வாசகர்கள் கருத்துகள் ( 10 )
லஞ்சம் கொடுப்பவர்கள் 90 பேர்கள் காட்டி கொடுப்பதில்லை. நம்மால் ஒருவர் வாழ்கை கெட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் ஆனால் லஞ்சம் மேலும் மேலும் வளர்ந்தால் எல்லோரும் கொடுப்பதை நிறுத்தி இது மாதிரி மாட்டிவிட்டால்தான் லஞ்சம் ஒழியும். லஞ்சத்தில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது.
இதுபோன்ற செய்திகளை பார்க்கும்போது சிரிப்பாகத்தான் வருகிறது. ஒரு பக்கம் முதல்வர் விஜய் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு பாழ்ப்பட்டிருக்கிறது என்பதையே இந்த லஞ்ச நிகழ்வு காட்டுகிறது.
லஞ்சம் இல்லாமல் மக்கள் தேவைகள் பூர்த்தியாகாமலிருக்கும் பட்டா, சொத்து வாரிசு சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ் இவைகளை தக்க ஆதாரங்களுடன் கணினி முகமாக பெரும் வசதி உடனடி தேவை. நாளொரு வண்ணம் பொழுதொரு லஞ்சம் பெருகும் வகைகளை உடனடி நிறுத்தம் செய்யும் நடவடிக்கைகள் அவசியம், இது முதல்வர் விஜய் ஆட்சி, லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று சொல்லச்சொன்னால் மட்டும் போதாது, மக்களின் தேவைகள் காலதாமதமில்லாமல் நடக்கவேண்டும்.
தொட்டில் பழக்கம்....
லஞ்சம் வாங்குவது அல்லது கொடுப்பது தவறு, என்று தெரிந்தும் , மக்கள் தாங்கள் அலையமுடியாது என்று தானாகவே விரும்பி லஞ்சம் கொடுக்கிறார்கள். என்னதான் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலும் நிலஅளவையர், நிலத்தை அளக்கும் பொழுது, தனக்கு தேவையான தொகை எவ்வளவு என்று நிர்ணயாம் செய்து பெற்றுக்கொள்வார. அதன் பிறகு தான் பட்டா பெயர் மாற்றம் சாத்தியம், இல்லையென்றால்
கடந்த மூன்று மாதங்களாக லஞ்ச ஊழலுக்கு எதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிந்தும் இவன்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தவில்லை. ஏனென்றால், வாங்கியே பழக்கப்பட்டு விட்டார்கள். இவன் ஒருவரிடம் ரூபாய் 2000 வீதம், ஐந்து பேரிடம், இருபது நாளுக்கு லஞ்சம் வாங்கினால் சம்பளம் இல்லாமல் லஞ்சம் மட்டுமே ரூபாய் இரண்டு லட்சம் கிடைக்கும். இது போன்ற தேசவிரோத டாக்குகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும்.
லஞ்சம் என்பது தடுக்கப்பட வேண்டிய வேண்டிய விஷயம் அல்ல, ஒழிக்கபட வேண்டிய விஷயம். தளபதி இதை மட்டும் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டார்னா அப்புறம் தமிழ் நாட்டிலே லஞ்சமே இருக்காது.
ஆன்லைனில் பதிவு செய்து விட்டு கிராம நிர்வாக அலுவலரை நேரில் ஏன் பார்க்க வேண்டும்?... தாத்தா நிலத்தை பட்டா இல்லாமல் நல்ல விலைக்கு விற்க முடியாது.... கூடவே அடுத்தவன் இடத்தின் சில சதுர அடி, பொது வழி தடத்தையும் சேர்த்து பட்டா கேட்டு இருப்பார்கள்.... இன்று நிலத்தின் மதிப்பு கண்டபடி இருக்கு. யார் மேல் தவறு உள்ளது என்பது இறைவனுக்கு வெளிச்சம்..
லஞ்சம் வாங்கியவர்களுக்கு தூக்கு தண்டனை என்று சட்டம் வராதவரை, இது தொடரும்.
தினம் தினம் லஞ்சம் வாங்கினார். கைது. லஞ்சம் வாங்கினாள். கைது. கைதுக்கு பிறகு என்ன தண்டனை? இல்லை, வெறும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் காவலில் வைத்துவிட்டு, ஜாமீனில் விட்டுவிடுகிறீர்களா? எனக்கு என்னமோ அப்படித்தான் தோன்றுகிறது. தண்டனை கடுமையாக கொடுக்கப்பட்டிருந்தால் இப்படி தினம் தினம் தினம் தினம் லஞ்சம் வாங்கினார். கைது. லஞ்சம் வாங்கினாள். கைது. என்று செய்திகள் வராதே...