உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவு: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்!

வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவு: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்!

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன'' என தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பேராசிரியர்களும், ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு, போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.தி.மு.க., ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கடன் சுமை, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? உடனடியாக, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிலையில், ஆசிரிய பெருமக்களை நிறுத்த வேண்டாம் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

சைக்கிள் பயணம்

உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு, கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 100 கிலோமீட்டர் துார சைக்கிள் பயண சவாலை இன்று (ஜூன் 05) பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெற்றிகரமாக மேற்கொண்டார். அவர், இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

வல்லவன்
ஜூன் 05, 2025 22:28

வருங்கால அமெரிக்க அதிபர்


V Venkatachalam
ஜூன் 05, 2025 19:58

அண்ணாமலைக்கு நல்லா தெரியும் வெற்று விளம்பரத்திலேதான் திருட்டு திராவிட ஆட்சி நிக்குது. விளம்பரம் இல்லேன்னா மக்கள் மறந்துடுவாங்களே.அப்புறம் நான்காண்டு நல்லாட்சி ன்னு உதார் விட முடியாதே..


venugopal s
ஜூன் 05, 2025 18:22

ஐந்து மணி நேரத்தில் நூறு கிலோமீட்டர் சைக்கிள் பயணம் என்றவுடன் இவர் இருபதாயிரம் புத்தகங்கள் படித்தது ஞாபகம் வருகிறது!


V Venkatachalam
ஜூன் 05, 2025 19:53

விக்கு தலைவர் 90 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் ன்னு சொன்னது க.உ.பீக்கு ஞாபகத்துக்கு வரலியா? எல்லாரும் காலில் விழும் போது குப்புற விழுவார்கள். இந்த க.உ.பி மல்லாக்க விழுந்து கிடக்கிறது.


அசோகன்
ஜூன் 05, 2025 15:34

அண்ணாமலை போன்ற நேர்மையான தேச பற்றுக்கொண்ட தலை சிறந்த தலைவர் இந்த நூற்றாண்டில் இனி கிடைக்கமாட்டார்கள்..... தமிழக மக்கள் நாம் எல்லோரும் அண்ணாமலைக்கு தோள்கொடுத்து உடன் நிற்போம்


Rengaraj
ஜூன் 05, 2025 15:31

சினிமா கவர்ச்சியில் மயங்கி அந்த போதையில் இளைஞர்கள் கூட்டம் விஜய் என்ற ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு வாய்ஜாலத்தில்பேசும் கூச்சல், வெற்று ஆரவாரம் , பழங்கதைகள் ஆகியவை அந்த போதையிலிருந்து எழுந்திருக்க விடாமல்மேலும் அழுத்துகிறது. புள்ளிவிவரங்களோடு அண்ணாமலை பேசினால் சமூக ஊடகங்கள் , மற்றும் காட்சி ஊடகங்கள் அவற்றை மக்களுக்கு சென்று சேரவிடாமல் தங்கள் பங்குக்கு மறைக்கின்றன. இவற்றையும் மீறி மக்களை சிந்திக்கச்செய்ய , உண்மையை விளக்கி பாஜக தொண்டர்கள் கடுமையாக போராடவேண்டும்.


Ambedkumar
ஜூன் 05, 2025 14:50

எதிர்காலப் பிரதமர்


Ambedkumar
ஜூன் 05, 2025 14:50

இவர் வருங்கால முதல்வர்


தத்வமசி
ஜூன் 05, 2025 13:56

இந்த விவரமெல்லாம் எடப்பாடியோ, விஜயோ, சீமானோ பேசமாட்டார்கள். பொத்தாம் பொதுவாக பேசி விட்டுச் செல்வார்கள்.


Barakat Ali
ஜூன் 05, 2025 15:06

நீங்கள் கூறும் நபர்கள் இவற்றைப்பேசினால் திமுக தரப்பிலிருந்து அவர்களுக்கான நிதி கட் செய்யப்படும் ....


Palanisamy Sekar
ஜூன் 05, 2025 12:46

நாலரை லட்சம் கோடி ரூபாய்க்கு வெள்ளை அறிக்கையை கேட்க வேண்டும். இந்த தொகை எதற்க்காக எப்படி செலவு செய்தார்கள் என்கிற விவரங்களை கேட்கவேண்டும். ஒரு திட்டமும் இதுவரை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவே இல்லை. யார் யாரோ ஆகாஷாம் ரிட்தீஷாம் நைட் பார்ட்டியாம் கலந்துகொண்ட பெண்களுக்கு 35 லட்ச ரூபாய் சன்மானமாம். இப்படி சொந்தம் பந்தம் நண்டு சிண்டுகளுக்கு எல்லாம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளி அள்ளி கொடுத்தாராம் சின்னவரும் அவருடைய மன்ற தலைவரும் சேர்ந்து. ED விசாரணைக்கு பயந்துபோய் துபாய் ஓடிட்டாங்களாமே.. இப்படி வாரிவாரி வாங்கினா இன்னும் ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கித்தான் ஆகணும். இந்த நாடும் பணமும் நிலமும் சொத்துக்களும் அந்த ஒரே குடும்பத்துக்கு போய்விட்டதகாவே மக்கள் பேசுறாங்களே.. அனகாபுத்தூரில் வீடுகளை இடித்து தள்ளிய இந்த கடன்கார அரசு ரிட்த்தீஷ் வீட்டை முன்னூறு கோடிக்கு கட்ட அனுமதிச்ச ரகசியம் என்னண்னு எல்லோருமே கேட்குறாங்க. இதுதாங்க அணணமலை அந்த பணத்துக்காக செலவு கணக்கு. நீங்கள் விசாரித்து அந்த டீடெயில்ஸ் எல்லாம் மக்களுக்கு தெளிவாக சொன்னீங்கன்னா எல்லார் காதுகளிலும் விழும்.


Kamal kanth
ஜூன் 05, 2025 12:31

இந்த செயல்பாட்டை ஸ்ட்ராவாவில் பகிர்வது அவர் மட்டும்தான் செய்ய முடியும், அப்படியானால் இந்த ஸ்கிரீன்ஷாட்டை யார் பகிர்ந்தது? அப்போ தன்னையே விளம்பரப்படுத்திக் கொள்கிறவர் யார்?