உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு திமிர் பேச்சு

ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு திமிர் பேச்சு

சென்னை: 'ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்' என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேசி இருக்கிறார்.ஆணவக் கொலைகளுக்கு எதிரான சமூகநீதி கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் கலந்து கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5e1fpbvl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது;வாள் எடுத்து ராமன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒருவன் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருக்கிறான். அப்போது சென்ற ராமன் நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறான்.நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறான். உன்னுடைய பெயர் என்று ராமன் கேட்கும் போது சம்பூகன் என்று அவன் பதில் சொல்கிறான். உன்னுடைய சாதி என்ன என்று கேட்கிறான். நான் வேட்டுவ சமூகம் என்று சம்பூகன் கூறுகிறான். அதாவது பழங்குடி சமூகம் என்று சொல்கிறான். கீழ்ஜாதியான நீ எப்படி ஜாதி மாறி இந்த தர்மத்தை செய்ய முடியும்? அந்தந்த ஜாதிக்கு என்று தர்மம் இருக்கிறது என்று சொல்லி, வாள் எடுத்து அவன் தலையை வெட்டி படுகொலையை செய்கிறான்.அந்த ரத்தம் குழந்தையின் மீது தெறித்தபிறகு, அந்த குழந்தை உயிர்ப்பித்ததாக கதையில் சொல்லப்படுகிறது. இந்த கொலைகளுக்கு பின்னாடி, ஆணவக் கொலைகளுக்கு பின்னணியில் ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு. அந்த கோட்பாடு தான் வர்ணாசிரம கோட்பாடு. அந்த கோட்பாட்டை அழித்தொழிக்க வேண்டும். அதைதான் அம்பேத்கர் சொன்னார். ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டிய மதம். ஹிந்து மதத்தில் சமத்துவம் இல்லை. ஹிந்து மதத்தில் எப்போதுமே சமூகநீதி இல்லை. ஆகவே தான் ஹிந்து மதத்திற்கு எதிராக அவர்(அம்பேத்கர்) மதம் மாறுகிறார்.இந்த படுகொலை எங்கிருந்து தொடங்குகிறது. இந்த கோட்பாட்டை, வர்ணாசிரமத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் நுட்பமான அரசியல்.ராமன் பார்ப்பனர் அல்ல. ஆனால் பார்ப்பனர்களுக்காக அந்த படுகொலையை (சம்பூகனை கொல்வது) செய்கிறார்.ரெண்டும் ஒன்றுதான், ராமனும் ஒன்றுதான், ராமதாசும் ஒன்றுதான். நான் இதை கருத்தியல் ரீதியாக சொல்கிறேன். ராமன் பார்ப்பனர் அல்ல, ஆனால் பார்ப்பனர்களுக்காக அந்த படுகொலையைச் செய்கிறான். மருத்துவர் ராமதாஸ் பார்ப்பனர் அல்ல. ஆனால் பார்ப்பனர்களின் இந்த கருத்தியலை நடைமுறைப்படுத்தவதற்காக இந்த வேலையை செய்கிறார்கள். வெறும் ராமதாசோடு இதை நான் முடிக்கவில்லை. அதனுடைய தொடர்ச்சி இன்று நிறைய இருப்பதால் அந்த கருத்தியலை உள்வாங்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு வன்னி அரசு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 146 )

Partha
செப் 23, 2025 19:16

நாய்கள் குரைத்து கொண்டே இருக்கும்


saravan
செப் 21, 2025 16:19

முதலில் இந்து மதத்தில் பிறந்து தன்னை கொழுத்து வளர்த்துக்கொண்டவர்கள் தற்கொலை செய்துகொண்டால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும் எதற்கும் முன்மாதிரி அரசியல்வாதியாக இருக்க வேண்டும் அதற்கு முன்னுதாரணமாக வன்னியரசு தேதி அறிவித்து தனது பிறப்பை கேவலமாக நினைத்து அழித்துக்கொள்ள வேண்டும் இந்து மதம் தந்த பிறப்பு தானே வாழ்ந்து நிற்கும். நீ மனித கழிவை உண்பாயா ? மாட்டாயல்லவா அது அசிங்கம் என்று நினைப்பாயோ அதுபோலத்தான் உனக்கு இந்த பிறவியும் அசிங்கம் என நினைக்கிறாய் அந்த உடம்பை அழித்துவிடு


panneer selvam
செப் 19, 2025 20:29

Vanni Arasu Sir , you do not like Hinduism , you have the right to move out . Without knowing in depth of Hinduism , do not criticize and expose your venomous thoughts.


Ramalingam Shanmugam
செப் 19, 2025 17:00

வெட்கம் கேட்ட இந்துக்கள் பாவாடை லுங்கி பற்றி சொல்லிவிட்டால் பொங்குவாங்க


Chandradas Appavoo
செப் 19, 2025 16:20

இவன் முதலில் ஒழிய வேண்டும்


GoK
செப் 18, 2025 11:56

இந்து மதம் அழிக்க முடியாத ஒன்று. ராமாயணத்திலோ அல்லது வேறு எந்த புராணத்திலோ இடைச்செருகளை காட்டி அவை உண்மை ஆனால் ராமாயணம், புராணங்கள் பொய் என்னும் மடயர்களை என்ன சொல்வது ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அம்பது அறுவது வருஷங்களுக்கு முன்னாள் தாடிக்காரன் அவன் அடிவருடிக்கும்பல் சொன்னதை தமிழ் இனம் நம்பியது ஆனால் இத்தனை படிப்பறிவு முன்னேற்றம் கண்ட பின்னும் இந்த கும்பலுக்கும் குடும்பத்துக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை என்ன சொல்வது


Thirumal Kumaresan
செப் 18, 2025 09:41

இப்படிபட்டதுகளை தெருவில் நடமாட விடக்கூடாது.


ponssasi
செப் 17, 2025 16:57

இவர்களுக்கு உள்ளே பல பிரிவுகள் உள்ளன, அதில் இவர்கள் ஏற்ற தாழ்வு காட்டுகிறார்கள், அவர்களுக்குள் பெண் கொடுப்பதில்லை, எடுப்பதுவும் இல்லை. இவர்கள் குறி வளமான பொருளாதார பின்புலம் கொண்ட குடும்பம் தான்.


Kalaiselvan Periasamy
செப் 17, 2025 06:13

தற்காலத்தில் சாதாரண மக்கள் சமூக பிரிவை பற்றி பேசுவதில்லை . இவனை போன்ற அரசியல் ஓநாய்கள் மட்டுமே இது போன்று பேசி மக்களிடையே வெறுப்பு உணர்வை தூண்டுகின்றன .மற்ற மதங்களையும் பற்றி பேச துணிவு உண்டா ? இது போன்ற அரசியல் காட்சிகளை ஆதரிக்கும் மக்கள் என்றுமே மனு குலத்திற்கு ஒரு சபா கேடே .


Ganesha Shanmugam Murugesan
செப் 13, 2025 16:23

ஹிந்து மதம் பற்றி பேசக் கூடாது.


சமீபத்திய செய்தி