உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி; அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஹிந்து மக்களிடையே ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலை செய்கின்றனர்,' என்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவர் பேசியதாவது; இது ஒரு சாதாரணமான கூட்டம் இல்லை. ஒரு இனம் தனது குரலை உரக்க சொல்லிக் கொண்டே இருக்கிறது. தனது உரிமையை நிலைநாட்ட விரும்புகிறது. தனது வாழ்வியல் முறையை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஏங்குகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8pe9bbz7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சனாதன தர்மம் பிரச்னைக்குள்ளாக்கப்படுகிறதோ, அங்கே நான் இருப்பேன் என்று சொல்லி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இங்கே வந்துள்ளார். உலகம் முழுதும் யூதர்கள் 0.2 சதவீதம் உள்ளனர். அவர்கள் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்ததற்காக 4 நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். எங்களின் வாழ்வியல் முறைக்கு தொந்தரவு செய்தால் எழுந்து நிற்போம் என்று இஸ்ரேல் நாடு நிற்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா, 37 மணிநேரம் பறந்து வந்து இன்னொரு நாட்டின் மீது குண்டை வீசி விட்டு திரும்பிச் சென்றுள்ளது. ஆனால், இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டால் சில மனிதர்களுக்கு பிரச்னை. நம்ம ஊரில் மட்டும் தான் நம்முடைய வாழ்வியல் முறையை தொந்தரவு செய்துள்ளனர். பஹல்காமில் நீ ஹிந்து மதமா? என்று கேட்டு 26 உயிர்களை சுட்டுக் கொன்றனர். என்னுடைய வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால், எழுந்து நிற்பேன் என்று நாமும் எழுந்து நிற்கிறோம். ஹிந்து என்பதற்காக நம் தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த மதத்தை பின்பற்றினால் மட்டும் நம்முடைய ஓட்டுக்களை பெற்று அதிகாரத்தில் இருந்தவர்கள் கோவில்களை கிண்டல் செய்கிறார்கள். ஹிந்து மக்களிடையே ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலை செய்கின்றனர். கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்னை வரக் கூடாது. எங்களின் குழந்தைகள் பள்ளிக்கு தைரியமாக திருநீறு வைத்துக் கொண்டு போக வேண்டும். வட தமிழகத்தில் பள்ளிக்கு ருத்ராட்சை கொட்டை வெளியே அணிந்து செல்ல வேண்டும். இந்த மாநாட்டில் திரண்டு உள்ள கூட்டம், எழுச்சியை காட்டுகிறது. இது, ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி. காசு கொடுக்காமல், கொள்கைக்காக 5 லட்சம் பேர் திரண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவ மதம் 230 கோடி பேர். முஸ்லிம்கள் 200 கோடி பேர். ஹிந்துக்கள் 120 கோடி பேர். எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் 190 கோடி பேர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் பல நாடுகளில் பெரும்பான்மையாக உள்ளனர். ஹிந்துக்கள் பெரும்பான்மை உள்ள நாடுகள் 2 மட்டுமே. முருகனின் அறுபடை வீடுகளில் ரூ.50, ரூ.100 என கட்டணம் இல்லாமல் தரிசிக்க முடியுமா? 2026ம் ஆண்டு தேர்தலுக்கும், இந்த மாநாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நம்முடைய வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக நாம் இங்கு திரண்டுள்ளோம். 44,000 கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான 344 கோவில்களும் அதில் அடங்கும். எங்கியாவது ஒழுக்கமாக அறநிலையத்துறையின் செயல்பாடுகள் உள்ளதா? பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும், பணமில்லாதவர்களுக்கு ஒரு மாதிரியும் நடத்தப்படுகிறது. இதை மாற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராஜா
ஜூன் 23, 2025 22:56

காவல் துறைக்கு தகுதி இல்லை என்று அறிந்த பிறகு அரசியல் ரீதியாக பிழைக்க வந்த மலை எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியுமோ


திகழ்ஓவியன்
ஜூன் 23, 2025 07:27

சரி ஓசி சோறு பிஜேபி வருவதற்கு முன்னர் ஹிந்துக்களை யார் பாதுகாத்தது


பேசும் தமிழன்
ஜூன் 23, 2025 13:21

ஓசி பிரியாணி.... ஓசி குவாட்டர்.... அண்டா திருட்டு எல்லாம்.... உங்கள் வேலை.... அவர் மக்களுக்கு சேவை செய்ய பார்த்த வேலையை விட்டு விட்டு வந்தவர்.... அது சரி உங்களுக்கு வீரமணி மீது அப்படி என்ன கோபம்..... அழகிரி அவர்களின் மகன் சொன்னதை நீங்களும் சொல்கிறீர்கள் ???


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 04:06

சிறுபான்மையினர் மட்டும் மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்பது சுத்த பயித்தியக்காரத்தனம். ஆலயங்களில் இருந்து அரசாங்கம் வெளியேறவேண்டும் - அப்படி முடியவில்லை என்றால் சர்ச் மற்றும் மசூதிகளில் தங்கள் ஆட்களை நியமிக்க வேண்டும். கணக்குகள் பொது வெளிக்கு வரவேண்டும். அதுதான் உண்மையான வெளிப்படைத்தன்மை.


raja
ஜூன் 23, 2025 03:32

மலை சரியாத்தான் சொல்லி இருக்காரு.... இந்த கேடுகெட்ட இழிபிறவிகளான இந்து விரோத திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர கொள்ளை கூட்ட திருட்டு குடும்பத்தை தமிழக இந்துக்கள் அடித்து விரட்டும் காலம் நெருங்கி விட்டது ..


M Ramachandran
ஜூன் 23, 2025 00:06

கயவர்களின் பொண்டாட்டிக்கு தனி தரிசனம். இந்த அநியாயம் நடப்பது வேறெங்கும் நடக்காது. திருடர்கள் கயவர்கள் கையில் சாவியை ஒப்படைபதற்கு ஒப்பாகும்.


Ramesh Babu
ஜூன் 22, 2025 22:41

இந்த மாநாட்டில் எவரும் அரசியல் பேசவில்லை. அவர் பேச்சு பேசிய அரசியல் வாதிகளுக்கு எதிராக கேட்ட கேள்விகளே.


bogu
ஜூன் 22, 2025 22:35

ஞாயிற்று கிழமையில உங்க கும்பல் யாருக்கு வோட்டு போடவேண்டும் அப்படின்னு சொல்லல வயிறு எரியுதா ஐஸ் வாட்டடர் குடிக்க போவியா


முருகன்
ஜூன் 22, 2025 22:29

ஆன்மீக மாநாட்டில் அரசியல் பேசுவது ஏன் எந்த கடவுள் அரசியல் பேச சொல்கிறது ? பதவி ஆசை


Kjp
ஜூன் 22, 2025 22:45

நல்லா படிச்சு பாருங்க.அவர் எங்கே அரசியல் பேசினார்.அரண்டவன் கண்ணுக்கு இருண்ட இதெல்லாம் பேய்.


vadivelu
ஜூன் 23, 2025 06:54

நானும் தேடி பார்த்தேன், அரசியலை எங்கும் பேச இல்லையே. உங்க கண்ணில் பட்டதை எடுத்து விடுங்க.


பேசும் தமிழன்
ஜூன் 23, 2025 08:13

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல.. அங்கே கூடிய கூட்டம் உங்களை பயம் கொள்ள வைத்து இருக்கிறது.. நாம் குவாட்டர் ஓசி பிரியாணி கொடுத்தாலும் இவ்வளவு ஆட்கள் வருவதில்லை.. வரும் தேர்தலில் கண்டிப்பாக ஆப்பு வைத்து விடுவார்கள் போல.. அந்த பயம் தான் உங்களை இப்படி புலம்ப வைத்து விட்டது.


சமீபத்திய செய்தி