம் ) கூறியது. இப்போ அது பெரும் வியாபாரிகளுக்கு இலவசமா வேணுமாம். என்னடா நடக்குது இங்கே?
எப்படி எல்லாம் மக்களின் பாக்கெட்டை சுரண்ட வேண்டும் என்று மோடி அரசு நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது..
மத்திய அரசு GST கொண்டுவந்ததும் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்குதான். ஆனால், GST சாப்பிடும் சாப்பாட்டிற்கு உணவகங்கள் மக்களிடம்தான் வசூலிக்கிறார்கள்... இப்பவும் அப்படிதான் நடக்கப்போகுது, உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மக்களிடம் அதிக விலையேற்றி விற்பார்கள்... பொது மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்... UPIக்கு மாரசொன்னதும் அரசுதான், இப்போ பரிவர்த்தனை செலவுன்னு சொல்லி விலை மறைமுகமாக ஏற்றுவதும் அவர்கள்தான், இது சரியா? எப்படியோ உற்பத்தியாளர்கள் மற்றும் அரசும் (மத்திய, மாநில) வரி என்ற பெயரில் பொதுமக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள்...
இத2000 மேல்தான். மேலும் எம்ஜிஆர் ஆண்டுக்கு 100000 மேல் தான்.
இகீயர் ஆண்டு என்ன
ஐயா உடன்பிறப்பே, புதுக்கூட்டணி பாசம் என்பதால் 40ஆண்டுகளுக்கு முன் மறைந்த எம்ஜிஆரை இதில் இழுப்பதேனோ ?
மீண்டும் atm சேவைகள் அதிகரிக்கும் .இன்டர்நெட் நெட்bankng டெபிட்க்கார்ட் பரிவர்த்தனைகள் தொடரும் .பணம் கையால் தொடுவது அதிகம் ஆகும் .சில்லறை பணம் மட்டும் upi மூலம் கொடுப்பார்கள் .அதிகப்பணம் மீண்டும் பணமாக கையாளப்படும் என்று நினைக்கின்றேன் .அரசுக்கு பெரிய வருமானம் வராது .
யுபிஐ பணப்பதிமாற்றத்திற்கு விதிக்கப்படும் புதிய கட்டணம் விற்பனையாளருக்கு சதவிகித கணக்கில் அவர்களது லாபத்தின் பங்கு குறையும் என்பதால் ஒன்று வாடிக்கையாளரிடம் பணமாக கொடுங்கள் என கட்டாயப்படுத்துவார்கள். இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறையக் கூடும். அல்லது விற்பனையாளர்கள் விற்கும் விலையை சற்று கூட வைத்து அந்த பணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலித்து விடுவார். எனவே இந்த புதிய கட்டணம் மறைமுகமாக மக்களுக்கு சுமையாக மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படியானால் யுபிஐ-யின் உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு குற்ற நடவடிக்கைகளுக்கான செலவுகளை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி எழும். எப்படியானாலும் வங்கியோ அல்லது யுபிஐ வழங்கும் நிறுவனமோ மற்ற நடவடிக்கைகள் உதாரணமாக வங்கியாக இருந்தால் அதன் Net Banking NEFT, RGTS, IMPS போன்றவகளை பராமரித்திடுவதற்கு உள்ள அதே பொறியாளர்கள்தான் அதே Payment Gateway, Firewall, போன்றவைகள்தான் பயன்படுத்தப்படும் என்பதால் யுபிஐ-க்கு என பெரிய தொகை செலவிடப்படும் என்று கருத முடியவில்லை.