உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்நிலை தேர்வு விடைக்குறிப்பு வெளியிட யு.பி.எஸ்.சி., முடிவு

முதல்நிலை தேர்வு விடைக்குறிப்பு வெளியிட யு.பி.எஸ்.சி., முடிவு

சென்னை:சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தும் யு.பி.எஸ்.சி., எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை தேர்வுகள் முடிந்த பின், உத்தேச விடைக்குறிப்புகளை வெளியிட முடிவு செய்து உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு ஆகிய நிலைகளில், இந்த தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இந்நிலையில், முதல்நிலை தேர்வுகள் முடிந்ததும், விடைகள் சார்ந்து பல்வேறு பார்வைகள் உள்ளதால், அவரவர் தரப்பில், அது சரியானதாக கருதப்படுகிறது. இதனால், பல சர்ச்சைகளும் எழுகின்றன. இந்நிலையில், முதல்நிலை தேர்வு முடிந்ததும், உத்தேச விடைக்குறிப்புகளை வெளியிட யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்ய உள்ளது. அதன்பின், இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடவும், 'கட் - ஆப்' மதிப்பெண்களை வெளியிடவும், யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை