உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இரண்டாவது தலைநகர் கோரிக்கை வைத்துள்ளோம்

 இரண்டாவது தலைநகர் கோரிக்கை வைத்துள்ளோம்

தி.மு.க., தலைவர் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவதற்காக, மார்ச் 8ல், திருச்சியில், 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்டமான மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டுக்காக 200 ஏக்கர் இடத்தில் ஏற்பாடுகள் நடக்கின்றன. சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தாலும், தி.மு.க., சார்பில் மாநில மாநாடு நடத்தப்படும்.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம், திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொடுத்து உள்ளோம். கூட்டணி பேச்சு தொடர்பாகத்தான், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, காங்., மூத்த தலைவர் ராகுலை டில்லியில் சந்தித்து பேசினார். நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 02, 2026 14:31

திருச்சியை முதல் தலைநகராக்க எதிர்த்த திமுக இப்போது அதே திருச்சியை இரண்டாவது தலைநகராக்க திமுகவிடமே கோரிக்கை வைக்கப்போகிறதாம். கலிகாலம் சாமியோவ் கலிகாலம்


முக்கிய வீடியோ