உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!

கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: '' நம்முடைய கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக, '', என மதுரையில் நடந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

சிங்கம் என்ன செய்யும்

மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசியதாவது: ஒரு சிங்கம் எப்போதும் பெக்கூலியர் தான். ஒரு முறை சிங்கம் கர்ஜித்தால் அந்த சத்தம் 8 கிமீ தூரம் அதிரும். அனைத்து திசைகளிலும் அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கும் விலங்குகளை தான் வேட்டையாடும். அதிலும் தன்னை விட பெரிய மிருகங்களை குறிவைத்து தாக்கும் ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும், உயிரில்லாதது கெட்டுப்போனதை தொட்டுப்பார்க்காது. அவ்வளவு பெரிய சிங்கம் எதையும் தொடாது. தொட்டால் விடாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=omm1leox&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காட்டுக்குள் எல்லையை வகுத்து கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல் அலட்டிக்காமல் கெத்தா, தனியாக வந்து அத்தனைக்கும் தண்ணி காட்டும். எப்போதும் எதிலும் தனது தனித்தன்மையை இழக்காது. சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும். காட்டில் நரிகள், குள்ளநரிகள் இருக்கலாம். ஆனால் அந்த காட்டின் ராஜா சிங்கம் தான்.சிங்கத்தை பற்றி பேசிட்டு சிங்கக்குட்டிகளையும் சிங்கப்பெண்களை பேசாமல் இருக்க முடியுமா? என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர், தோழிகளுக்கும் நேரில் வர முடியாத சூழலில் வீட்டில் இருந்தபடியே இந்த மாநாட்டை டிவியில் பார்த்து கொண்டிருக்கும் எனது அக்காக்கள், தாய்மார்களுக்கு எனது வணக்கம். என்னுடைய உயிர் வணக்கம். வீரம் விளையும் மதுரை மாமண்ணை வணங்குகிறேன்.

விஜயகாந்த்

மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறு தான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன்.இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான்.இந்த மண்ணில் கால் வைத்த பிறகு ஒருவரை பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. சினிமானாலும், அரசியல் என்றாலும் சரி நமக்கு பிடித்தது எம்ஜிஆர்.அவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை போன்ற குணம் கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுரை மண்ணை சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமாக நம்முடன் நிற்பவர்கள். அதற்கு அடையாளம் தான் மதுரை மண். தவெக கையில் எடுத்து இருக்கும் அரசியல் அப்படி போன்றது தான். உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்லவர்கள் அரசியல், நல்லவர்களுக்கான அரசியல், நாட்டு மக்களுக்கான அரசியல் நல்லது மட்டுமே செய்யும் அரசியல்.இதோ நம்முடைய 2வது மாநில மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.அப்படித்தான் இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்து இருக்கிறோம்.

எத்தனை கூக்குரல்

1967, 1977 ல் அரசியல் மாற்றம் நடந்ததை போல் 2026 லும் மாற்றம் நிகழப்போகிறது என்று உறுதியாக சொல்லும் மாநாடு தான் நம்முடைய 2வது மாநில மாநாடு. விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு வெற்றித்திருவிழா. அதற்கு பிறகு தட்பவெப்பநிலையை மாற்றியது. எத்தனை குரல். நாம் அந்த குரல்களை காதில் போடாமல் மக்கள் குரலை மட்டும் கேட்டுக் கொண்டு நமக்கு எதிராக வரும் அத்தனை கூக்குரலையும் சின்னதாக ஒரு சிரிப்போடு கடந்து வந்து இருக்கோம்.அதில்லாமல் மாநாட்டில் ஒலிக்கும் குரல், இந்த ஒற்றை தமிழ் மகனின் குரல் மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழகத்தின் குரல். தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் ஒலிக்கும் குரல்இந்த சினிமா என்ற மாபெரும் கலை ஆயுதத்தின் வாயிலாக ஜாதி, மதம் இனம், பாலினம் கடந்து நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் நம்முடைய தோழர்களாக நம்மோடு பயணிக்க துவங்கியிருக்கும் அனைத்து மனிதர்களுக்காக ஒலிக்கும் குரல்.மாநில உரிமைக்காக சமூக நீதிக்காக மதசார்பின்மைக்காக ஒலிக்கும் குரல்.இந்த குரலுக்கு எதிராக எத்தனை கூக்குரல் வந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஒரு நாளும் ஓயவே ஓயாது.. நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே அவர் வரல, இவர் வரலை இவர் எங்கு வருவார் என ஜோசியம் சொன்னார்கள். கட்சி பெயர் அறிவித்த பிறகு கட்சி பெயர் தானே அறிவித்த பிறகு, மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் அது முடியாது என்றனர். பிறகு, மாநாடு எவ்வளவு பெரிய விஷயம். அதெல்லாம் ஒற்றை ஆளாக எப்படி செய்ய முடியும். ஆனந்த் பக்கத்தில் வைத்து கொண்டு மாநாடு எப்படி நடத்தி காட்ட முடியும். அதெல்லாம் முடியாது. மழை பெய்து கெடுத்துவிடும் என்றனர். பிறகு நடந்தது தெரியும்.

திரைக்கதை வசனம் பாடல்

இப்போது புதுசா ஒன்று சொல்ல துவங்கி உள்ளனர். ஆட்சியை பிடிப்பது எளிதானது இல்லை.இவர் நேரா ஷூட்டிங்கில் இருந்து வருவாராம். வந்து ஆட்சியை பிடிப்பாராம். இது எப்படி அவரால் முடியும்? அவரால் முடியவில்லை. இவரால் முடியவில்லை. அவருக்கே இத்தனை வருஷமாச்சு. இவரால் எப்படி முடியும் என ஒருபக்கம்.இன்னொரு பக்கம் கூட்டம் எல்லாம் ஓகே தான். எப்படி ஓட்டாக மாறும். இப்படி திரைக்கதை, வசனம் பாடல்.அரசியல்ஆய்வாளர்களுக்கு சொல்வது ஒன்று தான். லட்சக்கணக்கான கூட்டத்தில் மட்டும் விஜய் இருக்கிறார் என தப்புக்கணக்கு போட வேண்டாம் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்லாமல், ஆட்சியாளர்களுக்கு வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ஓட்டா என்பதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள். நம்முடைய கனெக்ட் எல்லாம் மக்களுடன் மட்டும் தான். நாம் யார் என அவர்களுக்கு தெரியும். அவர்கள் யார் என நமக்கு தெரியும். நாமும், மக்களும் எப்படி இருக்கிறோம் என ஆட்சியாளர்களுக்கு தெரியும். இருந்தாலும் விஜய் எதற்காக வந்துள்ளார். புதிதாக என்ன திட்டம் சொல்கிறார் என கேட்கின்றனர். சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.பெண் குழந்தைகள், பெண்கள் வயதானவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் எல்லாருக்கும் அரசின் சிறப்பு கவனம் தேவையோ அவர்களுக்கான அரசியல் அமைப்பதே நோக்கம்.

எதிரிகள் யார்

நம்முடைய நிலையில் வலிமையாக இருக்கிறோம். நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜ தான். நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக தான். ஏதாவது 'அண்டர்கிரவுண்ட் ஆதாயத்துக்காக டீல் போட்டு கொண்டு, கூட்டணி அமைத்து அரசியல் ஆதாயத்துக்காக ஊரை ஏமாற்றும் கட்சி தவெக அல்ல. யாருக்காகவும் எதற்காகவும் பயம் கிடையாது.மாபெரும் பெண்கள் சக்தி, இளைஞர் சக்தி,மக்கள் சக்தி நம்முடன் இருக்கிறார்கள். உலகம் முழுதும் வாழும் அனைவரும் என்னை விஜய், விஜி, தளபதி, என சொந்தம் கொண்டாடும் அன்பும் ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாஜ உடன் கூட்டணிவைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா என்ன.? இவ்வாறு விஜய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

Murthy
ஆக 28, 2025 12:33

கொள்கை, அரசியல் ....என்ன வித்தியாசம்??....இதென்ன சினிமாவா ......கூமுட்டை என்பது சரிதான் .


Matt P
ஆக 25, 2025 09:46

அப்படியானால் திமுகவின் கொள்ளையடிக்கும் கொள்கைகளுக்கு இவர் எதிரி அல்ல


Ram
ஆக 23, 2025 16:13

இவரது கொள்கைதான் என்ன? கொள்கையே இல்லாத போது கொள்கை எதிரி எப்படி உருவானார்


Sankaramani
ஆக 23, 2025 03:52

Vijay never talk about corruption and liquor and lawlessness in Tamilnadu.we don’t understand what is his policy. He is able to attract crowd because of his cinema background only. No knowledge about politics ,economy, growth etc


Kulandai kannan
ஆக 22, 2025 12:31

என் ஒரே எதிரி டிரம்ப்தான்


Mecca Shivan
ஆக 22, 2025 10:17

கடைசிவரை மக்களுக்கான நல திட்டங்கள் என்ன என்றும் தெளிவாக சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாடு என்னவென்றும் சொல்லவில்லை . வெறும் சினிமா பாணியில் வசனங்கள். இந்த வசனவேகத்தையும் நடிப்பையும் பார்க்கும்போது கமலை விட இவர் சிறந்த நடிகர் என்று சொல்லதோனுகிறது


suresh Sridharan
ஆக 22, 2025 09:56

எழுதி கொடுத்தது பேசுகிறார் பேசட்டும்


Nellai Baskar
ஆக 22, 2025 09:45

உங்கள் கொள்கை என்ன? பாஜக வின் கொள்கை என்ன ? இதை பற்றி விரிவாக விளக்குங்கள்.


பேசும் தமிழன்
ஆக 22, 2025 09:12

அரசியல் எதிரி.. கொள்கை எதிரி.. இரண்டுக்கும் ஏழு வித்தியாசங்கள் கூறுங்கள்.. என்னப்பா கலர் கலரா ரீல் விடுற??? திமுக ஆட்கள் அப்படி தான் சொல்ல சொன்னார்கள் என்று கூறி விட்டு போப்பா !!!


KATHIR ANAND
ஆக 22, 2025 07:58

IN EDUCATION , TAMIL NADU STANDS FIRST , BUT THESE EDUCATED YOUNG FELLOWS HAVE WASTED A WHOLE DAY SITTING IN THE SCORCHING SUN TO JUST SEE AN ACTOR . IT IS A STUPID GATHERING OF HIS SENSELESS FANS . DOES THIS VIJAY KNOW HOW TO RULE A STATE ,AND HANDLE THE BUREAUCRACY ? DOES HE HAVE ANY SECOND RUNG QUALIFIED PEOPLE AROUND HIM TO BECOME MINISTERS . ALL THESE FELLOWS WILL BE THE MOST CORRUPT GOONDAS TO ROB THE EXCHEQUER AND RUIN THE STATE . AROUND Rs. 500 CRORES HAVE BEEN SPENT FOR THIS ONE MAN SHOW . HE IS AN UNREACHABLE MULTIMILLIONAIRE PROTECTED BY 100 BOUNCERS AND KEEPING 100 FEET DISTANCE FROM COMMON MAN . VIJAY IS 100 % UNFIT TO BE A LEADER . HE HAS ONLY FACE VALUE , AND NO MENTAL ABILITY BUT HIS A GOOD CINE ACTOR FIT FOR UTOPIAN DRAMATICS .


Udaya
ஆக 22, 2025 08:12

How many in younger generation in Tamilnadu are able to understand your right thinking comments. They have already drowned in various unnecessary activities