உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்ப் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வக்ப் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5tdkp2fq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பார்லிமென்ட் லோக்சபாவில் வக்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது.வக்ப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக, 232 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். இந்த சட்ட திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், எதிர்த்து ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 232 என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல.

திரும்ப பெறணும்

எண்ணிக்கை கூடுதலாக கிடைத்து இருக்கலாம். ஆனால் இந்த சட்டத்திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாக திரும்ப பெற வேண்டியது நம் கருத்து. அதை தான் நாம் இங்கு தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி இருந்தோம். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால், அதிகாலை 2 மணியளவில் வக்ப் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்.

வழக்கு தொடருவோம்

இதனை உணர்த்து வகையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளோம். சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழகம் போராடும், வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

கருப்பு பேட்ஜ்

சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். லோக்சபாவில் வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 121 )

Ramesh Sargam
மே 01, 2025 20:30

இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்குகளை வாதாடும் பல வழக்கறிஞர்களுக்கு சம்பளமாக எவ்வளவு பணம் செலவாகும். அவை அனைத்தும் தமிழக மக்களின் வரிப்பணமல்லவா? மக்களின் வரிப்பணம் இப்படி விரயம் செய்யப்படலாமா? மக்களின் வரிப்பணத்தை துஷ்ப்ரயோகம் செய்வது சரியல்ல.


veeramani
ஏப் 26, 2025 09:50

காஷ்மீரில் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு பின்னும் வ்க்ப் சட்டத்திற்கு பிரச்சினை தேவையா... சிந்திப்பீர்கள் இந்திய ராசியில் பிரமுகக்கர் களே


kumarkv
ஏப் 20, 2025 15:28

You dont waste Hindu tax payers money to defend Muslim tyrants illegal occupation of Hindu land. You use DMK party fund.


Ramesh Sargam
ஏப் 14, 2025 21:00

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பூரண மதுவிலக்கு என்று சொன்னாங்க. பூரண மதுவிலக்கு வந்ததா? நீட் தேர்வு முறையை ஒழிப்போம் என்றார்கள். ஒழித்தார்களா? இப்பொழுது வக்ப் சட்டத்துக்கு எதிராக வழக்காம். இதுவும் காற்றில் கரைந்துபோகும் .


Venkateswaran Rajaram
ஏப் 10, 2025 18:19

இந்த தற்குறி தத்திகளுக்கு எதற்கு அந்த கருப்பு துணி அணிகிறோம் என்றே தெரியாது குத்த சொன்னால் குத்திக் கொள்வார்கள் எல்லாம் தற்குறி தத்திகள் சுய அறிவு இல்லாதவர்கள் கொத்தடிமைகள்.. ஒரு குடும்பத்தின் கொத்தடிமைகள்


sankar
ஏப் 10, 2025 09:33

எந்த ஜில்லாவுக்கு வேணா பொய்க்கோ


கோமாளி
ஏப் 09, 2025 08:26

நீட் தேர்வு கதைதான்.. ஒன்னும் செய்ய மாட்டார்கள்


kumarkv
ஏப் 08, 2025 18:02

அப்ப வகப்புக் சொத்து எப்படி வந்தது. இப்போ ஆட்சியில கொலை கொள்ளை அடிக்கிற மாதிரி அப்போ வந்தேறி மிருகங்கள் அடிச்ச கற்பழிப்பு, பலாத்காரம் கொள்ளை.


Ramalingam Shanmugam
ஏப் 07, 2025 18:00

உங்கள் சகோ என்ன செய்யுது முதலில் அமல் படுத்துது மூஞ்சியில் கறியை பூசி விட்டது SOOO


Naga Subramanian
ஏப் 07, 2025 05:54

அப்படியே நீட்டிக்கும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரட்டும். உச்ச நீதிமன்றத்தில் அடிபட்டு வரவேண்டும். அவியல் செய்யும் இந்த உத்தம வில்லன்கள் அவிந்து போகவேண்டும்.


முக்கிய வீடியோ