உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களின் குரலாய் ஒலிப்போம்: ஜெயலலிதா நினைவு நாளில் இ.பி.எஸ்., உறுதி

மக்களின் குரலாய் ஒலிப்போம்: ஜெயலலிதா நினைவு நாளில் இ.பி.எஸ்., உறுதி

சென்னை: 'ஜெயலலிதா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.முன்னாள் முதல்வர், ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி, சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழக மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் ஜெயலலிதாவை நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். ஜெயலலிதா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அ.தி.மு.க., ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய 'அமைதி, வளம், வளர்ச்சி' பொருந்திய தமிழகத்தை கட்டமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
டிச 05, 2024 16:44

ஆத்தா இருந்தால் இன்னேரம் உன்னக்கு சங்கு தான் போவியா


N.Purushothaman
டிச 05, 2024 10:16

சில குறைகளை தவிர்த்து பார்த்தால் ஜெயலலிதா அவர்கள் மிகச்சிறந்த ஆளுமை என்பதில் மாற்று கருத்தே இல்லை ....அவரின் ஆத்மா தமிழகத்தை காக்கட்டும் .....