உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஸ்கோஸ் நுால் இறக்குமதி: நுாற்பாலைகள் கடும் பாதிப்பு

விஸ்கோஸ் நுால் இறக்குமதி: நுாற்பாலைகள் கடும் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: சீனாவில் இருந்து விஸ்கோஸ் நுால் இறக்குமதி அதிகரித்துள்ளதால், தமிழக நுாற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் இந்தியாவுக்கு, பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் நுால்கள், 'சீனா யார்ன்' என்ற பெயரில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. கரூர், பள்ளிபாளையம் உட்பட விஸ்கோஸ் நுால் உற்பத்தி செய்யும் தமிழக நுாற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர் சூழல் உருவாகியுள்ளது. சீனா தன் வசம் உள்ள பொருட்களை, மற்ற நாடுகளுக்கு மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்புக்கான விஸ்கோஸ் நுாலிழை இறக்குமதி அதிகரித்துள்ளதால், தமிழக நுாற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதிகம் பயன்படுத்தும், 30ம் நம்பர் விஸ்கோஸ் நுால், கிலோ 198 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அனைத்து வரிகள் உட்பட, சீன இறக்குமதி விஸ்கோஸ் நுால், கிலோ 185 ரூபாய்க்கு கிடைக்கிறது. கிலோ, 13 ரூபாய் வித்தியாசத்தில், நுாலிழை இறக்குமதி செய்யப்படுவதால், நுாற்பாலைகள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றன. இது, ஆரோக்கியமான நிலை அல்ல; உள்நாட்டு தொழிலை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

visu
ஏப் 13, 2025 08:29

ஹும் எல்லாம் கோட்டா சிஸ்டம் படுத்தும் பாடு குறைந்த மார்க் எடுத்தவருக்கு இடம் கொடுப்பதால் எல்லோரும் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்துக்கு ஒருவருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் அப்பவாவது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்து இது ஒரு முடிவுக்கு வரும் இப்ப ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்றவர்களே மீண்டும் பெற்று இது ஒரு சிறு வட்டத்துக்குள் இருக்கு பலன் அ னைவருக்கும் சென்று சேரவில்லை


அப்பாவி
ஏப் 13, 2025 07:22

இது வெறும் டிரெய்லர் மட்டுமே. இந்தியாவும் டாரிஃப், அல்லது ஆண்ட்டி டம்பிங் டூட்டின்னு போட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். தேவையில்லாம டாரிஃப் ஐ உயர்த்துவரற்கு ட்ரம்ப் ஒண்ணும் பைத்தியம் அல்ல.


Kasimani Baskaran
ஏப் 13, 2025 06:34

சீனாவில் குறைந்தபட்சம் ஊதியம் கிடையாது - ஆகவே நிறுவனங்கள் கிராமப்புறத்தில் தொழிற்சாலைகளை நிறுவி அங்குள்ளவர்களுக்கு சொற்பத்தொகை சம்பளத்தில் வேலை வாய்ப்பை வழங்கி உற்பத்திச்செலவை வெகுவாக குறைக்கிறது. கல்வி கட்டாயம் என்பதால் ஒருவரை அவரவர் தாய் மொழியிலேயே கற்ப்பிப்பதால் எளிதில் கற்றுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை