உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்!

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து, த.வெ.க., தலைவர் விஜய் விருது வழங்கி கவுரவித்தார்.10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, த.வெ.க., சார்பில் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சட்டசபை தொகுதிவாரியாக மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது மற்றும் விருந்தளித்து, விஜய் வாழ்த்தி வருகிறார். முதற்கட்டமாக, 80 தொகுதிகளுக்கான மாணவர்களுக்கு, மே 30ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் கட்டமாக இன்று (ஜூன் 04) ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடு மற்றும் கட்சி அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், தன் பாதுகாப்பு கருதி, கட்சி நிகழ்ச்சிகளை எல்லாம் அங்கேயே அவர் நடத்தி வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

என்றும் இந்தியன்
ஜூன் 04, 2025 16:44

அறிவிலி மடியல் அரசும் ஜோசப் விஜயும் ஒரே பாதையில் பயணிக்கின்றார்கள். 4 பேரை பிடித்தோமா அவர்களுக்கு ஏதாவது கொடுத்தோமா டப்பா டப்பா அடித்தோமா என்ற எண்ணம் இருவருக்கும் மிக மிக சரியாகத்தெரிகின்றது


V Venkatachalam
ஜூன் 04, 2025 15:33

விடியல் பஸ் விடியல் காலை உணவு விடியல் மகளிர் உரிமைதொகை மாதிரி இதுவும் விடியும் பரிசுத்தொகை. ஆரம்பத்தில் தஞ்சாவூரில் வீட்டுக்கு ஒரு குடம் என்று ஆரம்பித்து வைத்த ஓட்டுக்கு லஞ்சம் இன்று பிரவாகமாக ஓடுகிறது. இதற்கு முடிவு எங்கே?


Anand
ஜூன் 04, 2025 15:15

இவர் கையாள வாங்கி,எப்படி உரு படுவீர்கள்


Svs Yaadum oore
ஜூன் 04, 2025 13:07

படிக்கும் பிள்ளைகள் மட்டும் இல்லது அம்மாக்காரியும் கூட சேர்ந்து போஸ் கொடுக்குதாம் .... இரெண்டு கிராம் தங்கம் கொடுக்கிறான் என்று பெண் பிள்ளைகளை கட்டி பிடித்து போஸ் கொடுக்கும் நடிகன் என்று கேவலமாக பேசும் விடியல் கூட்டணி கட்சிக்காரன் ..பிற்காலத்தில் அடுத்தவன் வீட்டில் வாழ வேண்டிய பெண்ணாம் ....இப்படியெல்லாம் பேசறது விடியல் கூட்டணிக்காரன் ...


Ramalingam Shanmugam
ஜூன் 04, 2025 13:02

இப்போ தான் தெரியுதா கிரிப்டோ ஒட்டு வாங்க தான் இந்த ட்ராமா


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 04, 2025 12:49

விஜய் போல ஒரு செயல் திறன் அற்ற பணக்கார கூத்தாடியிடம் விருது வாங்குவதை விட படித்த அறிவுள்ள பண்பாளர் செயல் திறன் மிக்க திரு. அண்ணாமலை போன்றவர்களிடம் பாராட்டு பெறுவது தான் மாணவ மாணவிகளுக்கு பெருமை.


Ramesh Sargam
ஜூன் 04, 2025 12:39

மாணவர்களுக்கு விஜய் வழங்கும் இந்த விருதுகள், நாளை தேர்தலில் வாக்குகள் ஆக மாறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Svs Yaadum oore
ஜூன் 04, 2025 11:35

10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து, நடிகன் விருது வழங்கி கவுரவித்தாராம் .....தொட்ட பேட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா என்று டப்பாங்குத்து பாடி குத்தாட்டம் போட்டு கவுரவம் செய்தார் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை