உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை தனித்து நின்றே தோற்கடிப்போம்: சீமான்

தி.மு.க.,வை தனித்து நின்றே தோற்கடிப்போம்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நா.த.க., தான், தமிழகத்தில் பெரிய கட்சி. சட்டசபையில் மக்களுக்காக பேசும் குரல் இல்லை. இந்த முறை உறுதியாக சட்டசபைக்குச் செல்வோம்.உலகின் முதல் மொழி தமிழ் எனக் கூறிவிட்டு, பார்லிமென்ட் கட்டடத்தில் தமிழில் கல்வெட்டு வைக்கவில்லை. தமிழை ஏற்றுக் கொள்ளாத ஈ.வெ.ரா.,வை 'தமிழர் தந்தை' என்கின்றனர்.ராஜ்யசபா தேர்தலில் கமலுக்கு சீட் கொடுத்தது போல், வைகோவுக்கும் கொடுத்திருக்க வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்குமான கருத்து வேறுபாடு சரியாகி விடும்.த.வெ.க., தமிழக அரசியலில் நுழைந்திருப்பதால், எங்களுக்கான ஓட்டு வங்கி குறையாது. தி.மு.க.,வை எதிர்க்க யாருக்கும் சத்தி இல்லை என்பது போல் சொல்கின்றனர். ஆனால், நா.த.க., தனித்து நின்றே தி.மு.க.,வை தோற்கடிக்கும். அதனால், எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம். கொள்கை ரீதியாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது கடினம். அப்படியொரு கூட்டணி எங்களுக்கு ஒரு நாளும் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

chinnamanibalan
மே 31, 2025 12:57

நா.த.க தனித்து நிற்பது, திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும் என்பது தெரிந்திருந்தும், சீமானின் தனித்து நிற்கும் முடிவு, விழலுக்கு இறைத்த நீர் என்றே அர்த்தம். ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி சகிதமாக தேர்தல் களத்தில் இறங்கும் திமுக வை வீழ்த்த வேண்டும் எனில், திமுக வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் ஒன்றுபட வேண்டும். இல்லையேல் எதிர்க் கட்சிகள் மேலும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படும்.


Varuvel Devadas
மே 31, 2025 11:13

This mentally retarded fwllow should be punished mercilessly. He cheats the young people by speaking stupidly always, collects money from different groups, and lives lavishly. In my view, whoever follows him finally ends up suicidal. Otherwsie becomes mentally retarded like him.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 31, 2025 11:04

இவருக்கும் பைத்தியம் தெளியாது, இவரை நம்பி ஓட்டு போடும் மக்களுக்கும் அறிவு வராது.....தமிழ், தமிழர் என்ற ஒற்றை வார்த்தையை மூலதனமாக வைத்து கட்சியை நடத்தும் இவருக்கு திமுக மீது அதிருப்தியானவர்கள் தங்களை அறிவாளிகள் என்று எண்ணி இவருக்கு ஓட்டு போடுவது அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது தாங்கள் செலுத்திய வாக்கு திமுகவை ஜெயிக்க வைக்கும் என்று..


pmsamy
மே 31, 2025 10:15

இப்பவும் ஒன்னு கெட்டுப் போடல மறுபடியும் சினிமாவுக்கு போய் பொழச்சிக்கலாம்


vbs manian
மே 31, 2025 09:45

காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி.


Raja
மே 31, 2025 08:06

இவருக்கு வைத்தியம் கிடையாதா? எவ்வளவு அடிபட்டாலும் அறிவு வர மாட்டேங்குது.


Oviya Vijay
மே 31, 2025 07:56

சென்ற முறை வாங்கிய வாக்கு வங்கி கூட இம்முறை தேறாது. அதற்கு முக்கிய காரணம் இதுவரை இக்கட்சிக்கு சென்ற ஓட்டுக்களில் பெரும்பாலான ஓட்டுக்கள் இம்முறை தவெக கட்சிக்கு செல்லும்... இதற்கு உதாரணம் தேமுதிக அதன் முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு வங்கியும் அதன் தற்போதைய வாக்கு வங்கியும்... இனி நாதக ஒரு மூழ்கும் கப்பல்.


vivek
மே 31, 2025 08:36

பாவமா இருக்கு ஓவியரே.....உம்மை பார்த்தால்


VENKATASUBRAMANIAN
மே 31, 2025 07:44

இவரின் காமெடிக்கு அளவே இல்லை


Kjp
மே 31, 2025 07:28

கிழிச்சீங்க.திமுகவுக்கு சாதகமா செயல் படுகிறது போல் இருக்கிறது உங்கள் பேச்சுக்கள்.


Kasimani Baskaran
மே 31, 2025 07:04

இந்தியாவுக்கு எதிரான கருத்தை தொடர்ந்து தெரிவித்து வரும் சீமான் ஒரு நாட்டுக்கு தேவையில்லாத ஆணி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை