உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவுக்குக் கூட நல்லது தான் நினைத்தோம்: இபிஎஸ் ஆதங்கம்

தவெகவுக்குக் கூட நல்லது தான் நினைத்தோம்: இபிஎஸ் ஆதங்கம்

சென்னை:இன்று இந்த இரட்டை இலையை விமர்சனம் செய்ய நினைக்கும் தவெகவுகு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைத்தோம்? அதான் நாம செய்த குற்றமா ? என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது. உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த இபிஎஸ்.எனக்கு மக்கள் படும் கஷ்டம் தெரியும், அன்றாட வாழ்க்கை தெரியும், பிரச்னைகளை தெரியும். அடுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி இபிஎஸ்க்கு எதிராக, அத்தனை சூழ்ச்சிகள்.இரட்டை இலை சின்னத்தை நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா? எம்ஜிஆர், ஜெயலலிதாவும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது என, இந்நிமிடம் வரை நானும், தொண்டர்களும் , போராடி வருகிறோம் ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்? எத்தனை சூழ்ச்சிகள்? எத்தனை துரோகங்கள் ? கட்சியை சூறையாட எத்தனை நாடகங்கள்?இன்று இந்த இரட்டை இலையை விமர்சனம் செய்ய நினைக்கும் தவெகவுக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைத்தோம்? அதான் நாம செய்த குற்றமா ? அதற்கான பிரதிபலனாதான் நம்ம எம்எல்ஏக்ககளை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா? உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசித்து இருந்தால், இப்படி செய்ய மனசு வந்துருக்குமா? இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.இந்த அறிக்கை உடன் இபிஎஸ் வெளியிட்ட வீடியோவை பார்க்கhttps://x.com/EPSTamilNadu/status/2106707921287643290


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Appan
அக் 05, 2026 08:01

கொடை வள்ளல் எம்ஜியார் ஆரம்பித்த அதிமுக இருக்க இப்போதாவது , தவேக வுக்கு ஆதரவு கொடுத்து அதிமுகவை காப்பாற்றுங்கள்.. தலைவன் என்பவன் எதாவது ஒண்ணுக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும். எம்ஜியார் வறுமை போக்க பாடுபட்டார். விஜய் ஊழலை ஒழிக்க பாடுபடுகிறார். பழனிச்சாமி எதற்கு அரசியல் பண்ணுகிறார் என்று சொல்ல முடியுமா ..? நெடுஞ்சலை துறை, பொதுப்பணி துறையில் பணம் பண்ண அரசியல் பண்ணலாமா .?.


Aarbinms
அக் 06, 2026 08:09

Eps அதிமுக சொத்துக்களை கட்டு குடும்பம் போல அபகரிக்க திட்டம் போட்டுட்டார்.


Mani . V
அக் 05, 2026 04:53

நல்லது நினைத்த நீதான், திருட்டு திமுக வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தாயா?


Kasimani Baskaran
அக் 05, 2026 04:15

தீம்க்காவுக்கும் கூட அதையே நினைத்துதான் பிரச்சினை.


jlalitha
அக் 05, 2026 02:38

நீ கருநாக பாம்பை விட மோசமான ஆளு... நல்லவன் மாதிரி நடிக்காத


raju
அக் 05, 2026 10:03

ஆம் தற்போதைய தமிழக அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் இவர் மிகவும் கீழ்த்தரமானவர்


S SRINIVASAN
அக் 05, 2026 00:18

இந்த வாட்டி டெபாசிட் கூட கிடைக்காது போல.


Bhaskaran
அக் 04, 2026 21:58

அதிமுக கரைந்து போகாமல் காக்கும் பலம் உங்களுக்கு இருக்கா என்பது விரைவில் தெரியும்.ஆனாலும் திமுக கூட சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்தது உங்களின் இமாலய தவறு அதற்குண்டான பலனை நீங்க அனுபவித்தே வீரனும்


குமார்
அக் 04, 2026 21:26

வல்லவரையா, ஊழல் பெருச்சாளிகள் திமுக அதிமுகவிற்கு முட்டு கொடுக்காதே. நீ ஒரு 200ரூ உபி எனபதை உன் பதிவு மூலம் அறிய முடிகிறது. கரூர் சம்பவம் தீயமுக செந்தில் பாலாஜியின் திட்டமிட்ட சதி என்பதை அனைவரும் அறிவர். சிபிஐ விசாரணை முடிவில் இது உறுதியாக தெரிய வரும். அதுவரை உமது பொலம்பல்ஸ் தொடரட்டும். தவெக வெற்றி நில்லாது தொடரும்.


வல்லவரையன் வந்தியதேவன்
அக் 04, 2026 20:56

2026ல் அ.தி.மு.க., தி.மு.க., தோல்வி பெற்றதற்கு முதற்காரணம் கரூர் சம்பவம் தான். இந்தியாவில் எந்த ஒரு கட்சி மீட்டிங்கிலும் நடக்காத ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்து தமிழகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் தி.மு.க., விஜயை கைது செய்தால் பிரபலமாகி விடுவார் என கருதியதா என தெரியவில்லை ஆனால் இந்த சம்பவத்திற்கு முதல் சூத்திரதாரியான விஜயை கைது செய்யாமல் விட்டது. விஜய் தி.மு.க., மேல் பழியை போடுவதற்கு வசதியாகிவிட்டது. அன்றை இந்த கோமாளி கூட்டத்தை கைது செய்திருந்தால் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போயிருப்பார்கள். இது தி.மு.க.,வின் தோல்விக்கு பிரதான காரணமாகியது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க., பா.ஜ., தான் விஜயை தப்ப விட்டது. அண்ணாமலை மத்திய குழுவை கரூருக்கு அழைத்து வந்து அந்த சம்பவத்தை திசை திருப்பியது. 1000 கேமராக்கள் இருந்தும் தி.மு.க., தான் இந்த சம்பவத்தை செய்தது என பா.ஜ., அ.தி.மு.க., தலைவர்கள் மடை மாற்றியதால் தான் இந்த நிலை, நாம் எவ்வளவு பெரிய தவறை செய்து ஒரு கோமாளிக்கூட்டத்திடம் தமிழகத்தை சிக்க வைத்துவிட்டோமே என இன்று உணர்ந்திருப்பார் பழனிசாமி.


Aarbinms
அக் 04, 2026 21:30

கரூர் சம்பவத்தை அரங்கேற்றியது திருட்டு த்ரவிஷ டோப்பா மாடல் தானே. எத்தனை நாள் தான் இந்த தமிழகத்தை ஏமாற்றும் வித்தவுட் ரயில் கும்பல்


prakash
அக் 04, 2026 20:00

அடுத்தவன் கட்சி MLA களை விலைக்கு வாங்கி திருட்டு சக்தியாக மாறியது தவெக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திருட்டு சக்தியாக மாறியது தவெக தோல்வி தோல்வி தோல்வி தவெக விற்கு தோல்வி தோல்வி அதுவே இயற்கையின் நீதி நீதி


V Venkatachalam, Chennai-87
அக் 04, 2026 19:45

எடப்பாடி அவர்களே நீங்க ஒண்ணே ஒண்ணு செய்யுங்க. பண்ணிய பாவத்துக்கு பிராயச்சித்தமா இருக்கும். அதாவது நீங்க திருட்டு தீய முகவுக்கு முட்டு குடுக்குறதை அடியோடு நிறுத்துங்கள். கட்சி கரைவதை முற்றிலும் நிறுத்த நீங்களே த வெ கவுல இணைஞ்சிடுங்க. அப்புடி பண்ணினா துணை முதல்வர் பதவி கூட உங்களுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கு. ஏன்னா அஇஅதிமுக வுல இருந்து வந்தவிங்களுக்கு சோசப்பு தன் கட்சியிலேயே பதவி குடுத்திருக்கார். உங்களோட திருட்டு அனுபவங்கள் மற்றும் எதிரி கட்சி சாதுரியங்கள் விசய்க்கு உதவக்கூடும்.


புதிய வீடியோ