உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழக செய்திகள் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் செய்திகளை கொண்டு சேர்ப்பதில் தமிழின் நம்பர் ஒன் இணையதளமாக விளங்கும் தினமலர்.காம் இன்று (ஆக.,29) கால் நூற்றாண்டை நிறைவு செய்து 26வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.தினமலர் நாளிதழ் படிக்க முடியவில்லையே, தமிழகத்தின் செய்திகள் தெரிவதில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு தினமலர் இணையதளம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. காரணம் திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்றாற்போல நமது தமிழ் மக்கள் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாதா... நமது உள்ளூர் நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியாதா... என்ற அயல் நாட்டு தமிழர்களின் ஏக்கத்தை நிறைவேற்றி கொடுத்தது தினமலர்.காம் . தமிழ் செய்திகளுக்கு என வெகு சில இணையதளங்களே இருந்த காலத்தில் டிஜிட்டல் உலகில் நுழைந்தது தினமலர். துவக்கப்பட்ட சில நாட்களிலேயே உலக தமிழர்களின் செல்லப்பிள்ளையாக மாறியது. வளர்ந்து வளர்ந்து இப்போது பல கோடி வாசகர்களுடன் தமிழின் முன்னணி இணையதளமாக தினமலர் திகழ்கிறது.இணையதளத்தில் விளையாட்டு, ஆன்மிகம், வண்ண, வண்ண படங்களுடன் சினிமா, வர்த்தகம், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக உலக தமிழர் செய்திகள், வெளி மாநில செய்திகள், ஜோசியம், காலண்டர், வெளியே தெரியாத வித்தியாசமான மனிதர்களை வெளி உலகிற்கு காட்டும் நிஜக்கதை, பொக்கிஷம், சிந்தனைக்களம், 360 டிகிரி பார்வையில் நூற்றுக்கணக்கான கோயில்கள், இலக்கியம், அரசியல், கதை என 28 ஆயிரம் புத்தகங்களின் விவரம் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டதாக தினமலர்.காம் விளங்குகிறது. தினமலர் இணையதள டி.வி.,
தினமலர்.காம் கால சூழலுக்கு ஏற்ப பல பரிமாணங்களை பெற்றது. உடனுக்குடன் டி.வி.,க்கு இணையாக தினமலர் இணையதள டி.வி.,யில் லைவ், நியூஸ் புல்லட்டின், பிரேக்கிங், எக்ஸ்பிரஸ் செய்திகள், ரீல்ஸ், ஷார்ட்ஸ், ஸ்பெஷல் ஸ்டோரீஸ், மாவட்ட செய்திகள், செய்தி சுருக்கம், நியூஸ் ரவுண்ட்அப், சிறப்பு விவாதம், ஆன்மிகம் போன்ற தலைப்புகளில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்டேட் செய்யப்படுகிறது. தினமலர் டெஸ்க்டாப், தினமலர் ஆப், ஐ பேப்பர், ஆடியோ, தினமலர் ஐ பேப்பர், சமூக வலைதளங்களில் பல பரிமாணங்கள், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் சேனல், திரட்ஸ் என இன்றைய நவீன முன்னேற்றத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் தினமலரை பார்க்க முடிகிறது. இந்த நல்ல நாளில் பல்வேறு நாடுகளில் பரவி வாழ்ந்தாலும் எங்கள் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களை கைகூப்பி வணங்குகிறோம். உங்களின் மனங்களில் இடம் பிடிக்க தொடர்ந்து உழைப்போம் என உறுதி அளிக்கிறோம்.அடேங்கப்பா... எத்தனை வடிவங்கள்:
பல்வேறு தளங்களில் தினமலர் செய்திகளை படிக்க வேண்டுமா?தினமலர் இணையதளம்: www.dinamalar.comதினமலர் ஐ பேப்பர்: https://ipaper.dinamalar.com/கோயில்கள், ஆன்மிக செய்திகள்: https://temple.dinamalar.com/சினிமா செய்திகள்: https://cinema.dinamalar.com/விளையாட்டு செய்திகள்: https://www.dinamalar.com/sportsஎன்.ஆர்.ஐ செய்திகள்: https://www.dinamalar.com/world-news-nriகல்விமலர்: https://www.dinamalar.com/news/kalvimalarபுத்தகங்கள்: https://books.dinamalar.com/https://books.dinamalar.com/books_main.php?cat=1பேஸ்புக்: https://www.facebook.com/Dinamalardailyஎக்ஸ் (டுவிட்டர்): https://twitter.com/dinamalarwebயூடியூப்: https://www.youtube.com/dinamalardailyவாட்ஸ்ஆப் சேனல்: https://whatsapp.com/channel/0029VafOvP54NVih9kT69x3lத்ரெட்ஸ்: https://www.threads.net/dinamalardailyவீடியோ செய்திகள்: https://www.dinamalar.com/videosமாவட்ட வீடியோ செய்திகள்: https://www.youtube.com/channel/UCgSLB71exvogds0OuXBn4Ggடெலிகிராம்: https://specials.dinamalar.com/telegram/https://t.me/dinamalardailyஇன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/dinamalardaily/கூகுள் நியூஸ்: https://news.google.com/publications/CAAqBwgKMJGZjwsw8qOhAw/sections/CAQqEAgAKgcICjCRmY8LMPKjoQMw5-CtBg?ceid=IN:en&oc=3பிரீமியம் செய்திகள்: https://www.dinamalar.com/news/premium-newsஆண்ட்ராய்டு
மொபைல் ஆப் : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.dinamalarhttps://play.google.com/store/apps/details?id=com.dinamalar.dinamalarliteஐபேப்பர் மொபைல் ஆப்: https://play.google.com/store/apps/details?id=com.dinamalar.ipaperகாலண்டர் மொபைல் ஆப்: https://play.google.com/store/apps/details?id=com.daily.dinamalarஐபோன்
மொபைல் ஆப்: https://apps.apple.com/in/app/dinamalar/id438028462ஐபேப்பர் ஆப்: https://apps.apple.com/in/app/dinamalar-ipaper-plus/id1474920995?platform=iphoneகாலண்டர் ஆப்: https://apps.apple.com/in/app/dinamalar-calendar-2024/id1087267157