உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் ஆசை: துரை வைகோ

மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் ஆசை: துரை வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'அங்கீகாரம் பெற, 8 சட்டசபை தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும். 8 சீட்டுகள் ஜெயிப்பதற்கு குறைந்தபட்சம் 10, 12 இடங்களில் நிற்க வேண்டும்' என ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.திருச்சியில் ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 12 சீட்டுகள் நாங்கள் எங்கேயும் கேட்கவில்லை. குறைந்தபட்சம் எல்லா இயக்கங்களும் அதிக சீட்டுகள் கேட்கின்றனர். இயக்கங்கள் எந்த கூட்டணியிலும், கூடுதல் இடங்கள் கேட்கின்றனர். இது கட்சியின் உரிமை. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆசை.அதே மாதிரி தான் நீங்கள் கேட்கும் போது, நானா சொல்லவில்லை. நீங்கள், எல்லோரும் கேட்கிறார்களே, நீங்கள் கேட்க மாட்டீர்களா என்று கேள்வி கேட்கும் போது நான் சொல்கிறேன், எங்களுக்கும் ஆசை இருக்கிறது. குறைந்தபட்சம் ஆசை. கட்சியின் அங்கீகாரம்.ம.தி.மு.க., மீண்டும் அங்கீகாரத்தை பெற வேண்டும். இது எங்களது அடிப்படை உரிமை. அங்கீகாரம் பெற, 8 சட்டசபை தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும். 8 சீட்டுகள் ஜெயிப்பதற்கு குறைந்தபட்சம் 10, 12 இடங்களில் நிற்க வேண்டும். இது எங்களுடைய ஆசை. அதே வேளையில், இதனை முடிவெடுப்பது தலைவர் வைகோ. இதற்கு கூட்டணி தலைமை ஒப்புதல் கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையை தான் நான் விவரித்து சொல்லியிருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Bhaskaran
ஜூலை 18, 2025 04:07

இவனுக ளுக்கு இரண்டு சீட்டே அதிகம் .தனியா 234 தொகுதியிலும் நின்று நோட்டா விடம் தோற்றுப்போய் உன் பலத்தை காட்டவும்


Natarajan Ramanathan
ஜூலை 13, 2025 08:26

மதிமுக எட்டு இடம் பெறவேண்டுமானால் என்பது இடங்களிலாவது நின்றால்தான் சாத்தியம்.


தாமரை மலர்கிறது
ஜூலை 12, 2025 01:23

பிஜேபி அணியில் சேர்வதற்கு துரை வைகோ விரும்புகிறார். ஆனால் ராமதாஸ் மாதிரி வைகோ இடைஞ்சலாக உள்ளார். இருப்பினும், விரைவில் துரை மதிமுகவை பிஜேபி தலைமையிலான அணியில் கொண்டுவந்து சேர்ப்பார்.


tamilvanan
ஜூலை 11, 2025 21:49

ஏன் தொண்டர்களை வீணில் இழுக்கிறீர்கள்? வைகோ மற்றும் என் ஆசை என்று உண்மையை வெளிப்படையாக தைரியமாக கூறுங்களேன். அப்படியே அதிகம் சீட் கிடைத்தால் அங்கு போட்டியிட உங்கள் குடும்பத்திலிருந்து தான் தேர்ந்து எடுப்பீர்கள். அப்புறம் ஏன் தொண்டர்களுக்கு ஆசை காட்டுவது?


KR india
ஜூலை 11, 2025 20:32

தி.மு.க கூட்டணியில், கடந்த சட்டமன்ற தேர்தலில், ம.தி.மு.க விற்கு வழங்கப்பட்ட நான்கு இடங்கள் இந்த முறை கிடைக்க வாய்ப்பு குறைவு. காரணங்கள் 1 உதயசூரியன் மீது டார்ச் லைட் அடித்ததில், பேட்டரி ரிப்பேர் ஆகி வீழ்ந்து கிடக்கும், கமலின் டார்ச் லைட்- க்கு : நாலு இடங்கள் கொடுக்க வேண்டியது உள்ளது. 2 செத்தாலும், உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி இடாது என்று, பாராளுமன்ற தேர்தல் சமயத்தில், உதயசூரியன் சின்னம் மீதான வெறுப்பை, திருச்சி கூட்டத்தில் உமிழ்ந்ததும் கூட, ஒரு காரணமாக இருக்கலாம் 3 வரும் சட்டமன்ற தேர்தலில், கூடுதல் கட்சிகளை சேர்க்க உள்ளோம் என்று தி.மு.க அறிவித்துள்ளதையும், கவனிக்க வேண்டும். தி.மு.க கூட்டணியில் இடம் பெறவிருக்கும், புதிய கட்சிக்கு தொகுதி ஒதுக்க வேண்டியது உள்ளது. 4 கூட்டணியை, முறித்து கொண்டு ம.தி.மு.க வெளியேறினால், ஒரு சிறு பாதிப்பு கூட தி.மு.கவிற்கு வராது 5 ஏற்கனவே, கொலைப்பழி சுமத்தி, தி.மு.க தன்னை வெளியேற்றியது என்று திரு . வைகோ கூறித்தான், ம.தி.மு.க தொடங்கப்பட்டது. இப்பொழுது, துரோகி பட்டம் சுமத்தி, ம.தி.மு.க வின் தூண்களில் ஒருவரான மல்லை சத்யா, கூடிய சீக்கிரம் ம.தி.மு.க வை விட்டு வெளியேற்றப்படவிருக்கிறார். அல்லது அவராகவே, வெளியேறவிருக்கிறார்.இதன்மூலம், கட்சியின் மிச்சம் மீதி இருக்கும் செல்வாக்கும் "டமார்" என்று கீழே விழப் போகிறது. இதை எல்லாம், கணக்கிட்டு, இரண்டு சீட் மட்டுமே தர முடியும் என்று தி.மு.க கூறலாம். பின்னர், ம.தி.மு.க தலைமை, தி.மு.க விடம், கெஞ்சி கதறி, கூடுதலாக, ஒரு சீட் பெற வாய்ப்புண்டு. ம.தி.மு.க.வுக்கு, , மொத்தம் மூன்று சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. தி.மு.க என்ன கூறுமென்றால், நடிகர் விஜய் கட்சிக்கு நீங்கள் சென்றால், உங்களுக்கு 15 சீட் கிடைக்கும். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட தேறாது. நாங்கள் கொடுப்பது, சீட் அல்ல. மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கொடுக்கிறோம் என்று கூறி சமாதானப் படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்


Natchimuthu Chithiraisamy
ஜூலை 11, 2025 20:08

தொண்டர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் எந்த சூழ்நிலைகளிலும் அஞ்சுவதில்லை நாட்டுக்காக உயிரை விடுவார்கள் என்று அடித்துவிடு மகனே


R.SANKARA RAMAN
ஜூலை 11, 2025 19:56

ஆசை தோசை ,அப்பளம், வடை


Subburamu Krishnasamy
ஜூலை 11, 2025 19:46

Great political business loss to Kalingapatti Gopal family. There is no chance of revamping the political business. Please leave the politics and try your luck in trading business for decent living. Political service is the past history to your family.


Sivagiri
ஜூலை 11, 2025 18:48

தொண்டர்கள் :- அய்யய்யோ சாமீ , அப்படியெல்லாம் ஆசை ஒன்னும் மண்ணாங்கட்டியெல்லாம் கிடயாது . . ஒங்களுக்கு ஆசை இருந்தால் போயி கேளுங்க , . . எங்களுக்கு எங்க பொழப்ப பாக்குறதே பெரிசா இருக்கு .இவருக்கு ? . .


சோழநாடன்
ஜூலை 11, 2025 18:32

திமுகவை தனித்த பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்த்துவதே மதிமுகவின் பணி என்று தந்தை ஸ்டாலின் காலைப் பிடித்துக்கொண்டு திமுகவை எந்த நிலையிலும மதிமுக ஆதரிக்கிறேன் என்று தந்தை வைகோ கதறுகிறார். மகன் துரை 12 தொகுதியைத் திமுக மதிமுகவிற்கு ஒதுக்கவேண்டும் என்று கண்டிப்புடன் கர்ச்சிக்கிறார். 12 தொகுதி மறுத்தால் அணி மாறுவேன் என்று சொல்லாமல் சொல்கிறார். எப்படி பார்த்தாலும் மதிமுக தமிழ்நாட்டிற்குத் தேவையற்ற கட்சியாகவே உள்ளது. திமுக மதிமுகவைக் கூட்டணியிலிருந்து விலக்கவேண்டும். அப்போதும் அப்பன், மகனுக்குப் புத்திவராது.


புதிய வீடியோ