உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி ஆபர் போல இருக்கு விஜய்யின் அறிவிப்பு; திருமாவளவன் விமர்சனம்

தீபாவளி ஆபர் போல இருக்கு விஜய்யின் அறிவிப்பு; திருமாவளவன் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்று வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தனது கொள்கை, கோட்பாடுகளை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி போடுவதற்கு தயார் என்றும், ஆட்சியதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு தி.மு.க., அ.தி.மு.க.,கூட்டணியில் உள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. முதல் ஆளாக வி.சி.க.,வின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஆட்சியதிகாரத்தில் பங்கு என அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விஜய்யின் நிலைப்பாடு குறித்து வி.சி.க., தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆட்சி அதிகாரத்தில் பங்கு-னு யாருக்கு சொல்லப்பட்டது, எல்லாரும் வி.சி.க.,வுக்காகத் தான் சொன்னதாக சொல்றாங்க. வி.சி.க., உடனே எப்படி இந்த அறிவிப்புக்காக ஒரு முடிவு எடுக்க முடியும். இது தப்பு தானே. இது தேர்தல் உத்தி என்று இல்லாமல் கமெர்சியல் போல உள்ளது. அதாவது, தீபாவளி சமயத்தில் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூடும் நிலையில், தங்களின் கடைக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க, தள்ளுபடி அறிவிப்பது போன்று ஆஃபரை வெளியிட்டுள்ளது போல் இருக்கிறது விஜய்யின் அறிவிப்பு.இது என்னோட பார்வையிலான விமர்சனம். இது தப்பாக கூட இருக்கலாம். இது சரியில்லை-னு கூட நீங்க சொல்லலாம். கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி தான். விஜய்யின் இந்த அறிவிப்பு எதுக்கு பயன்படுகிறது என்றால், தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. மற்றபடி அவங்க எதிர்பார்க்கும் ஏதும் நடக்காது. அந்த விளைவை உருவாக்காது. தமிழகத்தில் 30 முதல் 35 சதவீத வாக்குகள் பெறுபவர்கள் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். விஜயால் தனித்து நின்று 30 சதவீத வாக்குகளை வாங்க முடியுமா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 01, 2024 18:09

ஒருத்தர் கூட இந்த சிங்கிள் டீக்கு ஆதரவாக கருத்துப் பதியவில்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்தும் ஊழல், ரவுடித்தனம், அடிமைத்தனம் தவிர வேறு ஒன்றும் தெரியாத ஒரு கூட்டம். ஒருமுறை ஒரே ஒருமுறை திமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்காமல் திமுகவை தேர்தலில் தனித்து நிற்கவைக்க கட்டாயப்படுத்தும் தைரியம் இருக்கிறதா?


Bala
நவ 01, 2024 17:36

,சீ சீ, இந்த பழம் புளிக்கும்


sundarsvpr
நவ 01, 2024 16:35

அரசியல் கட்சியில் தொண்டர்களுக்கு மட்டும் மட்டும் வியாபாரம் கிடையாது. தலைவர்கள் மட்டும் அனுபோக பாத்தியதை. இதனை அறிந்த மக்கள் ஏன் தலைவர்களை நிராகரிப்பது இல்லை? திருமாவளவன் அவர் சார்ந்த கட்சியின் நிரந்தர எம் பி வேட்பாளர். தொண்டர்களுக்குகாக பதவியை விட்டுக்கொடுக்கும் தலைவர்கள் தமிழக கட்சிகளில்இல்லை என்பது நிசர்சன உண்மை.


theruvasagan
நவ 01, 2024 16:27

ஒண்ணேகால் சதவிகித ஓட்டு வாங்கவே முக்கும் ஒட்டுண்ணிகள் என்னிக்காவது தனியாக நின்று சுயபலத்தை காட்டி இருந்தால் மற்றவர்களை விமரிசனம் செய்யும் தகுதி வரும். அப்படி இல்லாத பட்சத்தில் வாயைப் பொத்திக் கொண்டு கிடக்கணும்.


narayanansagmailcom
நவ 01, 2024 16:14

பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்குமாம். ஒரு சீட்டு ஆள் தன்னை தான் விஜய் கூப்பிடுகிறார் என்று நினைத்தால் அது யார் தவறு. திமுகவுக்கு மற்றும் திருமாவுக்கு யாரும் கிடைக்கவில்லை அதனால் இரண்டும் ஒன்று சேர்ந்தது. இப்போது விஜய் தான் தான் கூட்டத்தை பார்த்து ஒரு வேகத்தில் தன்னால் 2026 இல் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற அனுமானத்தில் இந்த ஆஃப்பர் பற்றி பேசி இருக்கிறார். ஆனால் உண்மை தெரியாமல் அவர் கூறி இருப்பது எந்த அளவு நடக்கும் என்பதை காலம் தான் முடிவு செய்யும். MGR கூட சில காலம் திமுகவில் இருந்து விட்டு அதன் பிறகு தான் திமுகவிடம் கணக்கு பிரச்சனையால் தனித்து நின்று ஆட்சிச்சியை பிடித்தார். சினிமாவில் இரண்டரை மணி நேரத்தில் முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகலாம். ஆனால் நிஜ வாழ்வில் அது சாத்தியம் ஆகாது. முக்கியமாக பண பலம் பொருந்திய கட்சிகள் மக்களை கூண்டில் அடைத்து வைப்பது மேலும் ஓட்டு லிஸ்டில் இருந்து பெயர்களை நீக்குவது போன்ற தில்லாலங்கடி வேலைகளை செய்வதில் திமுக நம்பர் ஒன். அதனால் இவைகளை எல்லாம் தாண்டி விஜய் வர வேண்டும் என்றால் ஓரளவு சீட் பிடிக்க முடியும் என்பது உண்மை. குட் லக் விஜய்


பேசும் தமிழன்
நவ 01, 2024 15:51

அறிவாலயத்தில் கூப்பிட்டு... அடி பின்னி எடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது...மறுப்பு அறிக்கை விடுகிறாயா இல்லை.... நாளையே உன்னை இண்டி கூட்டணியில் இருந்து வெளியே விரட்டி விடுவோம் என்று.... அதனால் தான் தினமும் அறிக்கை வருகிறது ராஜபக்சே நண்பரிடம் இருந்து !!!


Shunmugham
நவ 01, 2024 15:08

இவருக்கு மணநல ஆலோசனை மற்றும் உடனடி சிகிச்சை அவசியம். 2026 தேர்தல் வரை தாங்க மாட்டார். முதுகெலும்பில்லாத புழுவைப்போல தினமும் நெளிந்துகொண்டிருக்கிறார் திருமா.


prabhu
நவ 01, 2024 15:08

திரு திருமா அவர்களே விஜய் அவர்கள் மாநாட்டில் சொன்னது உங்களுக்கு பொருத்தம் என்று எப்படி சொல்கிறீர்கள் அவர் பொதுவாக தான் சொன்னார், எந்த கட்சி பெரும் சொல்லவில்லை, உங்கள் மனச்சாட்சி உங்களை குத்துகிறது . நீங்கள் அடிமை யாக இருப்பது உங்கள் விருப்பம், யாரும் சொல்லவில்லை உங்கள் உங்கள் கட்சி பெயரை சொல்லாத பொது நீங்கள் விமர்சனம் விமர்சனம் செஇகிறீர்கள்


uts
நவ 01, 2024 14:33

நீங்களும் தானே தீபாவளி ஆஃபர் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் (டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று...)


GMM
நவ 01, 2024 14:11

ஆட்சி அதிகாரத்தில் பங்கு விஜயின் பெருந்தன்மை. வாடிக்கையாளருக்கு தள்ளுபடி முதலாளி வருவாயில் இருந்து தான் . வரிப்பணத்தில் ஓட்டு பெற இலவச சலுகைகள் / தள்ளுபடி மூலம் பங்கு கொடுப்பது சரியா ? கூட்டணி அமைத்து அனைத்து அதிகாரத்தையும் தன்னகத்தில் வைத்து ஆண்டு வரும் திராவிடம் வீழும் விளிம்பு நிலையில் உள்ளது. அனைத்து கட்சியும் தனித்து நிற்க சட்டம் இருந்தால் , விஜயும் நின்று தான் ஆக வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை