உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடக்கக்கூடாத கொடூரம்: கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

நடக்கக்கூடாத கொடூரம்: கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், '' எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம்'' எனக்கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் மதுரையை சேர்ந்த 20 வயது மாணவி, விமான நிலையத்தின் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், ஆண் நண்பரை தாக்கி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t8v2whzt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் அரிவாளால் தாக்க முயன்றனர். இதனையடுத்து அவர்களின் காலில் சுட்டு பிடித்தனர். மாணவி பலாத்கார சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: உண்மையில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம். அதுவும் நம்முடைய கொங்கு மண்ணில் நடந்துள்ளது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதும் காவல்துறையின் பொறுப்பு. நிச்சயம், காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என நம்புகிறேன். அந்த சகோதரிக்கும், அவருடைய பெற்றோருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Thravisham
நவ 05, 2025 08:15

நீங்க என்ன சொல்ல வர்றீங்க? கனிமொலி மெழுகுவர்த்தி ஏந்தி மணிப்பூர் மகளியர்க்கு சென்ற மாதிரி இங்கு இந்த விஷயத்துக்காக தீப்பந்தம் ஏந்தி ஊர்கோலம் செல்ல வேண்டுமா?


Ravichandran M.
நவ 05, 2025 07:03

Sir, make quick decision on hanging punishment awarded by judiciary. Criminals have no fear because of indecision.


Mani . V
நவ 05, 2025 06:39

பார்த்து. அப்புறம் வலித்து விடும். போன வாரம் இவரை ஸ்டாலினும், கனிமொழியும் சென்று சந்தித்து சிறப்பு செய்ததால், ஐயா பட்டும், படாமலும் கருத்து சொல்கிறார்.


naranam
நவ 05, 2025 00:30

மிகக் கேவலமான ஆட்சி செய்யும் திமுக அரசு விரைவில் அகன்று விடும்.. ஆனால் அதிமுக வந்தால் மட்டும் என்ன செய்துவிடும்? முதலில் டாஸ்மாக் மற்றும் இதர போதைப் பொருட்களை அடியோடு ஒழிக்கவேண்டும். போதை ஆசாமிகளை யமனுலகுக்கு அனுப்பிவைக்க வேண்டும். கடுமையான தண்டனைகள் மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும். இப்போது தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை திமுகவின் இரும்புப் பெண்மணி ஒத்துக்கொள்வாரா?


Sun
நவ 04, 2025 22:55

அச்சு அசலாக அப்படியே ஸ்டாலினின் ஸ்டேட்மெண்டை காப்பி அடித்தது போலவே உள்ளது! தவிர இப்பவும் நமது கொங்கு மண்டலத்தில் என்பதைத் தாண்டி நமது தமிழ் நாட்டில் என்பதற்குள் வாருங்கள். ஏன்னா நீங்க இப்ப இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி !


ராமகிருஷ்ணன்
நவ 04, 2025 22:40

இதை போன்ற விடியல் அரசின் சாதனைகளை கணக்கிட முடியாது ஐயா


Svs Yaadum oore
நவ 04, 2025 21:46

கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவனெல்லாம் வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி ஏற்றால் இது போன்ற படு கேவல சம்பவங்கள் நாட்டில் நடப்பதை தடுக்க முடியாது ....


Sudha
நவ 04, 2025 20:01

ஐயா, உங்கள் சீனியர் ஒரு பெண்மணி, இந்த விஷயத்தில் வாயே திறக்கவில்லை. உண்மையில் இந்த சம்பவங்களில் அரசு செய்ய தவறியதை ஆராய்ந்து சில நடைமுறை செய்து தாருங்கள்


சமீபத்திய செய்தி