உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!

அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!

மதுரை: ''அதிமுகவை ஒரு திராவிட இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.நிருபர்: தேஜ கூட்டணியில் இருந்து முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வெளியேறுகின்றனர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முக்கிய தலைவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?திருமாவளவன் பதில்: இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அந்த கட்சிக்கு உள்ளே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளார்கள். அவர் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார். ஆனால் இன்னும் அவர் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாக சொல்லலாம். என்றாலும் கூட, இது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Yasararafath
செப் 05, 2025 22:48

அஇஅதிமுக மீது திருமாவளனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை.


Natarajan Mahalingam
செப் 05, 2025 18:42

ஒரு நாள் காத்து இருக்கவும், தல திருமா முற்றிலும் மாறுபட்ட கருத்தை நாளை கூறுவார். திமுக தான் உண்மையான திராவிட கட்சி என்பார் . திருமா அவர்கள் இன்னும் ஒரு சீமான் ஆக மாறிவிட்டார் . காமெடி செய்தி, கடந்து போங்கள் . அவ்வளவு தான்.


Tamilan
செப் 05, 2025 16:51

மதவாத குண்டர்களைப்பற்றித்தான் கூறுகிறார்


Sundar R
செப் 05, 2025 16:51

தமிழகத்தில், தற்போது, அனைத்து பட்டியல் சமுதாய மக்களின் புதிய தலைவர் மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் தான். அவர் ஒவ்வொரு தடவை தமிழகம் வரும்போதும், மத்திய அரசு மக்களுக்கு இதை செய்துள்ளது என்ற செய்தியைக் கூறுகிறார். தமிழக அரசியலையும் THUMB CONTROL - ல் வைத்திருக்கிறார். "ஆப்பரேஷன் சிந்தூர்" நடந்த பிறகுதான் திருமாவளவன் ஒரு பாக்கிஸ்தானியர் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். இந்த யோக்கியதையை வைத்துக்கொண்டு அரசியலில் திருமாவளவன் வெற்றி பெற முடியாதே. திருமாவை நினைத்தால், ரொம்ப கவலையாக இருக்கிறது என்று அவருடைய ஆதரவாளர்களே சொல்லி வருத்தப்படுகிறார்கள். கருணாநிதி குடும்பத்தினரின் கைப்பாவையாக திருமாவளவன் இருப்பதால், பட்டியல் சமுதாய மக்களின் பெரிய பிரச்சினைகளான வேங்கை வயல், தூய்மை பணியாளர்கள், அதிகாரியை காலில் விழ வைத்தது போன்றவை நடந்த போதும், கேட்டல் குறைபாடு உள்ளவர் போல் திருமாவளவன் இருக்கிறார். திருமாவளவன் தெலுங்கு கிறிப்டோ கிறிஸ்தவரான காரணத்தால், பட்டியல் சமுதாய ஹிந்துக்களுக்கு அவரால் பத்து நயா பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லை. எனவே, தமிழகமெங்கும் உள்ள பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பட்டியல் சமுதாய ஹிந்து ஊழியர்கள், எல். முருகன் அவர்களோடு சேர்ந்து, அவரிடம் அவர்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்பது பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்து ஊழியர்களுக்கு பெரும் வெற்றியைப் பெற்றுத்தரும். அவர்களின் எதிர்காலத்திலும் பல நன்மைகளைப் பெற்றுத் தரும்.


ஆரூர் ரங்
செப் 05, 2025 15:52

திராவிட என்பதே தென்னிந்திய பிராமணர்களை மட்டுமே குறிக்கும் அடைமொழி. புதிய காஞ்சிபுரம் மடாதிபதியின் குடிப்பெயர் கூட திராவிட் தான். ஆனால் திராவிடர் என்று ஒரு இனம் உள்ளதாக பரப்புவது பிழைப்பு அரசியல். எந்த பழந்தமிழ் இலக்கியத்திலும் திராவிட எனும் சொல் கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை